Today Rasi Palan, 9th August 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 9th August 2019: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 9, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
வெற்றி - தோல்வியை சமமாக பாவிக்க கற்றுக்கொள்வதன் மூலம் மனசஞ்சலத்தை தவிர்க்கலாம். இயல்பாக இருக்க பாருங்கள். மற்றவர்களுடன் கருத்துவேறுபாடுகளை தவிருங்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
முக்கியமான மாற்றங்கள் நிகழ வேண்டுமென்றால், அதில் நமது பங்களிப்பு அவசியம் என்பதை உணர்வீர்கள். நினைத்ததை முடிக்க அதிக பிரயத்தனம் செய்யவேண்டியிருக்கும்..
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
நம்பியவர்களுக்கு ஏமாற்றத்தை பரிசாக அளிப்பீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்றமாட்டீர்கள். உங்கள் சந்தேகங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
தோல்வி கண்டாலும் மனம் கோணாது அடுத்தடுத்த முயற்சிகளில் தொடர்ந்து இறங்கிக்கொண்டே இருப்பீர்கள். தோல்வியை அவமானமாக எண்ணுவீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
நண்பர்களின் ஆதரவினால் கடினமான செயலையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். கடந்துபோன ஞாபகங்கள். எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை தான் பரிசளிக்கும் என்ற பாடத்தை கற்றுத்தந்திருக்கும். இதை வாழ்நாளில் ஒருநாளும் மறக்கமாட்டீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
தொலைவில் உள்ள பிரியமானவர்களின் அன்புக்காக ஏங்குவீர்கள். விருந்து மற்றும் விசேஷங்களின் மூலம் பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
நிதி விவகாரங்களின் உங்களின் மெத்தனப்போக்கு, பங்குதாரர்களிடையே கருத்து வேறுபாட்டை உருவாக்கும். கவனம். சிறிய முயற்சியும் உங்களுக்கு அதிக பலனை தரும்.
.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
நிதி விவகாரங்களின் அதிக கவனம் தேவை. மாற்றுவழியில் போக திட்டமிடுவீர்கள். எதிலும் நிதானத்துடன் கவனம் அவசியம்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். அந்த முடிவுகள் உங்களது எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கவல்லது என்பதால் அதிக கவனம் தேவை. உங்களது பேச்சு, பிறரை பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ளுதல் நலம்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
கடந்தகால இன்னல்களிலிருந்து விடுபடுவீர்கள். மற்றவர்களின் ஆலோசனை தக்கநேரத்தில் கைகொடுக்கும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
மற்றவர்களை தேவையில்லாமல் அணுகமாட்டீர்கள். எதை விதைத்தாயோ அதைத்தான் அறுவடை செய்யவேண்டும் என்பதை உணர்வீர்கள். உங்களுக்கான காலம் வரும்வரை காத்திப்பீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
மனவலிமை அதிகரிக்கும் நாள்.மற்றவர்களால் முடியாத செயலை அனயாசமாக செய்துமுடிப்பீர்கள். தோல்விகளிலிருந்து கற்ற பாடத்தின் மூலம், வெற்றியை தன்வசமாக்குவீர்கள்..