Today Rasi Palan, 19th September 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Advertisment
Rasi Palan 19th September 2019: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 19, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
Advertisment
Advertisements
உங்களில் இருக்கும் மன அழுத்தங்களை வெளிக்கொணரும் நேரம் இது. மற்றவர்களிடம் கடினமான தருணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களது எமோஷனல் வெளிப்பாடு அதிகம் இருக்க வேண்டிய நாள் இது.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
எச்சரிக்கை மணி அடிக்கும் போதே உஷாரவது தான் உத்தமம். உங்கள் கனவுகளை நோக்கி முன்னேறிச் செல்லுங்கள். உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை முதலில் அறியுங்கள். கவனமாக சூழ்நிலைகளை கையாளுங்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
எல்லாமே கடினமாக சென்றுக் கொண்டிருக்கிறதா? தெரிகிறது. ஆனால், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். நிதிநிலை உங்கள் கையை கடிக்கும். ஆனால், அதையும் மீறி குடும்பத்தை நிர்வகிக்க வேண்டியது உங்கள் கைகளில் தான் உள்ளது.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
உங்களை சுற்றி உலவும் பாசிட்டிவ் விஷயங்கள், உங்களை பிரகாசமாக வைத்திருக்கும். இதனால், ஒவ்வொரு மணி நேரமும் உங்களுக்கு அழகாக தெரியும். நல்ல முடிவுகள் எடுப்பதற்கு நீங்கள் தான் முன்னெடுத்து செல்ல வேண்டும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
சிறிய விஷயங்கள் எல்லாம் உங்களை பாதிக்க அனுமதிக்காதீர்கள். உங்களுக்கு இருக்கும் தனிப்பட்ட சிக்கல்களை நண்பர்களுடனோ, துணையுடனோ பகிர்ந்து கவலையை விட்டு விலகுங்கள். உங்களால் எல்லாவற்றையும் செய்து முடிக்க முடியும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
நல்ல நேரத்திற்காக காத்திருக்க நேரிடும். காதல் கைகூடும். ஆனால், கவனம் தேவை. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணி, நல்ல வாழ்வை தொலைக்க வேண்டாம். தொலைந்தால் மீண்டும் வராது.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
உங்கள் கனவுகளை மகிழ்ச்சியாக எதிர்கொள்ளுங்கள். ஆனால், தவறான பாதையை தூக்கி எறியுங்கள். கடினமான தருணங்களில் இருந்து உங்கள் தலையை சற்று மறைத்தே வையுங்கள். அமைதியாக, நிதானமாக பணியை மேற்கொள்ளுங்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
நிதிநிலை நேற்றைவிட, இன்று சற்று மோலோங்கி இருக்கும். உங்கள் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்வீர்கள். நண்பர்களின் உதவியால் பலன்கள் கிடைக்கும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
அடுத்தவர்கள் உங்களைவிட சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள் என நினைத்து வருத்தப்பட வேண்டாம். நீங்கள் அவர்களை விட புத்திசாலிகள் என்பதை மறக்க வேண்டாம். நிதிநிலைமை ஏற்றமுடன் இருக்கும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
பணம் பத்தும் செய்யும். உங்கள் விஷயத்தில் பதினொன்னும் செய்யும். எதிரிகளை கவனமாக கையாளுங்கள். அங்கீகாரம் கிடைக்க தாமதமானாலும், இறுதியில் வெற்றி கிடைப்பது உறுதி.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு கிடைக்கும். உங்களை விரும்புபவர்களை நேசிக்கப் பழகுங்கள். உங்களை வெறுப்பவர்களையும் நேசிக்கப் பழகுங்கள். பல மாற்றங்கள் உண்டாவதை நீங்கள் உணர்வீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
உங்கள் திட்டங்களில் உங்களுடன் பணி செய்பவர்களையும், மற்றவர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். தலைமைப் பண்பு இயற்கையாக உங்களுக்கு உண்டு. அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள முயலுங்கள்.