Advertisment

Rasi Palan 10th March 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 10th March 2020: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rasi palan march 10 2020 rasi palan today

rasi palan march 10 2020 rasi palan today

Today Rasi Palan, 10th March 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 10th March 2020 : இன்றைய ராசி பலன், மார்ச் 10, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

எச்சரிக்கையாக இருக்காவிட்டால், உங்கள் சேமிப்புகள் கரைய வாய்ப்பிருக்கிறது. உங்களை எச்சரிப்பது இது முதன் முறை அன்று. ஆகையால், கவனமாக இருப்பது அவசியம். அதற்காக உங்களுக்கு எந்த நல்லதும் அமையாது என்று அர்த்தம் ஆகாது.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை, எதார்த்தத்துக்கு அப்பாற்பட்டு இருக்கலாம். ஆனால், நம்பிக்கையில் எந்த தவறும் கிடையாது. உங்கள் பேச்சுகளை மற்றவர்கள் கேலி செய்யலாம், ஆனால் சமூகத்தில் உங்களுக்கான வரவேற்பு பெரிதாகவே இருக்கும். நேர்மறையான அணுகுமுறை உங்கள் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமையலாம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

பெற்றோர்கள் மீது அன்பு செலுத்துவீர்கள். கடினமான வார்த்தை உபயோகங்களை கடந்த சில நாட்களாக தவிர்த்து வருகிறீர்கள். அதை பலனையும் நீங்கள் உணர்ந்து வருவதாக நம்பலாம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டிருப்பீர்கள். அது உங்களை மேலும் வலிமையான நபராக மாற்றும். மன அழுத்தங்கள் குறையும். சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

விவாதங்களும், பிரச்சனைகளும் உங்களை சுற்றி சுற்றி வரும். அதனை தவிர்க்க வேண்டியது அவசியம். சுயக்கட்டுப்பாடு என்பது உங்களுக்கு தேவை. முக்கியமாக, இன்றைய தினம் அமைதியை விடாமல் கடைபிடிக்க வேண்டும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

சூரியன் உங்களுக்கான வெற்றியை கொண்டு வரும். ஆனால், சிறிது தடுமாற்றம் இருக்கும். சுய ஆர்வம் கொண்ட விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். அதுவே உங்களை முன்னேற வைக்கும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

உங்களுக்கு எது நல்லது என்று தோன்றுகிறதோ, அதை விடாப்பிடியாக நின்று பெற வேண்டியது உங்கள் கடமை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வெற்றிகரமான நாள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

உங்களை சுற்றி பாஸிட்டிவ் வைப்ரேஷன் இருக்கும். அது உங்கள் செயல்பாடுகளை நகர்த்திச் செல்லும். உங்கள் எண்ணங்களே உங்களது முடிவாக இருக்கும். உங்கள் துணைக்கு பிடித்தவாறு நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

வெவ்வேறு கருத்துகள் இருந்தாலும், உங்கள் கருத்தில் உறுதியாக இருப்பீர்கள். துணிச்சல் உங்களின் பலம். நேர்மையான அணுகுமுறை உங்களை கௌரவமான இடத்திற்கு கொண்டுச் செல்லும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உடல் நலத்தில் அக்கறை தேவை. குடும்பத்தில் அன்பை விதைக்க முயற்சி செய்யுங்கள். காதல் கைகூடும். வெளிநாடுகளில் வேலைக்கு ஏற்பாடு செய்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

நின்று, நிதானமாக கவனிக்க வேண்டிய நாள் இன்று. உங்கள் முடிவுகளை சரியான நேரத்தில் வெளியிடுங்கள். அப்போது தான் அது மதிப்பு பெறும். குடும்பம் முதல் ஆரோக்கியம் வரை கவனமாக இருக்க வேண்டும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

இன்று பலன்களில் ஏற்றத்தாழ்வு காணப்படும். செயல்கள் சுமுகமாக நடைபெற அனுசரித்து நடக்க வேண்டும். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்காது. பணத்தை கையாள்வதை கடினமாக உணர்வீர்கள்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment