Rasi Palan Today 18th October 2018 in Tamil: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ‘இன்றைய ராசிபலன்’ மூலம் தினமும் அனைத்து ராசி அன்பர்களும் தங்களது பலன்கள் தெரிந்து கொள்ளலாம். இன்பம், துன்பம் இல்லாத மனிதனை பார்க்க முடியுமா? முடியாது. இவையிரண்டும் நாம் விருப்பப்பட்டு வருவதில்லை. அவை வருவதையும் தடுக்க முடியாது, போவதையும் தடுக்க முடியாது. பூர்வ ஜென்மா கர்மா அனைவருக்கும் பொதுவானது. இதை வைத்தே ஒருவரது இன்பமும், துன்பமும் தீர்மானிக்கப்படுகிறது என்கிறார்கள் ஆன்றோர்கள். ஆனால், தெய்வ வழிபாட்டால் துன்பத்தின் வீரியங்களை குறைக்க முடியும் என்பது சத்தியமான உண்மை.
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
மற்றவர்களை நம்பாமல் உங்களை நம்ப வேண்டிய நேரமிது. உங்கள் தொழில் பார்ட்னர்கள் கூட உங்களுக்கு உதவுவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. உங்கள் கைகளே உங்களுக்கு உதவி.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள் இது. உங்கள் பணியிடங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வினையாற்றுவதற்கு முன்பு யோசித்து செயல்படுங்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
இன்றைய நாள் உங்களுக்கு மிக எளிதாக அமையும். வழக்கத்தைவிட அது மிருதுவானதாக இருக்கும். மற்றவர்களின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளையும், வாழ்த்துகளையும் நீங்கள் எந்த அளவிற்கு எடுத்துக் கொள்கிறீர்களோ அந்தளவிற்கு நீங்கள் முதிர்ச்சியடைவீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
தனிப்பட்ட உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கிரக நிலைகளின் செயல்பாடுகளால் உங்களது சில உறவுகளின் அணுகுமுறைகளில் மாற்றங்கள் ஏற்படலாம். அடுத்தவர்கள் உங்களுக்கு பாடம் எடுக்க வேண்டியது நிறைய இருக்கிறது.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
கருத்து வேறுபாடு காரணமாக தவறான புரிந்துணர்வு காணப்படும். உங்கள் துணையின் கருத்துக்களை புரிந்து கொண்டு இருவரும் பரஸ்பரம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
உங்கள் மதிப்பிற்கு ஏற்ற ஊதியம் தர வேண்டும் என எண்ணுவீர்கள். இன்று நீங்கள் உற்சாகமான ஆற்றலுடன் காணப்படுவீர்கள். நீங்கள் குறைந்த எதிர்பார்ப்புடன் கடினமாக உழைப்பீர்கள். இதனால் நற்பலன்கள் ஏற்படும்
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
எதிர்காலத்திற்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உங்கள் தேவைகள் குறித்து பேசவில்லை என்றால், அது அடுத்த மாதம் வரை தள்ளிப் போக வாய்ப்புள்ளது. குறிப்பாக, தம்பதியினர் தங்களுக்குள் நல்ல புரிதலை ஏற்படுத்திக் கொள்ள உட்கார்ந்து பேச வேண்டியது அவசியம்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
உங்களின் எதிர்கால கிரக அமைப்புகள் நிலைத்தன்மை இன்றி காணப்பட்டாலும், இன்றைய அமைப்பு சற்று ஆடம்பரமாகவே இருக்கும். பணியிடத்தில் திருப்திகரமான நிலை இருக்கும். நீங்கள் தரமான வகையில் பணிகளை முடித்துத் தருவீர்கள். இதனால் உங்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
உங்கள் வாழ்க்கையில் எது உங்களுக்கு உண்மையில் முக்கியம் என்பதை உணரும் நாள் இது. நீங்கள் பொதுவாக புறக்கணித்து வந்த விஷயங்கள் எல்லாம் இப்போது வெளிச்சத்திற்கு வரும். இதன்மூலம், உங்களின் டென்ஷன்கள் குறையும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
இன்று நீங்கள் பிறருடன் பழகும் போது கவனமாகப் பழக வேண்டும். சிறிதளவு பரிச்சயமானவர்களிடம் இன்று தவறான புரிந்துணர்வு ஏற்படும். தேவையற்ற விளைவுகளை தவிர்க்க நீங்கள் உங்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
மிகச்சிறந்த சிந்தனையாளரான நீங்கள், பழமையான கேள்விகளுக்கு கூட சரியான பதிலை கண்டறிவீர்கள். அமைதியாக உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். அடுத்த முறை நிச்சயம் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
இன்று வெற்றி காண்பதற்கு சிறந்த நாள். உங்களிடம் விரைந்து செயலாற்றும் உறுதியும் தைரியமும் காணப்படும். உங்களின் சரியான திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் உங்களிடம் காணப்படும். உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க செயலாற்றுவீர்கள். நீங்கள் தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இது உங்களுக்கு மிகுந்த பலனளிக்கும்.
Get all the Latest Tamil News and Tamil Horoscope at Indian Express Tamil. You can also catch all the latest update on Rasi Palan by following us on Twitter and Facebook
Web Title:Rasi palan tamil october 18 2018 daily rasi palan astrology predictions for aries taurus gemini cancer leo virgo libra scorpio sagittarius capricorn aquarius pisces
பட்டிமன்ற சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னர் .. சாலமன் பாப்பையா ஸ்டோரி!
கொரோனா தடுப்பூசி : வதந்திகள் பரப்புவோருக்கு உள்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை
எல்லோரும் தேடிக்கொண்டிருந்த பிக் பாஸ் எடிட்டர் இவர்தான் – பாலாஜி வெளியிட்ட வைரல் புகைப்படம்
தேங்காய் இல்லாத பொட்டுக்கடலை சட்னி. புதுசா இருக்குல .. டேஸ்டும் அப்படித்தான்!
ரியல் எஸ்டேட் மோசடி: தமிழகத்தில் 3850 ஏக்கர் நிலத்தை முடக்கிய அமலாக்கத் துறை