Rasi Palan Today 9th January 2019 in Tamil: தீமைகளை அழித்து, நல்லவைகள் என்றும் நிலைநாட்டப்பட அனைவரின் மனதிலும் உறுதி வேண்டும். அந்த உறுதி இறுதியாக இருக்க வேண்டும். எப்பேற்பட்ட சூழலிலும் நெறிதவறாது நடத்தல் என்பது மனித குலத்தில் இருக்க வேண்டிய அடிப்படை தகுதி. தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
கடவுள் வழிபாட்டுடன் இன்றைய நாளை துவக்குவது பயன் அளிக்கும். அளவுக்கு அதிகமான நம்பிக்கை, எதிராக அமையலாம். இரும்பு தொழில் செய்பவர்களுக்கு இன்று அனுகூலமான நாள். தேவையான உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
நஷ்டத்தில் இருந்து ஓரளவிற்கு மீண்டு வருவீர்கள். இன்று வெற்றி காண்பதற்கு சிறந்த நாள். உங்களிடம் விரைந்து செயலாற்றும் உறுதியும் தைரியமும் காணப்படும். உங்களின் சரியான திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் உங்களிடம் காணப்படும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
இன்று நீங்கள் பிறருடன் பழகும் போது கவனமாகப் பழக வேண்டும். சிறிதளவு பரிச்சயமானவர்களிடம் இன்று தவறான புரிந்துணர்வு ஏற்படும். தேவையற்ற விளைவுகளை தவிர்க்க நீங்கள் உங்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
உங்கள் வாழ்க்கையில் எது உங்களுக்கு உண்மையில் முக்கியம் என்பதை உணரும் நாள் இது. நீங்கள் பொதுவாக புறக்கணித்து வந்த விஷயங்கள் எல்லாம் இப்போது வெளிச்சத்திற்கு வரும். இதன்மூலம், உங்களின் டென்ஷன்கள் குறையும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
உங்களின் எதிர்கால கிரக அமைப்புகள் நிலைத்தன்மை இன்றி காணப்பட்டாலும், இன்றைய அமைப்பு சற்று ஆடம்பரமாகவே இருக்கும். பணியிடத்தில் திருப்திகரமான நிலை இருக்கும். நீங்கள் தரமான வகையில் பணிகளை முடித்துத் தருவீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
உங்கள் மதிப்பிற்கு ஏற்ற ஊதியம் தர வேண்டும் என எண்ணுவீர்கள். இன்று நீங்கள் உற்சாகமான ஆற்றலுடன் காணப்படுவீர்கள். நீங்கள் குறைந்த எதிர்பார்ப்புடன் கடினமாக உழைப்பீர்கள். இதனால் நற்பலன்கள் ஏற்படும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
கருத்து வேறுபாடு காரணமாக தவறான புரிந்துணர்வு காணப்படும். உங்கள் துணையின் கருத்துக்களை புரிந்து கொண்டு இருவரும் பரஸ்பரம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
தனிப்பட்ட உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கிரக நிலைகளின் செயல்பாடுகளால் உங்களது சில உறவுகளின் அணுகுமுறைகளில் மாற்றங்கள் ஏற்படலாம். அடுத்தவர்கள் உங்களுக்கு பாடம் எடுக்க வேண்டியது நிறைய இருக்கிறது.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
இன்றைய நாள் உங்களுக்கு மிக எளிதாக அமையும். வழக்கத்தைவிட அது மிருதுவானதாக இருக்கும். மற்றவர்களின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளையும், வாழ்த்துகளையும் நீங்கள் எந்த அளவிற்கு எடுத்துக் கொள்கிறீர்களோ அந்தளவிற்கு நீங்கள் முதிர்ச்சியடைவீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள் இது. உங்கள் பணியிடங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வினையாற்றுவதற்கு முன்பு யோசித்து செயல்படுங்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
மற்றவர்களை நம்பாமல் உங்களை நம்ப வேண்டிய நேரமிது. உங்கள் தொழில் பார்ட்னர்கள் கூட உங்களுக்கு உதவுவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. உங்கள் கைகளே உங்களுக்கு உதவி.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
இன்று நீங்கள் பதட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வளர்ச்சி குறித்த உங்கள் முயற்சிகளில் முன்னேறிச் செல்லுங்கள். உங்கள் மனதில் நம்பிக்கையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.