Rasi Palan 19th November 2020: இன்றைய ராசிபலன்

DAILY HOROSCOPE 19th november : உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Today rasi palan, rasi palan 2nd january, இன்றைய ராசிபலன், ஜனவரி 2 , இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், ராசி பலன்கள்

Rasi Palan 19th November 2020: இன்றைய ராசிபலன்: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக்கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 19th November 2020: இன்றைய ராசி பலன், நவம்பர் 19, 2020:

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) : 

ஜோதிடர்களுக்கு இரண்டு வகையான காலம் இருக்கிறது. காலத்திற்கு கிரேக்க சொற்களில் பெயரிடப்பட்டுள்ளது. முதலில் Chronos or clock time என்ற முறையில் நாம் காலத்தை அளவிடுகிறோம். அடுத்து காலத்திற்கு Kairos or qualitative time என்ற பயன்பாடு உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட நாளின் தன்மையை நமக்கு சொல்கிறது. அந்த நாள் நல்லதா என்பதை திருமணத்திற்காகவோ அல்லது வேலைக்காகவோ சொல்கிறது. நாம் ஜாதகக் கணக்குகளை எழுதும்போது கைரோஸைப் பயன்படுத்துகிறோம்.

 

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20):  மற்றவர்களின் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ள விரும்புகின்றீர்கள்! அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.    உடன்பிறந்தவர்களிடம் அதிக அன்பை வெளிப்படுத்துங்கள். தற்போது, காணப்படும்  நிச்சயமற்ற தன்மை விரைவில் சரியாகும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : திறனை அதிகரித்து கொள்ளுங்கள். விடாமுயற்சிக்கான மாபெரும் வெற்றியை பெறுவீர்கள் . உறுதிப்பாட்டுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் நேரம் இது. கிரக அமைப்புகள் சாதகமான சூழலை உருவாக்கித் தரும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21): உங்களின் கொள்கைகளை மக்கள் பரிசோதிப்பதை  கண்டு நீங்கள் மனம் தளர் வேண்டாம். நீண்டகால மூலோபாயத் திட்டத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். அதில், வெற்றியும் அடைவீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) : நிதி நிலைத்தன்மை மற்றும் இதர தொடர்புடைய விஷயங்கள் குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரம் இது. பணம் என்னடா பணம் பணம் குணம் தானடா நிரந்தரம் !! என்ற பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்திருந்தாலும், எதார்த்த வாழ்க்கை நடைமுறைகளையும் சற்று  சிந்தியுங்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) : அனுபவங்கள் மற்றும் கருத்துக்களை பிறருடன் பகிர்ந்து கொள்வீர்கள். சிறு தொலைவு பயணங்களை மேற்கொள்வீர்கள். விருந்தினர் வருகையால் உற்சாகம் அதிகரிக்கும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :  பயணங்கள் மற்றும் வெளிவட்டார தொடர்புகளினால் புதிய உறவுகள் கிடைக்கும்.எதிர்கால வாழ்க்கைக்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : சந்திரனின் சாதகமான பார்வை இருப்பதால், நீங்கள்  உலகளவில் புகழ் பெற வாய்ப்புள்ளது. ஆட்டத்தின்  போக்கையும், விதிகளையும் அறிந்து விளையாட வேண்டும். நவீன காலத்தின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு பாரம்பரிய அறிவு முக்கியம் என்பதனையும் உணர வேண்டும் .

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) : உங்கள் எதிர்கால வாழ்கையை மாற்றியமைக்கக் கூடிய  முடிவு எடுக்க வேண்டிய கட்டயாத்தில் இருந்தால், அத்தகைய முடிவை தள்ளிப்போடவும் வேண்டாம், அவசரப்படுத்தவும் வேண்டாம்.  உங்களுக்கு இது மிகவும் நல்ல நேரம். அடுத்த ஆறு மாதங்களில் நன்மை வந்து சேரும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :  முடிவெடுக்கும் முறையை விரைவுபடுத்துங்கள். வெவ்வேறு மாற்றுகளின் நிதித் தாக்கங்களை அடிப்படையில் முடிவை எடுக்க கற்றுக் கொள்ளுங்கள். சரியான நேரத்தில்  எடுக்கப்படும் முடிவுகள் வெற்றிபெற உதவும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20):  புதுமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நினைத்தது நடக்கும் என்பதால் மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். பணியாளர்களுக்கு நிறுவனத்தில் நற்பெயர் கிடைக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) : உங்களிடம் பல திறமைகள் இருந்தாலும், சரியான முறையில் வெளிப்படுத்தத் தெரியாது. சரியான தூண்டுதல் இருந்தால் மட்டுமே, உங்கள் திறமைகளை வெளிப்படுத்த முடியும். புதிய நிகழ்வுகளுக்கு தலைமை ஏற்பீர்கள்.புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதானம் தேவைப்படும் நாள்

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : என் செயலை சுயநலம் என்பீர்கள், ஆம்.. சுயநலம்தான். ஆகாரத்திற்காக அழுக்கைத் தின்று தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன். அதுபோல என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது என்ற கலைஞரின் வசனம் உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக அமையும். பிறருக்கு உதவுவதில் மகிழ்ச்சியை காண்பீர்கள்.

 

Get the latest Tamil news and Horoscope news here. You can also read all the Horoscope news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rasi palan daily horoscope thursday 19th november

Next Story
Rasi Palan 18th November 2020: இன்றைய ராசிபலன்Today rasi palan, rasi palan october 31st, இன்றைய ராசிபலன், அக்டோபர் 31 ராசிபலன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express