Advertisment

Rasi Palan Today 23rd October 2018 : பண விவகாரங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்

Daily Rasi Palan Tamil, Oct 23, 2018: உங்கள் செயல்களை சுமூகமாக மேற்கொள்ள நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் நம்பிக்கை இழக்க நேரலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan Today: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 23rd October 2018 in Tamil: : இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் புதிய அறிமுகமாக ‘இன்றைய ராசிபலன்’ எனும் புதிய பிரிவை வாசிப்பாளர்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

Advertisment

வெற்றி என்பது மாயை. அது தொடர்ந்து கிடைக்கும் பட்சத்தில் நீங்கள் அடுத்தக் கட்டத்திற்கு செல்ல மாட்டீர்கள். தோல்வி என்பது பாடம். உலகின் மிகப்பெரிய பல்கலையில் படித்தால் கூட கிடைக்காத அனுபவமும், பாடமும் ஒரு தோல்வியில் உங்களுக்கு கிடைக்கும். அது ஆயிரம் வெற்றிகளை அறுவடை செய்யும்.

Rasi Palan 23rd October 2018 : இன்றைய ராசி பலன் 23 அக்டோபர் 2018 :

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) 

பண வரவு குறித்து நீங்கள் இதற்கு முன்பு கவலைப்பட்டிருக்கலாம். ஆனால், இப்போது அப்படி பயப்பட தேவையில்லை. பொருளாதார ரீதியில் மேம்பாடு ஏற்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. பொறுப்புகள் அதிகமாகும். இது உங்களுக்கு சுமையாக இருக்கும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

உங்களுக்கான பொறுப்புகள் அதிகமாகிறது. கிரக அமைப்புகள் உங்களை ஓய்வு எடுக்க விடாது. நண்பர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். நெருங்கிய நண்பர்கள் உங்கள் மீதுள்ள சுமையை தாங்க முன்வருவார்கள். இதன்மூலம் நண்பர்களின் முக்கியத்துவத்தை உணர்வீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

இயற்கையாக நீங்கள் நல்ல மனம் படைத்தவர்கள். அது உண்மை. மற்றவர்களுடன் ஒப்பிடும் போது, உங்களுக்கென தனித்துவமான குணாதிசயம் இருக்கும். இருப்பினும், பண விவகாரங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். செலவுகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

நீங்கள் ஒரு லட்சிய நிலையில் இருக்கிறீர்கள். சண்டையிட வாருங்கள், நண்பர்களும் சக பணியாளர்களும் உங்களை மதிக்க வேண்டும். நீங்கள் பேரம் பேசுகிறீர்கள் என்றால், இன்று மதியமே உங்களால் சிறந்த தருணங்களைக் கொண்டு வர முடியும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

இறுதியில், உங்கள் துணையும், தொழில் பார்ட்னரும் அவர்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவார்கள். இது பிரமை மற்றும் தோற்றத்திற்கான நேரமாகும். நீங்கள் உங்கள் துணையுடன் வாக்குவாதம் செய்வீர்கள். மகிழ்ச்சியாக இருக்க இதனை தவிர்க்க வேண்டும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

நீங்கள் உங்கள் துணையுடன் சிறப்பான உறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பரஸ்பர புரிந்துணர்வு காரணமாக உறவில் நல்லிணக்கம் காணப்படும். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் சொத்துக்கள் அதிகரிக்கும். உங்கள் நிதிநிலைமையை சிறப்பாக வளர்த்துக் கொள்ள நல்ல வாய்ப்பு கிடைக்கும்

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

தொழில் வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிக நீண்ட கால மாற்றங்களை ஏற்படுத்தும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் காணப்படும். நீங்கள் பயனுள்ள முடிவுகளை எடுக்க இயலும். குறுகிய காலத்திற்குள் நீங்கள் உங்கள் பணிகளை திறமையாக முடிப்பீர்கள்

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) 

நெருங்கிய உறவுகள் மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள். இன்று பணிகள் இறுக்கமாக காணப்படும். அதனை நீங்கள் அமைதியான முறையில் எற்றுக் கொள்ள வேண்டும். திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். அதிகரிக்கும் செலவினங்களை நீங்கள் எதிர்கொள்ள நேரும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

உங்களுக்கு தேவையான ஒன்று, தேவையான நேரத்தில் கிடைக்கும். சில சமயம் அது கிடைக்காமல் கூட போகலாம். நிலைமை உங்கள் கையைவிட்டு போனாலும், நீங்கள் அதை நிதானமாக கையாள வேண்டும். அறிவார்ந்த முறையில் பணி செய்தால் மட்டுமே வெற்றி காண இயலும். அதன் மூலம் நீங்கள் உங்கள் பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

இன்று நீங்கள் உங்கள் உண்மையான ஆற்றலை அறிந்து கொள்வீர்கள். உங்களின் தகவல் தொடர்பு திறமைக்கான பாராட்டு பெறுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களின் நம்பிக்கையான மனநிலை காரணமாக நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

உங்கள் செயல்களை சுமூகமாக மேற்கொள்ள நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் நம்பிக்கை இழக்க நேரலாம். நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். சமூகம் சார்ந்த பொறுப்புகளை ஏற்கும் வாய்ப்பு ஏற்படும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

மிகவும் கவனமுடன் இருக்க வேண்டிய நாள் இது. செலவு, குடும்பம், வேலை என அனைத்திலும் பொறுப்பாக இருக்க வேண்டிய நேரம் இது. வாழ்க்கையை எளிதாக கடந்து செல்ல எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதும் அவசியம்.

Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment