Rasi Palan Today 26th October 2018 : இன்றைய ராசிபலன்

Daily Rasi Palan Tamil, Oct 26, 2018: எப்போதும் ரிலாக்ஸ் மூடில் இருப்பீர்கள். தொல்லைகள் வந்தாலும், அதை லாவகமாக அணுகுவதில் வெற்றி காண்பீர்கள்

Daily Rasi Palan Tamil, Oct 26, 2018: எப்போதும் ரிலாக்ஸ் மூடில் இருப்பீர்கள். தொல்லைகள் வந்தாலும், அதை லாவகமாக அணுகுவதில் வெற்றி காண்பீர்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan Today: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 26th October 2018 in Tamil: : இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் புதிய அறிமுகமாக ‘இன்றைய ராசிபலன்’ எனும் புதிய பிரிவை வாசிப்பாளர்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

Rasi Palan 26th October 2018 : இன்றைய ராசி பலன் 25 அக்டோபர் 2018

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

Advertisment

கவலைகள் விலகும் நேரம். ஊக்குவிப்புகள் அதிகம் கிடைக்கும். தன்னம்பிக்கையை கொஞ்சம் அதிகப்படுத்தினால் வெற்றிகள் வசப்படும். மருத்துவ ரீதியாக செலவுகள் உண்டாகும். ஆரோக்யத்தை பேணி காக்க வேண்டிய நாள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

எப்போதும் ரிலாக்ஸ் மூடில் இருப்பீர்கள். தொல்லைகள் வந்தாலும், அதை லாவகமாக அணுகுவதில் வெற்றி காண்பீர்கள். சரியான திசையில் சென்றுக் கொண்டிருப்பீர்கள். மகிழ்ச்சி வந்து சேரும் நாள் இது.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

மற்றவர்களுக்கு தேடி சென்று உதவி செய்வீர்கள். உங்களுக்கென்று வர அவர்கள் யோசிப்பார்கள். தேவைகள் உணர்ந்து செயல்படுங்கள். செலவுகளில் கட்டுப்பாடு தேவை. எப்படியாவது மாற்றம் வராதா என அதிகம் மெனக்கடுவீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

Advertisment
Advertisements

அதீத தன்னம்பிக்கை கூடாது. பணியிடங்களில் கவனம் அதிகம் தேவை. தோல்வி ஏதும் ஏற்படாது. கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கின்றன. வாரா வாரம் கோயில்களுக்கு செல்வதை வழக்கமாக கொள்ளுங்கள். வெற்றியின் சதவிகிதம் அதிகரிக்கும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்று முதலில் இலக்கு நிர்ணயம் செய்யுங்கள். இல்லாத கடைக்கு பூட்டு போட வேண்டாம். வெற்றி கைக்கு அருகில் இருந்தும் தடுமாற்றம் ஏற்படும். தொழில் கவனம் செலுத்துங்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

குடும்பத் தலைவிகளின் உடல்நிலையில் அக்கறை தேவை. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். குடும்ப உறவில் ஏற்பட்ட விரிசல்கள் சரியாகும். மற்றவர்களிடம் குறை பேசுவதை தவிர்க்கவும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

நிச்சயமற்ற தன்மை நிலவினாலும், விரைவில் அந்த நிலை மாறும். வரவேண்டிய கடன்கள் திரும்ப வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் உடல்நலத்தில் அக்கறை தேவை.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

இன்று பணப்புழக்கம் மிதமாகக் காணப்படும். பணத்தை தக்க வைத்துக்கொள்வது கடினமாக இருக்கும்.

உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல் நலத்திற்காக செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். பணிச்சுமை அதிகமாக காணப்படும். திட்டமிட்டு நேரத்துடன் பணி செய்வதன் மூலம் தவறுகளை தவிர்க்க முடியும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

இன்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். உங்கள் இலக்குகளை அடைய போராட வேண்டியிருக்கும். பொறுமையும் அமைதியும் தேவை. பணிகளில் சற்று பின்தங்கியிருப்பீர்கள். இதனால் உங்கள் மேலதிகாரிகளிடத்தில் நல்ல பெயரெடுக்கும் வாய்ப்பை இழப்பீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

இன்று காதலர்களுக்குள் கருத்து வேறுபாடு காணப்படும். இது நீங்கள் தகவல் பரிமாற்றத்தில் செய்யும் சிக்கல்கள் காரணமாக ஏற்படலாம். இன்று நிதிநிலைமை லாபகரமானதாக இல்லை. வரவைவிட செலவு அதிகமாக காணப்படும். பணப்பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

உங்களுடைய உறுதியான முயற்சியின் மூலம் இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமன நாளாக அமையும். இன்று வெற்றியை சந்திப்பீர்கள். உங்கள் முயற்சிகளின் மூலம் பல சாதனைகளைச் செய்வீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

இன்று உணர்ச்சிப் பூர்வமாக இருப்பதை விட்டுவிட்டு யதார்த்தமாக இருக்க வேண்டியது அவசியம். உங்களை பாதிக்கக்கூடிய எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். உங்கள் வேலை சம்பந்தமாக நீங்கள் பயணம் செய்ய நேரிடலாம். அது பயனுள்ளதாகவும் வெற்றிகரமாகவும் அமையும்.

Rasi Palan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: