Rasi Palan Today 29th October 2018 : இன்றைய ராசிபலன்

Daily Rasi Palan Tamil, Oct 29, 2018: பணிச் சூழல் சவால்கள் நிரம்பியதாக இருக்கும். உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் விவாதத்தில் ஈடுபடுவீர்கள்

Daily Rasi Palan Tamil, Oct 29, 2018: பணிச் சூழல் சவால்கள் நிரம்பியதாக இருக்கும். உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் விவாதத்தில் ஈடுபடுவீர்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Daily Rasi Palan Tamil, Oct 28, 2018: இன்றைய ராசிபலன்

Daily Rasi Palan Tamil, Oct 28, 2018: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 29th October 2018 in Tamil : நேரம், காலம் அறிந்து செயல்படுவது என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியம். பலரும் இதனை எள்ளி நகையாடலாம். ஆனால், ஒவ்வொருவரின் கிரக நிலைகளுக்கு ஏற்ப தான் ஒவ்வொருவரின் செயல்பாடுகளும் தீர்மானிக்கப்படும். அதுவே விதி.

Rasi Palan 29th October 2018 : இன்றைய ராசி பலன் 29 அக்டோபர் 2018

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

தேவையில்லாத விவகாரங்களில் ஈடுபட வேண்டாம். கல்வியில் அதிக ஈடுபாடு உண்டாகும். மாணவர்களின் படிப்பின் மீதான ஆர்வம் எதிர்பார்க்காத அளவில் சிறப்பாக இருக்கும். குடும்ப உறவில் சின்ன சின்ன சிக்கல்கள் ஏற்படும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

வெற்றிகரமான நாள். கரு தங்கும். உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். கடன் வசூலாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அலைச்சல் குறையும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உடல் சோர்வு ஏற்படும். வீண் பிடிவாதம் கூடாது. திருமண உறவில் புரிதல் அதிகரிக்கும். கல்வித் தரம் மேம்படும். செலவுகளை கட்டுப்படுத்த திட்டமிட்டு செயல்படுங்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

மகிழ்ச்சிகரமான நாள். வெற்றி உங்களைத் தேடி வரும். பிள்ளைகளால் அலைச்சல் உண்டாகும். சேமிப்பு கை கொடுக்கும். காதல் கைகூடும். குடும்ப உறவில் நிம்மதி நிலவும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

பணிச் சூழல் சவால்கள் நிரம்பியதாக இருக்கும். உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் விவாதத்தில் ஈடுபடுவீர்கள். வேலை இழப்பிற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. பாதுகாப்பின்மை உணர்வு மேலோங்கி இருக்கும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

சில தடைகளுக்குப் பின் உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். செயல்களின் முன்னுரிமையை உணர்ந்து அதன்படி வினையாற்றுங்கள். இன்று பணவரவுடன் செலவும் சேர்ந்து காணப்படும். சீரான நிதிநிலைமையை தக்கவைத்துக் கொள்ள திட்டமிடல் அவசியம்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

இன்று பொறுப்புகள் அதிகமாகக் காணப்படும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இன்று உகந்த நாள் அல்ல. பணியிடச் சூழல் சிறப்பாக இருக்காது. ஏற்ற இறக்கங்களை காண்பீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

இன்று பொறுமை மிகவும் அவசியம். பணியில் சில இறுக்கங்கள் காணப்படும். தைரியம் மற்றும் உறுதியின் மூலம் நீங்கள் வெற்றி காணலாம். குடும்ப விஷயங்களில் சூடான விவாதங்கள் நடைபெறும். அமைதியான அணுகுமுறையை கையாள்வது நல்லது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

குடும்ப சிக்கல்கள் அகலும். இவ்வளவு நாள் நீடித்த பிரச்சனைகள் விலகும். ஆனாலும், பணியிடங்களில் கூடுதல் பொறுப்பு தேவை. நல்லது, கேட்டது எதுவென்று பகுத்தறிந்து செயல்பட வேண்டியது அவசியம்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

குழந்தை வளர்ப்பில் கவனம் அவசியம். நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். முடிவு எடுப்பதில் தெளிவாக இருங்கள். பணிச்சுமை அதிகரிக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

நேர்மறையான அணுகுமுறையை மேற்கொள்ளுங்கள். பொறுப்புகளை திறமையாக கையாள்வதில் தடைகள் காணப்படும். உங்கள் குழந்தைகளின் மற்றும் குடும்பத்தின் வளர்ச்சி பற்றிய கவலை காணப்படும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

Advertisment
மகிழ்ச்சியான மனநிலையுடன் காணப்படுவீர்கள். தாழ்வு மனப்பான்மை நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்ப உறவில் நிம்மதி மீண்டும் ஏற்படும்.
Rasi Palan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: