Today Rasi Palan, 9th September 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 9th September 2020: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 9, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
மற்றவர்களின் அறிவுரைகளை ஏற்பீர்கள். ஆதரவுக்கரம் நீட்டுவீர்கள். பிரியமானவர்களின் அன்புக்கு ஏங்குவீர்கள். எதற்கும் தயாராக இருப்பீர்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
இலாபகரமான நாள். மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் வாய்ப்பு தேடிவரும். எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு செயல்களை செய்து முடிப்பீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
புதிய நபர்களால் ஆதாயம் அடைவீர்கள். தடைகளை ஏற்பீர்கள். இலக்குகளை நோக்கி நடைபோடுவீர்கள். புதிய முயற்சிகளில் பங்கேற்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
உங்களின் கருத்துகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள். முக்கிய ஒப்பந்தங்களை அஜாக்கிரதையால் தவிர்க்க நேரிடலாம்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
தொலைநோக்கு சிந்தனை அதிகரிக்கும். தேவைகளை நிறைவு செய்வீர்கள். இழுபறியாக இருந்த விசயங்களில் தீர்வு கிடைக்கும். மற்றவர்களை மகிழ்விப்பீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
வழக்கமான பணிகளில் மாற்றங்களை மேற்கொள்வீர்கள். தவறான பாதையிலிருந்து விலகிச்செல்வீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உண்மை எது பொய் எது என உணர்வீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
பிரியமானவர்களுக்காக அனைத்தையும் பொறுத்துக்கொள்வீர்கள். உதவிக்கரம் நீட்டுவீர்கள். பணிகளில் அர்ப்பணிப்புத்தன்மை நிறைந்திருக்கும். எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிடுவீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதையும் ஒரு கைபார்ப்போம் என்ற எண்ணம் ஏற்படும். புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
மனவலிமை அதிகரிக்கும். சாகசங்களில் ஈடுபடுவீர்கள். புதிய பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மற்றவர்களின் அறிவுரைகளை ஏற்று இழப்பை தவிர்ப்பீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
வார்த்தைகளில் நிதானம் அவசியம். உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புண்டு. நண்பர்கள் வட்டம் விரிவடையும். ஆதாயம் உண்டு.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
புதிய ஒப்பந்தங்களில் ஈடுபடுவீர்கள். புதிய நிகழ்வுகளுக்கு தலைமை ஏற்பீர்கள்.புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதானம் தேவைப்படும் நாள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
செலவு அதிகரிக்கும் நாள். பிரியமானவர்கள் விரும்பியதை வாங்கிக்கொடுப்பீர்கள். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.