Rasi Palan Today 9th November 2018 in Tamil : வாழ்வில் நமது ஒவ்வொரு செயலுக்கும் பின் விளைவுகள் உண்டு. நல்ல செயல்களுக்கு நல்ல விளைவுகள், தீய செயல்களுக்கு தீய விளைவுகள். இதுவே சத்தியம்.
Rasi Palan 9th November 2018 : இன்றைய ராசி பலன், 9 நவம்பர் 2018
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
நிகழ் காலம் மிகவும் சவாலானதாக இருக்கும். அதுவே, சில வாய்ப்புகளை உங்களுக்கு அளிக்கும். மற்றவர்களின் கையில் உங்கள் வாழ்க்கையை ஒப்படைக்க வேண்டும். அதாவது, சிறு சிறு விஷயங்களில் கூட, மற்றவர்களின் முடிவுகளை நீங்கள் ஆதரிக்க வேண்டாம்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
காத்திருக்கும் பணிகளை தள்ளிப்போடாமல் உடனே செய்ய முயற்சி செய்யுங்கள். இது உங்களது நிதிநிலைமையை சரி செய்ய உதவும். இல்லையெனில், வீண் சங்கடங்கள் வந்து சேரும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
தேவை இல்லாத சிந்தனைகளை மூளைக்கு கொண்டு வராதீர்கள். நீங்கள் நீங்களாக இருந்தால், சில தடைகள் நீங்கலாக மகிழ்ச்சியாக இருக்கலாம்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
உங்களது நேர்மையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள். மற்றவர்கள் பல ஐடியாக்களை கொடுத்து உங்களை குழப்ப நேரிடும். கவனமாக இருக்க வேண்டிய நாள். உங்கள் உறவுகளை பாதுகாப்பாக உணர வையுங்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
சரியான விஷயத்தை நோக்கி முடிவெடுக்க சில சமயம் நீங்கள் கடினமான தருணங்களை சந்திக்க நேரிடும். இன்று சில சவால்களை நீங்கள் எதிர்கொள்வீர்கள். ஆனால், முடிவில் அது உங்களுக்கு சாதகமாக அமையும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
பெரியோர்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்கள். அது உங்களை மேன்மையடைய வைக்கும். சுமங்கலி பூஜை நடத்தினால் திருமணமான பெண்களுக்கு பயன் அளிக்கும். வெளியாட்களை நம்ப வேண்டாம்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
மகிழ்ச்சியான நாள். உறவினர்களின் ஆதரவு கிட்டும். பணியிடங்களில் நல்ல பெயர் கிடைக்கும். கணவன் - மனைவி இடையேயான அன்யோன்யம் அதிகரிக்கும். மாணவர்களின் கல்வித் தரம் மேம்படும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
வண்டி, வாகனங்களில் செல்கையில் கவனமுடன் இருத்தல் அவசியம். கிரகங்களின் பார்வை பலவீனமாக இருப்பதால், கடவுள் வழிபாடு நடத்திவிட்டு செயலைத் தொடங்குங்கள். வீரியம் குறையும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
இன்று உங்களிடம் எதிர்மறை எண்ணங்கள் நிறைந்து காணப்படும். இதனை தவிர்த்தல் அவசியம். உற்சாகமுடன் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். பண வரவு சுமாராக இருக்கும். பணத்தை எவ்வாறு கையாள்வது என்று புரிந்து கொண்டு சாதுர்யமாக செலவு செய்ய வேண்டும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
உங்கள் பணியில் மகிழ்ச்சியும் திருப்தியும் காணப்படும். உங்கள் பணியில் உற்சாகத்தைக் காண்பீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாகவும் ஸ்திரமாகவும் இருக்கும். என்றாலும் பதட்டத்தை தவிர்க்க வேண்டும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)