Rasi Palan 9th May 2020: இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan May 9th: இன்றைய ராசிபலன்

By: Updated: May 9, 2020, 12:30:26 AM

Today Rasi Palan, 9th May 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 9th May 2020: இன்றைய ராசி பலன், மே 09, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

உங்களின் அதீத திறமையை வெளிக்காட்ட வேண்டிய நேரம் இது. நீண்ட நாள் வெற்றிக்காக உழைக்க வேண்டும். அதுவே உங்களை நிம்மதியாக வைத்திருக்கும். உடன் இருப்பவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

சமீப காலங்களில் உங்களுக்கு இறக்கங்கள் இருந்தாலும், இன்று முன்னேற்றத்தை நோக்கி பயணம் செய்வீர்கள். உங்கள் கனவுகள் நிறைவேறத் துவங்கும். பாஸிட்டிவான மன நிலையில் இருப்பீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

சில முக்கிய பலன்களுக்காக வேறு சில நல்ல நேரங்களை இழக்க நேரிடும். முக்கியமான முடிவுகளில் நீங்கள் கன்வின்ஸ் ஆகாத வரை, அதை வெளிப்படுத்தாதீர்கள். திட்டங்களை நேர்மையாக வகுத்துக் கொள்ளுங்கள்,

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

உங்களுக்கு பிடிக்காத எந்தவொரு விஷயங்களையும் நீங்கள் செய்யுமாறு யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அப்படி கட்டாயப்படுத்தினாலும் அதற்கு நீங்கள் உடன்பட மாட்டீர்கள். இருப்பினும், சில தருணங்களில் மற்றவர்கள் ஆலோசனை மற்றவர்களின் ஆலோசனைகளை உள்வாங்கிக் கொள்வது நன்று.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

உங்கள் இலக்குகளை நீங்களே மேலும் முன்னோக்கி மாற்றி அமைப்பீர்கள். உங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளை பணியிடத்தில் கொண்டு வராதீர்கள். உங்களுக்காக உதவி செய்ய, உங்களைச் சுற்றி மற்ற நண்பர்களும் இருப்பார்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

மற்றவர்கள் முன்பு உங்கள் வெற்றியை நிலை நாட்டுவீர்கள். எதிரி யார் என்பதை விட, செய்ய வேண்டிய செயல் என்ன என்பதில் கவனமாக இருப்பீர்கள். சமூகம் சார்ந்தோ, அல்லது ரொமாண்டிக்காகவோ, இன்று உங்களுடைய நாள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் பொழுது, அதனை கெட்டியாக பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும். மகிழ்ச்சியான மாற்றங்கள் உங்களுக்கு ஏற்படும். உங்களை நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

உங்கள் காமன் சென்ஸ் எந்தளவிற்கு சிறப்பாக வெளிப்படுகிறதோ, அந்தளவிற்கு பேரும், பெருமையும் உங்களை வந்துச் சேரும். இல்லையெனில், தவறான முடிவெடுத்து விட்டோமே என்று, இந்த வாரம் முழுவதும் புலம்பிக் கொண்டிருப்பீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

உங்கள் வழியில் பயணித்தால் வெற்றி உறுதி. உங்கள் ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வையுங்கள். உங்கள் தன்னம்பிக்கையே உங்கள் பலம். அதுவே உங்களது வெற்றி.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

குடும்பத்தை விட்டு சில காலம் பிரிந்திருக்க எண்ணுவீர்கள். ஆனால், அப்பொழுதும் அவர்களிடம் இருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். ஒற்றுமையாக சில விஷயங்கள் உங்களுக்கு இன்று நடக்கலாம்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

உங்களின் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளை விரிவாக்கம் செய்ய வேண்டிய நாள் இது. அது உங்கள் வாழ்வை மேன்மையாக்கும். தீயவை உங்கள் அருகில் கூட வராது.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

உங்கள் ஆசீர்வாதங்களை எண்ணுங்கள். உங்களது சில முயற்சிகள் தோல்வியில் முடியலாம். கடினமாக உழைத்தும் தோற்கும் போது தான், இந்த வாழ்க்கையே இப்படித் தான் என்ற சலிப்புத் தோன்றும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Horoscope at Indian Express Tamil. You can also catch all the latest update on Rasi Palan by following us on Twitter and Facebook

Web Title:Rasi palan 9th may 2020 rasi palan today

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X