Rasi Palan Tamil: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ‘இன்றைய ராசிபலன்’ மூலம் தினமும் அனைத்து ராசி அன்பர்களும் தங்களது பலன்கள் தெரிந்து கொள்ளலாம். விதியிடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. விதிப்பயனை அனுபவித்தே ஆக வேண்டும். ஆனால், விதியை மதியால் வெல்லலாம் என்பது முன்னோர்கள் வாக்கு. அதன்படி, அன்றைய உங்களின் ராசி பலனை அறிவதன் மூலம், வீண் சங்கடங்களை தவிர்க்கலாம், இல்லாத மகிழ்ச்சியை தேடிக் கொண்டு வரலாம்.
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
புதியவர்கள் உங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பை வைப்பார்கள். அது பிரம்மாண்ட எதிர்பார்ப்பாக கூட இருக்க வாய்ப்புள்ளது. ஆனால், அதுவே அவர்களுடன் பணிபுரிய உங்களுக்கு பிரச்சனை ஆகிவிடும். எந்தப் பிரச்சனைக்கும் சில நாட்களில் உங்களுக்கு பதில் கிடைக்கும், ஆனால் குழப்பத்துடன் கிடைக்கும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
குடும்பத்தை விட்டு தொலைவில் இருக்கும் சூழல் ஏற்படும். குறைந்தபட்சம் நீங்கள் வெளிநாடுகளில் அல்லது தொலைவில் உள்ள குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய நிலை உண்டாகும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
சந்திரன் மீண்டும் ஒருமுறை உங்களுக்கு சவால் விடுகிறான். மற்றவர்களையும் நேசிக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள். நீங்கள் வீழ வேண்டும் என்று யாராவது நினைத்தால், அதை நினைத்து வருத்தப்பட வேண்டாம். உங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை எனில், நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
எதுவும் நிலையானது இல்லை என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் விரும்புகிறீர்களோ, இல்லையோ, உங்கள் வேலை முறையை மாற்ற வேண்டும். உங்கள் குறிக்கோளை அடைய முதலில் களத்திற்கு வர வேண்டும். ஓடுவதற்கு முன்பு முதலில் நடக்கப் பழக வேண்டும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
சந்திரன் உங்களை என்கரேஜ் செய்து, உங்கள் எதிர்காலத்தை எதிர்கொள்ள, உங்கள் சிந்தனைகளை தெளிவாக்கும். திட்டங்களை தீட்டும் போது, உங்கள் கற்பனைக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம். அது கெட்ட விஷயம் அல்ல.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
மீண்டும் மீண்டும் எரிச்சலைத் தடுக்க உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும். நிதி நெருக்கடி உங்களை மிரட்டும் என நீங்கள் பயந்திருக்கலாம். ஆனால், இப்போது அவற்றிற்கு நீங்கள் ஓய்வு கொடுக்கலாம். கடந்த காலத்தில் உங்கள் சேமிப்புகள் கரைந்திருந்தால், இப்போது அந்த இயக்கம் தலைகீழாக மாறும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
வேலைகளில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பணவரவுகள் இருக்க வேண்டியிருந்தால், அதற்கான செயல்பாட்டில் ஈடுபடலாம்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
செவ்வாய் உங்கள் ராசியில் மிக முக்கியமான இடத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. இதனால், சிற்சில எரிச்சலான சம்பவங்கள் நடைபெற துவங்கும். பெரிய தொல்லைகளின் அறிகுறியே இந்த சிறிய எரிச்சல்கள். இது கடினமான தருணம் தான். ஆனால், மிகவும் கடினமாக இருக்காது.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
உங்கள் பணிகளை உங்களைச் சுற்றி இருக்கும் மிகப்பெரிய கூட்டமே செய்து முடித்து உங்களுக்கு வெற்றியை தேடித் தந்துவிடும். இதனால், உங்களுக்கு பிரச்சனை ஏதும் இல்லை. சந்திரனின் ஆதரவு உங்களுக்கு இருப்பதால், மற்றவர்களின் பொறுப்புகளை நீங்கள் ஏற்றுக் கொள்ள தூண்டுதலாக அமையும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
தற்போது நிலவும் சூழ்நிலை, போட்டிகளை சமாளிக்க உங்கள் தனிப்பட்ட திறமைக்கு ஆதரவாக இருக்கும். உங்களுடன் பணிபுரிபவர்கள் இடம் மாறினால் ஆச்சர்யப்பட வேண்டாம். அவர்களின் எதிர்காலம் பற்றிய நிச்சயமற்ற தன்மைக்கு நீங்கள் பரிதாபப்படலாம். அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்க முயற்சி செய்யுங்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து நீங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கலாம். இதற்காக நீங்கள் முதலில் முயற்சி எடுக்க வேண்டும். மற்றவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கி, அதன்மூலம் அழுத்தங்களை நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். வெற்றிக்கு உங்கள் அர்ப்பணிப்பான உழைப்பை கொடுங்கள். அந்த வேலையை நீங்கள் எதிர்பார்த்ததை விட, சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
தேவைக்கும் அதிகமாக கொஞ்சம் செலவு செய்ய தயாராகிவிட்டீர்கள் என்றால், உங்கள் எதிர்காலத்திற்கு அதனை முதலீடு செய்ய முடிவெடுத்துவிட்டீர்கள் என்றால், அதற்கான பயனை நீங்கள் அடைய விரும்புவீர்கள். ஆனால், அதற்கான உத்தரவை நீங்கள் தான் கொடுக்க வேண்டும். அப்போதுதான், உங்களிடம் வாங்கிய பணத்தை நண்பர் திருப்பிக் கொடுப்பார்.