Advertisment

Rasi Palan 9th March 2022: இன்றைய ராசிபலன்

இன்றைய ராசி பலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
New Update
March 9th 2020 Rasipalan, Today rasi palan, daily rasipalan, rasi palan 9th March, horoscope today, daily horoscope, horoscope 2022 today, today rasi palan, astrology, horoscope 2022, new year horoscope, இன்றைய ராசிபலன், மார்ச் 9ம் தேதி ராசிபலன், இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், இன்றைய தினசரி ராசிபலன், தினசரி ராசிபலன் , மாத ராசிபலன், மேஷம், ரிஷபம், கன்னி, மீனம், சிம்மம், துலாம், மிதுனம், கடகம், horoscope today, daily horoscope, horoscope 2022 today, today rashifal, astrology, horoscope 2022, new year horoscope, today horoscope, horoscope virgo, astrology, daily horoscope virgo, astrology today, horoscope today,scorpio, horoscope taurus, horoscope gemini, horoscope leo, horoscope cancer, horoscope libra, horoscope aquarius, leo horoscope, leo horoscope today

Rasi Palan 9th March 2022:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 9th March 2022: இன்றைய ராசி பலன், மார்ச் 9ம் தேதி 2022

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) 

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :

உங்கள் ராசியில் சந்திரனின் அமைப்பு உங்களை துணைவர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் கலந்தாலோசிக்கும்படி கேட்கவில்லை. அவர்கள் உங்களுக்கு உத்தரவிடுவார்கள். உங்கள் திட்டங்களைப் பற்றி விவாதிக்காமல், உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளாவிட்டால், உங்களைத்தான் குறைசொல்வார்கள். வேறு யாராவது எடுத்துச் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : 

நீங்கள் நீண்ட தூரம் செல்வதற்கு அதிக நேரம் ஆகாது. காரணம் நீங்கள், யாரையும் விட, மிகவும் அமைதியான, நேர்மறையான நல்ல இயல்புடைய கிரகங்களால் பயனடைகிறீர்கள். நீங்கள் வளைந்துகொடுக்கும் வரை சமூக வாய்ப்புகள் வேடிக்கையாக இருக்கும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21) : 

உங்கள் சூரியக் கட்டத்தின் அடிப்படையில் கிரகப் பரிமாற்றங்களிலிருந்து நீங்கள் நிச்சயமாகப் பலனடைவீர்கள். இப்போது நடக்கும் சிறிய வளர்ச்சிகள்கூட வரும் மாதங்களில் அல்லது வரும் ஆண்டுகளில் நிதியைக் கொண்டுவரும். முதலில், உங்கள் சேமிப்பை அதிகரியுங்கள். உங்கள் வருமானத்தை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :

உங்களுக்கு செயல்படுவதற்கு நிறைய விஷயம் உள்ளது. நேர்மறையான முடிவுகளை எதிர்பார்க்க எல்லாம் காரணமும் உள்ளது. ஒவ்வொரு திருப்பத்திலும் ஆலோசனையையும் அதன் அவசியத்தையும் புறக்கணித்தால், நீங்கள் விரைவில் துணைவர்களுடன் ரிஸ்க் ஏற்படும். அதற்கு பிறகு சொல்வதற்கும் செய்வதற்கும் ஒன்றுமில்லை.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :

வாழ்க்கை உங்களிடம் கருணை காட்டுவதைக் காட்டிலும் கடினமாக இருப்பதாக நினைக்கிறீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் இருக்கும் அற்புதமான நட்சத்திரங்களின் பார்வையில் இத்தகைய உணர்வுகள் மிகவும் முரண்பாடானது. ஆனால், இது மற்றவர்கள் உங்களுடைய அதிக எதிர்பார்ப்புகளுக்கு பதிலளிக்கத் தவறியதால் ஏற்பட்டதாக இருக்கலாம். துணைவரின் சிறிய தவறுகளை சகித்துக்கொள்ளுங்கள்!

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : 

நீங்கள் நிச்சயமாக மிகவும் சிறப்பான ஒன்றின் தொடக்கத்தில் இருக்கிறீர்கள். ஆனால், அது என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. நீங்கள் பொறுமையிழந்தால், அடுத்து வரும் சந்திரனின் பெரிய தாக்கத்திற்காக காத்திருங்கள். அதுவும் மிக விரைவில் வரும். ஒரு புதிய புதிய தொடக்கத்திற்கான நேரம் இது. எனவே ஒவ்வொரு புதிய தொடக்கத்திற்கும் உங்களிடமிருந்து கூடுதல் முயற்சி தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : 

உங்கள் பணத்தை உங்களுக்கு உரிய இடத்தில் வைக்க சரியான நேரம் இது. கிரகங்களின் அமைப்பும் அதையே சொல்கிறது. இருப்பினும், இன்னும் ஆறு அல்லது ஏழு நாட்களுக்கு நீங்கள் காத்திருப்பது புத்திசாலித்தனமானது என்று கிரக அமைப்பு சொல்கிறது. அதற்குள் நிலைமை மிகவும் அமைதியடைந்து இருக்க வேண்டும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :

ஒரு வித்தியாசமான சிறிய குடும்ப விவாதங்கள் ஊடுருவக்கூடும். ஆனால், அதில், உண்மையில் கவலைப்பட ஒன்றும் இல்லை. யாரையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வதாக நீங்கள் குற்றம் சாட்டப்பட மாட்டீர்கள். ஆனால், சிலர் உங்கள் நடத்தை குறைபாடற்றது என்று அவர்களை நம்ப வைக்க நீங்கள் மெனக்கெட வேண்டும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : 

கூட்டுறவு அல்லது நெருங்கிய உறவுகளைப் பற்றி இன்றைய ராசிபலன் அமைந்துள்ளது. இருப்பினும், தற்போதைய சிக்கல்கள் பண விஷயங்களால் தெளிவாகப் பாதிக்கப்பட்டுளீர்கள். யார் எதற்கு, எப்போது எவ்வளவு செலவு செய்தார்கள் போன்றவற்றை தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் இந்த பிரச்சனைகளை தீர்த்தால் உணர்வு பிரச்னைகள் எளிதாகும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :

நண்பர்கள் மற்றும் நண்பர்கள் குழு வழக்கத்தை விட அதிக ஆதரவாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மாலை வரையாவது ஆதரவாக இருப்பார்கள். இருப்பினும், அடுத்த 24 மணிநேரத்திற்கான ஏற்பாடுகள் ஒத்திவைக்கப்படலாம் அல்லது தாமதமாகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது உங்களை பிரச்னையில் இருந்து வெளியேற்ற உதவும் என்றால் அது நல்ல விஷயம்தான்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :

உங்கள் விதி வெளிப்புற சக்திகளால் கட்டுப்படுத்தப்படவில்லை. இதை நம்புங்கள் அல்லது நம்பாமல் விடுங்கள். ஆனால், நீங்கள் தனிப்பட்ட முறையில் உங்கள் எதிர்காலத்தை உருவாக்குகிறீர்கள் என்று கருதுகிறது. அதனால்தான், உங்கள் உந்துதல்களைப் புரிந்துகொள்வதும், உங்கள் தற்போதைய நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்வதும் தற்போது முக்கியம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : 

நீங்கள் மற்றவர்களிடமிருந்து விரும்பியதைப் பெறுவது என்பது நீங்கள் பயன்படுத்தும் உத்திகளைப் பொறுத்து அமையும். உங்கள் சிறிய உத்திகளை சில நபர்கள் இப்போது நன்கு அறிந்திருக்கிறார்கள். எனவே, நீங்கள் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். ஆனால், அது என்ன வழி என்று தெளிவாக இல்லை. அனேகமாக, நீங்கள் மற்றவர்கள் என்ன கொடுக்க முன்வருகிறார்கள் என்பதைப் பாருங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Horoscope Horoscope Tamil Rasipalan Rasipalan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment