மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
ராஜாவாக இருக்க முடியாமலும் சிப்பாயாகவும் இருக்க முடியாமலும் திணறுவீர்கள். மேலோட்டமான உங்கள் எண்ணத்தில் சிறிய முன்னேற்றம் இருக்கும். உடல் நலத்தில் மேம்பாடு இருக்கும். பழைய கடன் வசூலாகும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
உங்கள் கற்கும் திறன் அதிகரிக்கும். மாணவர்களின் செயல்பாட்டில் நல்ல மாற்றங்கள் தெரியும். ஊடகங்களில் பணியாற்றுவோருக்கு உயர் பதவிகள் கிடைக்கவோ, ஊக்கப் பரிசு போன்றவையோ கிடைக்க வாய்ப்புள்ளது.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
வெற்றிப் பெற வேண்டுமெனில், உங்கள் பணிகளை எவ்வளவு சீக்கிரம் தொடங்க வேண்டுமோ, அவ்வளவு சீக்கிரம் தொடங்குங்கள். அப்படி தாமதப்படுத்தினால், அது உங்கள் பார்ட்னருக்கோ, போட்டியாளருக்கோ சாதகமாக அமையும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
எதிர்கால திட்டமிடலை நோக்கி உழைப்பீர்கள். பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் வினையாற்றும் உங்களுக்கு இன்றைய நாள் சுமாரான நாள். உடல்நலனில் அக்கறையாக இருக்க வேண்டும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
உங்கள் நிதி நிலைமை அபாரமாக இருக்கும். ஆனால், உங்கள் தருணங்களை கவனமாக தேர்ந்தெடுங்கள். அப்போது தான் வெற்றியை வசப்படுத்த முடியும். ரொமான்ட்டிகான மூடில் இன்று இருப்பீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
வெளிநாடு செல்லும் யோகம் கிட்டும். பணி நிமித்தமாகவோ, படிக்கவோ செல்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். மரம் தொடர்பான தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். மகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்த நாள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
உடல் ஆரோக்யத்தில் அக்கறையின்றி இருப்பீர்கள். குறிப்பாக பெண்கள். கனிவான பேச்சுக்கள் உங்களுக்கு நண்பர்களை அதிகரிக்கும். உங்களை சுற்றி எப்போதும் யாராவது இருந்து கொண்டே இருப்பார்கள். வசீகரமான நாள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
மறதியால் அவதிப்பட்டு வந்திருப்பீர்கள். அந்த மந்த நிலை சற்று மாறும். பிரச்சனைகளை கண்டு ஒதுங்க வேண்டும். முயன்றால், உங்களை நோக்கி வர வெற்றி காத்திருக்கிறது. ஆனால், முயற்சி செய்ய வேண்டும். குடும்பத்தோடு இனிமையான நேரத்தை செலவு செய்வீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
தவறு என்று சொன்னாலே தலைக்கு மேல் கோபம் வரும் உங்களுக்கு. அதேபோல், முடியாது என்று சொன்னாலும் டென்ஷன் ஆவீர்கள். சாதாரணமாக செய்ய வேண்டிய வேலையை, பரபரப்போடு செய்வதை நிறுத்தினால் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. வெற்றிகரமான நாள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
யாரும் உங்களை நிர்வகிக்க அனுமதிக்காதீர்கள். அது உங்களுக்கே ஆபத்தாக முடியலாம். நண்பர்களின் ஆலோசனைகள் சில சமயம் கைக் கொடுக்கும். தேவையில்லாத விவகாரங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டாம்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
பிரச்சனை என்ன என்பதை முதலில் தெளிவு செய்து கொள்ளுங்கள். ஏனெனில், உங்களுக்கு அடுத்த சில நாட்கள் கடுமையானதாக அமையலாம். உடல் நலனில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது சிறந்தது.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
குழந்தை பாக்கியம் உண்டாக வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக குடும்பத்தில் நிலவிய கவலை தீரும். இருப்பினும், பொருளாதார நிலைமையில் பெரிதாக முன்னேற்றம் காண முடியாமல் வருந்துவீர்கள்.