Rasi Palan 9th July: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 9th July Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

By: Updated: July 9, 2019, 12:30:44 AM

Today Rasi Palan, 9th July 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 9th July 2019: இன்றைய ராசி பலன், ஜூலை , 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

வெற்றியை நோக்கி உழைத்துக் கொண்டே இருங்கள். சிறு சிறு தோல்விகளுக்கு அஞ்ச வேண்டாம். மனக்கசப்புகளை மறந்து வேலை செய்யுங்கள். பொழுதுபோக்குகளை ஒதுக்கி வையுங்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

வாழ்க்கை பொன் போன்றது. கடமை கண் போன்றது. இது உங்களுக்கு மிகச் சரியாக பொருந்தும். வேளையில் சுதாரிப்பாக இருக்கும் உங்களுக்கு வெற்றிகள் தேடி வரும். நிலையான பணியை நோக்கி நகர்வீர்கள். காகிதமாய் பறந்த நிலைத்தன்மை இரும்பாய் உருமாறும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

நேரத்தை வீணாக்காமல் ஆக்கப்பூர்வமான செயலில் ஈடுபட முயற்சி செய்யுங்கள். சிந்தனையை அலைபாய விட வேண்டாம். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நண்பர்களின் கருத்துகளை பரிசீலனை செய்வது சிறந்தது. தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

வேண்டாம் என்றாலும், முன்னேற்றம் தேடி வரும். அதற்காக அதீத நம்பிக்கை இருக்கக் கூடாது. உங்கள் வேலையை நேர்மையுடன் செய்யுங்கள். வெற்றி வாசல் தேடி வரும். கிரகங்கள் உங்கள் பக்கமே நிற்கின்றன.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

சேமிப்பு மிக முக்கியம். நாளைய நலனுக்காக வீண் செலவு செய்யாமல் சேமித்து வையுங்கள். ஆடம்பர நிகழ்வுகளை தவிர்க்கவும். வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. உண்மையுடன் செயல்படுங்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

வெளியே செல்லும் போது கவனத்துடன் செயல்படுங்கள். மருத்துவ செலவுகள் அதிகரிக்க நேரிடும். மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டாலும், சுயமாக முடிவு எடுத்து செயல்படுங்கள். ஏனெனில், உங்கள் நலனில் உங்களை விட யாரும் அக்கறையாக இருக்க முடியாது.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

தேவையில்லாத சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். தவறான நண்பர்களின் சேர்க்கையை துண்டியுங்கள். குடும்ப உறவில் கவனம் வேண்டும். கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டாம். யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

இன்று பணிகள் இறுக்கமாக காணப்படுவதால் சிறப்புடன் பணியாற்ற உகந்த நாள் அல்ல. சமயோஜித புத்தியுடன் பணியாற்றினால் வெற்றி கிடைக்கும். உங்களிடம் காணப்படும் மன அழுத்தத்தை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இதை தவிர்ப்பது உங்களுக்கு நல்லது. நல்லவற்றையே நினையுங்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

நேர்மறையான எண்ணங்கள் ஏற்படும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை மும்மரமாகச் செய்வீர்கள். பணிச்சுமை அதிகமாகக் காணப்படும். நீங்கள் சாமார்த்தியமாக அவற்றை கையாள வேண்டும்

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

தேவையற்ற கவலைகள் காரணமாக சில சௌகரியங்களை இழப்பீர்கள். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். பணிச்சுமை ஏற்படும். உங்கள் பணிகளை நன்றாக திட்டமிட்டு நேராநேரத்தில் அவற்றை முடிக்க வேண்டும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

உங்கள் கருத்துக்களை உங்கள் துணையுடன் பகிர்ந்துகொள்வதற்கு சிறப்பான நாள். உங்கள் துணையுடன் பயனுள்ள திட்டங்கள் பற்றி விவாதிப்பீர்கள். சில தடைகளைக் கடந்த பின் உங்களுக்கு பணம் கிடைக்கும். வெளி நாட்டிலிருந்து நீங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் பணம் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

இன்னல்களை கண்டு அஞ்ச தேவையில்லை. செயல்களில் ஆதிக்கம் காட்டுங்கள். வெற்றி தேடி வரும். இறுக்கமான மனநிலையை களைய உண்மையுடன் இருங்கள். கனவுலகத்தில் மிதக்க வேண்டாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Horoscope News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Rasi palan 9th july

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X