Today rasi palan, rasi palan july 3rd இன்றைய ராசிபலன்
Today Rasi Palan, 21st September 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Advertisment
Rasi Palan 21st September 2019: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 21, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
Advertisment
Advertisements
வாக்குறுதிகளோ அல்லது உறுதிமொழியோ கொடுப்பதற்கு முன்பு, உங்கள் பர்ஸை ஒருமுறை திறந்து பார்த்துக் கொள்ளுங்கள். தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் என்பதை நினைவில் கொள்க. நிதானமாக செயல்பட வேண்டிய நாள், திரும்பவும் சொல்கிறோம்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
திட்டமிட்ட முடிவுகளை நோக்கி நகருங்கள். எதற்காகவும் தயங்கி நிற்க வேண்டாம். ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.விமர்சனங்களை அரவணைத்துக் கொள்ளுங்கள். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
உங்கள் வாழ்வை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் முக்கியமான நிகழ்வு இன்று நடக்கும். அது உண்மையில் உங்களுக்கு பயன் தரும். மேலும் பல நல்ல செய்திகள் உங்களை நோக்கி வரும் என்பது மகிழ்ச்சியான கூடுதல் தகவல்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
புது புது விஷயங்களை முயற்சி செய்து பார்ப்பீர்கள். அவற்றினால் நல்ல பெயரும் உங்களுக்கு கிட்டும். மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். சுய அறிவு உங்களுக்கு இப்போதெல்லாம் நன்றாகவே வேலை செய்வதை உணருவீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றும் போது, உங்களது செயல்பாடு தனித்து தெரியும். அதுவே உங்களுக்கு வெற்றி தான். உங்களது செயலுக்கு எல்லையே இல்லை.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
பணம் பத்தும் செய்யும். அதைப் பயன்படுத்தி வெற்றி காண்பீர்கள். இன்று உங்களுக்கான நாள் இல்லை. ஆனால், உங்கள் பணிகளில் தொய்வு இருக்காது.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
அடுத்த என்ன நடக்கும் என்று எப்போதும் கணிக்கும் உங்களின் அந்த திறமை தான் உங்கள் வெற்றியை எப்போதும் நிலையாக தீர்மானிக்கிறது. சுவாரஸ்யமான அனுபவங்களை சந்திப்பீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
கனிவுடன் நடந்து கொள்வது நல்லது. காதலில் வெற்றி கிட்டும். குடும்ப உறவில் மகிழ்ச்சி உண்டாகும். பேச்சுத் திறமையால் எதிரியையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
சில விஷயங்களில் அமைதி காப்பதே சிறந்தது. அப்படி, இன்று நீங்கள் பொறுமையுடன் நிதானமாக ஒவ்வொரு செயலையும் அணுக வேண்டும். இதனால், மற்றவர்கள் மனம் புண்படாமல் இருக்கும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
சிறப்பாக கையாளும் திறமை கொண்ட உங்களுக்கு, இன்று திருப்தியான நாள். எதற்காகவும் உங்கள் நிமிடங்களை வீணடிக்காதீர்கள். ஆனால், நேர்மையாக செயல்பட முயலுங்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
அனுபவ அறிவே உங்களுக்கு பல இடங்களில் உதவி செய்யும். அரசு பணியில் இருப்போருக்கு மேலதிகாரிகளுடன் நல்ல பெயர் கிடைக்கும். குழந்தை பராமரிப்பில் கவனம் தேவை.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
எந்த விஷயத்தையும் சாதாரணமாக கடந்து செல்ல வேண்டாம். தனிமையில் உங்கள் அறிவு பல ஐடியாக்களை கொடுக்கலாம். இது ஜெயிக்காது என்று நினைத்த ஐடியா கூட ஜெயிக்கலாம். ஆச்சர்யங்களை அள்ளித்தெளிக்கும் நாள்.