scorecardresearch

Today Rasi Palan 4th November 2022: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan for Friday, November 4th, 2022: இன்றைய ராசிபலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.Today Rasi Palan for Friday, November 4th, 2022: இன்றைய ராசிபலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Today Rasi Palan 4th November 2022: இன்றைய ராசிபலன்

Rasipalan 4th November 2022, Friday ராசிபலன் நவம்பர் 4ம் தேதி வெள்ளிக்கிழமை 2022: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Today Rasi Palan 4th November 2022: இன்றைய ராசி பலன், நவம்பர் 4ம் தேதி 2022
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் Today Rasi palan (Mesham today’s Rasi Palan / மேஷம் ராசிபலன்/ Aries horoscope today) 04-11-2022 Friday

சூரியன் உங்களை இன்னும் சமூகத் தொடர்புகளை அதிகம் பயன்படுத்துமாறு வற்புறுத்துகிறது. ஆனால், ஏற்கனவே நீங்கள் ஒரு புதிய கட்டத்தை நோக்கி நகர்ந்துவிட்டீர்கள். அது ஒரு மாதம் நீடிக்கும். அது உங்களை தனிமைப்படுத்திவிடும். இது ஒரு மோசமான விஷயம் அல்ல: நீங்கள் உண்மையில் தனியாக இருக்க விரும்பும் தருணங்கள் இருக்கக் கூடும்.

ரிஷபம் Today Rasi palan (Rishabam Rasi Palan / ரிஷபம் ராசிபலன்/ taurus horoscope today) 04-11-2022 Friday

உறுதியளிக்கப்பட்ட குடும்ப நகர்வுகள் அல்லது பெரிய வீடு மாற்றம் அடுத்த ஆறு மாதங்களில் நிறுத்தப்பட்டால், நீங்கள் இருக்கும் இடத்திலேயே தங்கி அடிப்படைக் கேள்விகளுக்கு தீர்வு காண வேண்டும். தற்போதைய உறவில் நீங்கள் வேலை செய்ய வேண்டியிருக்கலாம். அல்லது திடமான பழுதுபார்த்தல் மற்றும் கணிசமான கட்டிட வேலைகள் அவசியமாக இருக்கலாம். அது எதுவாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

மிதுனம் Today Rasi palan (Midhunam Rasi Palan / மிதுனம் ராசிபலன்/ gemini horoscope today) 04-11-2022 Friday

இந்த நேரத்தில் யாரும் உங்களுடன் சிக்கக்கூடாது. அவர்கள் அப்படி இருந்தால் நீங்கள் ஒரு தற்காப்பு மனநிலையில் இருக்கிறீர்கள் என்பதையும், நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நீங்கள் எவ்வளவு நல்லதைக் கொடுப்பீர்கள் என்பதையும் அவர்கள் கணக்கிட வேண்டும். அப்படி செய்ய எந்த காரணமும் இல்லை என்றால், நீங்கள் மனதார அவர்களுக்கு வழிவிடப் போவதில்லை.

கடகம் Today Rasi palan (Kadagam Rasi Palan / கடகம் ராசிபலன்/ cancer horoscope today) 04-11-2022 Friday

இப்போது பண விவகாரங்கள் தீர்க்கப்பட வேண்டும், குறைந்தபட்சம் குறுகிய காலத்துக்காவது தீர்க்கப்பட வேண்டும். நீங்கள் இப்போது மற்ற கேள்விகளை பரிசீலிக்க விரும்பலாம். இந்த ஆண்டு எங்கே விடுமுறைக்கு செல்லப் போகிறீர்கள். உங்களுடைய முக்கியமான தொடர்புகள் வெகு தொலைவில் இருப்பதாகத் தெரிகிறது.

சிம்மம் Today Rasi palan (Simmam Rasi Palan / சிம்மம் ராசிபலன்/ leo horoscope today) 04-11-2022 Friday

இந்த நேரத்தில் நீங்கள் பெரிய முன்னேற்றத்தை உருவாக்கலாம். தனிப்பட்ட விஷயங்கள் ஒரு பக்கம் ஒதுக்கி வையுங்கள். உங்கள் எண்ணங்களை நிதி நிலைமையை நோக்கி செலுத்தலாம். உண்மையில் பொருட்கல் வாங்குதல்கள் நிகழ்ச்சி நிரலில் உள்ளன. ஆனால், சேமிப்புகள் உங்கள் மனநிலைக்கு ஏற்றதாகத் தெரிகிறது.

கன்னி Today Rasi palan (Kanni Rasi Palan / கன்னி ராசிபலன்/ virgo horoscope today) 04-11-2022 Friday

உங்கள் நடவடிக்கையும் நோக்கமும் பிரிந்து செல்லும் நபர்களுடன் பிணைப்பை புதுப்பிப்பதாக இருக்க வேண்டும். வேலையில் தகராறு ஏற்படுவதற்கான வாய்ப்பை சில ஆர்ப்பாட்டமான நகர்வுகள் மற்றும் சில உறுதிமொழிகளால் ஒத்திவைக்கலாம். ஒரு கூட்டாளி தற்போதைய ஏற்பாடுகளில் சங்கடமாக இருக்கலாம். இந்த உண்மை, அவர்கள் எவ்வாறு மேம்படுத்தப்படலாம் என்பதைப் பார்க்க உங்களை ஊக்குவிக்க போதுமானது.

துலாம் Today Rasi palan (Thulaam Rasi Palan / துலாம் ராசிபலன்/ libra horoscope today) 04-11-2022 Friday

உங்கள் ராசிக்காரர்களைப் சோம்பேறி என்று ஜோதிடர்கள் மத்தியில் உங்களுக்குப் பெயர் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மையில், நீங்கள் அதை தவறாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள். உண்மையில் அது என்னவென்றால், இதுபோன்ற சமயங்களில் உங்கள் கண்ணியத்திற்குக் குறைவான பணிகளை வெறுப்பீர்கள். உங்கள் திறமைகளை வீணாக்க விரும்ப மாட்டீர்கள். இது எளிமையானது, உண்மையானது.

விருச்சிகம் Today Rasi palan (Viruchigam Rasi Palan / விருச்சிகம் ராசிபலன்/scorpio horoscope today) 04-11-2022 Friday

உங்கள் கூட்டுறவு எப்போதும் நேரடியானவை அல்ல. இது உங்களுக்கு நன்றாக தெரியும். உங்கள் நீண்ட காலப் பணி இப்போது அனைத்து குடும்ப உறவுகளையும் எளிதாக்குவது. அத்தியாவசியமான விஷயங்களில் இறங்குவது மற்றும் வெட்டிப் பேச்சை நிறுத்துவதுதான். இருப்பினும், ஒரு கூட்டாளி அவருடைய செயலைச் செய்யும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

தனுசு Today Rasi palan (Dhanusu Rasi Palan / தனுசு ராசிபலன் / sagittarius horoscope today) 04-11-2022 Friday

நீங்கள் வீட்டில் தீர்க்கமான நகர்வுகளை தாமதப்படுத்த வேண்டியிருக்கும் என்பதால், உங்கள் நிலையை மேம்படுத்த நீங்கள் இன்னும் உங்களால் முடிந்ததைச் செய்யலாம். உங்கள் வலுவான உணர்ச்சிப் பூர்வமான தொடர்புகள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நீங்கள் வசிக்கும் நபர்களுடன் உள்ளன. இந்த எளிய உண்மையை நீங்கள் உணர்ந்தால், பல பிரச்னைகள் காணாமல் போய்விடும்.

மகரம் Today Rasi palanm (Magaram Rasi Palan / மகரம் ராசிபலன் / capricorn horoscope today) 04-11-2022 Friday

உங்கள் திட்டங்கள், முன்மொழிவுகளை உள்ளுணர்வு யோசனைகளுடன் தொடரவும். இன்று நீங்கள் மக்களுடன் பேசினால், அவர்களை அனுதாபத்துடன் கேட்பவர்களாக நீங்கள் காண வேண்டும். மேலும், இந்த அறிவு நீங்கள் வழக்கமாக வைத்திருக்கும் உணர்வுகளை நம்புவதற்கு ஊக்குவிக்கும். ஆனால், அவமானத்தை ஏற்படுத்தும் எதையும் அவர்களிடம் சொல்லாதீர்கள்.

கும்பம் Today Rasi palan (Kumbam Rasi Palan / கும்பம் ராசிபலன்/ aquarius horoscope today) 04-11-2022 Friday

சனியின் பாதிப்பில்லாத அழுத்தம் இப்போது உங்கள் வாழ்க்கையில் ஒரு பாதி நிரந்தரமான செல்வாக்கு செலுத்துகிறது. ஆனால், அது மிகவும் சாதகமான ஒன்று. இன்று உங்கள் நிதி எதிர்காலம் குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தாலும், அது இறுதியில் பாதுகாப்பைக் கொண்டுவரும். கவனமாகவும் சீராகவும் திட்டமிடுவதன் மூலம் உங்களுடைய வழியை அடையலாம்.

மீனம் Today Rasi palan (Meenam Rasi Palan / மீனம் ராசிபலன்/ pisces horoscope today) 04-11-2022 Friday

அதிர்ச்சியின் திடீர் தாக்குதலால் யார் பின்னாலும் தொங்காதீர்கள், யாருடனும் உறவை முறித்துக்கொள்ளாதீர்கள். உங்களை முன்னோக்கி தள்ளுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்ற வாய்ப்பு உங்களுக்கு வருவதற்கு இன்னும் நான்கு வாரங்கள் ஆகலாம். மற்றவர்களை கவர்ந்திழுக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய கடந்தகால அறிவுரைகளை நினைவில் கொள்ளுங்கள்.\

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Horoscope news download Indian Express Tamil App.

Web Title: Rasi palan today friday 4 november 2022