Advertisment

Rasi Palan 9th September 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 9th September Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 13th September 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan 13th September 2019: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 9th September 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 9th September2019: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 9, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

அதிகமாக உணர்ச்சிவசப்படுவீர்கள். திடமான மனதுடன் இருப்பீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்துகொள்வீர்கள். மாற்றுக்கருத்து உடையவர்களிடமிருந்து விலகிச்செல்வீர்கள். பிரியமானவர்களுடன் பொழுதை கழிக்க விரும்புவீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

கிரகங்களின் சாதகமான பார்வையால் பாதுகாப்பாக உணர்வீர்கள். நிதி தொடர்பான விவகாரங்களில் முன்னெச்சரிக்கை அவசியம். மன உறுதி மற்றும் வெளிப்படைத்தன்மையால் வெற்றிநடை போடுவீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

முன்னேற்றமான நாள். சொல்வதை செய்துகாட்டுவீர்கள். எந்த விசயத்திலும் சமரசத்தை ஏற்கமாட்டீர்கள். மாற்றுக்கருத்து உடையவர்களிடமிருந்து விலகுவீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

பிடித்த பிடியில் உறுதியாக இருப்பீர்கள். அது தவறு என்று மற்றவர்கள் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். ஜாதக பரிபலன்களில் நம்பிக்கை ஏற்படும். எதையும் ஒருநாளில் மாற்றிவிடமுடியாது என்பதில் உறுதியாக இருப்பீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

எதிர்பார்ப்புகளை தவிர்ப்பது நலம். வழக்கமான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தாலே, மனம் சஞ்சலம் அடைவதை தவிர்க்கலாம். பிற்பகல் வேளையில், எதிர்கால வாழ்க்கை குறித்து சிந்திப்பீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும் நாள். உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உறவினர்களிடம் நிதானப்போக்கு கடைபிடிப்பது நல்லது. அகலக்கால் வைக்க வேண்டாம். புதிய செயல்களில் தடைகள் ஏற்படும் என்பதால், புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

மனசஞ்சலங்களிலிருந்து விடுபடுவீர்கள். தொழில்நுட்ப விவகராங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மற்றவர்களிடமிருந்து வேறுபடுவீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

எதிர்கருத்து கொண்ட மனிதர்களிடம் இருந்து விலகிச்செல்வீர்கள். நம் வாழ்க்கை நம் கையில் தான் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

தேவையற்ற விசயங்களில் அதிக நேரம் செலவழிப்பதை தவிர்க்க வேண்டும். பழைய விசயங்களை அசைபோடுவதால் துக்கமே மிஞ்சும் என்பதை உணர்வீர்கள். நடைமுறை சிந்தனைகள் மேலோங்கும். கடந்த கால அனுபவங்களால், வழக்கமான நடைமுறைகளில் மாற்றம் செய்வீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

பணிச்சுமையால் அல்லல்படுவீர்கள். நிதிவிவகாரங்களில் முன்னேற்றமான போக்கு நிலவும். கூட்டுமுயற்சி சிறந்த பலனை தரும் என்பதால், தொழில்முறை நண்பர்களிடையே இணக்கமான சூழல் நிலவும்

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

எதிர்கால வாழ்க்கைக்காக பல முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். எதிலும் அவசரப்போக்கு இல்லாமல் நிதானம் கடைபிடிப்பது நலம் மற்றும் அதுவே பலம் தொழில் விவகாரங்களில் இனிய சூழல் நிலவும் புதிய சமூக தொடர்பால், எடுத்த செயல்களில் வெற்றி காண்பீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

குறித்த நேரத்தில் பணிகளை முடித்துவிட்டு சுகம் காண்பீர்கள். உடன் பணிபுரிபவர்கள் மற்றும் தங்களை சார்ந்துள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாளைய பிரச்னைக்கு தீர்வுகாண முடியாமல் தத்தளித்த நிலையில், அதற்கு விடிவு கிடைக்கும்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment