/tamil-ie/media/media_files/uploads/2018/10/D532.jpg)
Rasi Palan Today: இன்றைய ராசிபலன்
Rasi Palan Today 28th October 2018 in Tamil: : இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் புதிய அறிமுகமாக ‘இன்றைய ராசிபலன்’ எனும் புதிய பிரிவை வாசிப்பாளர்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
Rasi Palan 28th October 2018 : இன்றைய ராசி பலன் 28 அக்டோபர் 2018
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
பணியில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். அமைதியுடன் உங்கள் சங்கடங்களை எதிர்கொள்ளுங்கள். குடும்ப உறவில் நிம்மதி கிடைக்கும். பெற்றோர்களை வணங்குங்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
தொல்லைகள் நீங்கும். கொடுத்த கடன் வசூலாகும். நோய், பிணியால் பாதிக்கப்பட்ட நிலை மாறும். மாணவர்களின் கல்வித்தரம் மேம்படும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
மந்தமான நாள். உங்கள் முன்னேற்றத்தில் கவனத்துடன் இருங்கள். உங்கள் முன்னேற்றப் பாதையில் தடைகள் காணப்படும். சிந்தித்து அறிவுப்பூர்வமாக செயல்படுவது நல்லது. இன்றைய நாளின் முடிவில் தேவையில்லாத செலவினங்கள் கூட ஏற்படலாம்
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
வெற்றிகரமான நாள். இன்று சரியான முடிவுகளை எடுப்பீர்கள் அது உங்களுக்கு முடிவில் மகிழ்ச்சியைத் தரும். பணியை பட்டியலிட்டு அட்டவணைப்படுத்தி செயலாற்றுங்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
நிறைய மாற்றங்கள் ஏற்படும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இன்று ஆன்மீக விஷயங்களில் உங்கள் மனம் லயிக்கும். பணவரவிற்கான அதிர்ஷ்டம் குறைந்து காணப்படுகின்றது. கூடுதல் செலவினங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
இன்று நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். பிரார்த்தனையில் ஈடுபடலாம். ஆன்மீக விஷயங்களில் ஈடுபடலாம். குளிரச்சியான உணவுகளை உட்கொண்டதன் காரணமாக குளிர் சம்பந்தமான நோய் தொற்றுகளுக்கு ஆளாகலாம்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
உங்களுக்கு இன்று நல்லது எது கெட்டது எது என பிரித்தறிய இயலாது. அதிர்ஷ்டத்தை நம்பியிருக்காதீர்கள். உங்கள் கடின உழைப்புதான் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். பணத்தை தக்க வைத்துக் கொள்வது இன்று கடினமாக இருக்ககும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
பலவிதமான வாய்ப்புகள் கிடைக்கும். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.இன்று நன்றாக பணியாற்றுவீர்கள். உங்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். உங்கள் திறமை வெகுவாக பாராட்டப்படும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
இன்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். உங்கள் இலக்குகளை அடைய போராட வேண்டியிருக்கும். பொறுமையும் அமைதியும் தேவை. பணிகளில் சற்று பின்தங்கியிருப்பீர்கள். இதனால் உங்கள் மேலதிகாரிகளிடத்தில் நல்ல பெயரெடுக்கும் வாய்ப்பை இழப்பீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
உங்கள் சமயோஜித புத்தியின் மூலம் உங்கள் நண்பர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். இன்று நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெரிய அளவிலான ஆரோக்கிய பாதிப்புகள் ஏதும் காணப்படாது.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
இன்று மனஅழுத்தம் மற்றும் அசௌகரியங்கள் காணப்படும். கவனமாக திட்டமிட்டு இன்றைய தினத்தை நிர்வகிக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். பணியைப் பொறுத்தவரை இன்று நல்ல நிலை காணப்படும். உங்கள் மேலதிகாரிகளிடமிருந்து அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
உங்கள் செயல்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இன்று நீங்கள் உங்களின் சொந்த முடிவு எடுப்பதில் உறுதி காட்டுவீர்கள். எளிதான பணிகள் கூட இன்று சுமையாகத் தெரியும். புத்திசாலித்தனத்துடன் நடந்து உங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.