Rasi Palan 22nd February 2022: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 22nd February 2022: இன்றைய ராசி பலன், பிப்ரவரி 22ம் தேதி 2022
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :
நிதி விஷயங்களில் உங்களின் கீழ்த்தரமான அணுகுமுறையால் நண்பர்களும் இணைந்து செயல்படுபவர்களும் அதிர்ச்சிக்குள்ளாகப் போகிறார்கள். புத்திசாலித்தனமான ‘டீம் வொர்க்’ இல்லாமல் எதுவும் நடக்காது என்றாலும், ஒரு வளமான காலகட்டத்தை நீங்கள் இப்போது உணரலாம். ஒத்துழைப்பு என்பது ஒரு போராட்டம். அது உங்களுக்கு அவசியம்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :
இறுதி விருப்பத்தை தேர்வு செய்வதற்கும் மற்றவர்களின் உணர்வுகள் அல்லது கருத்துகளைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துவதற்கும் இது சரியான நேரம். நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் என்ன எதிர்பார்க்கலாம் என்பதைப் பொறுத்து இல்லாமல், உங்கள் எல்லைகளை வரையறுத்து, சரியா, தவறா என்று முழுமையான தரநிலைகளின் மூலம் உங்கள் நடத்தையை மதிப்பிடுங்கள். மற்றவர்கள் அவற்றை மதிப்பார்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) :
நாளுக்கு நாள் கிரகங்களின் ஏற்ற இறக்கங்களுக்குப் பின்னால் நீண்ட காலப் போக்குகள் உள்ளன. அவை பெரும்பாலும் பாதி மட்டுமே தெரியும். ஒரு சக்திவாய்ந்த ஆக்கபூர்வமான நேரம் இப்போது முடிவுக்கு வருகிறது, கடந்த நான்கு மாதங்களில் நடந்த அனைத்தையும் உள்ளுக்குள் நினைத்துப் பாருங்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :
தற்போதைய கிரக வடிவங்களின் அடிப்படைச் செய்தி, குறிப்பாக வியாழன் மற்றும் நெப்டியூன் ஆகியவற்றிலிருந்து வெளிவரும் செய்தி என்னவென்றால், நீங்கள் பலமான, பயனுள்ள, தனிப்பட்ட அர்த்தமுள்ள மற்றும் ஆன்மீக ரீதியில் பலனளிக்கக்கூடியவற்றைப் பற்றிக் கொண்டிருக்க வேண்டும். இது தான் உங்களுக்கு நல்ல அறிவுரையாக இருக்கக்கூடும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :
உங்களுக்கு நல்ல செய்தி என்னவென்றால், கிரக கட்டமைப்புகள் இன்னும் உற்சாகமாக உள்ளன. நீங்கள் விழிப்புடனும் வீச்சுடனும் இருந்தால், பாதகமான முன்னேற்றங்களைக் கூட உங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும். தள்ளிப்போட இது நேரமில்லை. நீங்கள் தொடங்க வேண்டிய இடத்தைத் தெரிந்துகொள்வது நல்லது. குறைந்தபட்சம் என்ன மாற்றங்கள் தேவை என்பதை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :
உங்கள் குறிப்பிடத்தக்க பகுப்பாய்வுத் திறன்கள் உங்களுக்குச் சிறப்பாக செயல்பட்டு, பேரழிவு தரக்கூடிய தவறுகளைச் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்கின்றன. ஒப்பீட்டளவில் மனக்கிளர்ச்சியான காலகட்டத்திற்குப் பிறகு, நீங்கள் மீண்டும் ஒரு நடைமுறை ரீதியான, திறமையான, அமைதியான மற்றும் திறன் மிக்க போக்கில் செல்வீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :
அனைத்து நிதி ஒப்பந்தங்களிலும் நேர்மை முக்கியமானது, குறிப்பாக கூட்டு ஏற்பாடுகளைப் பொருத்தவரை நேர்மை முக்கியமானது. உடன்பாடு எட்டப்பட்டால் மட்டுமே உங்கள் அடுத்த முக்கிய நகர்வு என்னவாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும். அதற்கு அவசரமான தனிப்பட்ட மற்றும் குடும்ப விஷயங்களைக் கையாள வேண்டியிருக்கலாம்!
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :
நீங்கள் தனிப்பட்ட சிக்கல்களில் சிக்கி இருந்தால், தினசரி அடிப்படையில் நிலைமையை மதிப்பீடு செய்யுங்கள். உங்கள் நிதித் திறனுக்காக நீங்கள் பாராட்டுக்களைப் பெறலாம். மேலும், பொதுவாக நல்ல உணர்வுகளுடன் உள்ள உங்களுக்கு கூட்டாளிகளின் உணர்வுகளைப் பற்றி கவலைப்படுவதற்கு கால அவகாசம் இருக்காது.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :
அனேகமாக, சில மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கௌரவக் கடனை, யாரோ ஒருவர் தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் இப்போது புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் சரியாக இருந்தீர்கள் என்பதை தெரிந்துகொள்வதன் மூலம் திருப்தியாக இருப்பீர்கள். ஆனால், எதிர்பாராத நிகழ்வுகளுக்குத் தயாராவது அவசியம், குறிப்பாக உங்கள் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இடங்களில் தயாராக வேண்டும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :
எதிர்பாராத வழிகளில் இருந்து செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. சிக்கலான வழிகள் உங்களுக்கு இழந்த ஒன்றைத் தரும். அது வந்தவுடன், உங்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடனும் தன்னம்பிக்கையுடனும் திட்டமிடத் தொடங்கலாம். கூட்டாளிகள் உங்கள் இலட்சியங்களை மதிக்கவேண்டும் என்பதே இதற்கு அர்த்தம்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :
நீங்கள் ஒரு பரபரப்பான காலத்திற்கு உச்சபட்ச தயார் நிலையில் இருக்க வேண்டும். குறிப்பாக, உங்கள் வீட்டுச் சூழ்நிலை மற்றும் குடும்ப உறவுகளில் எத்தனை முன்னேற்றங்கள் தேவை என்பதை நீங்கள் இப்போது அறிந்திருக்கிறீர்கள். வரும் நாட்களில் உங்கள் ஆன்மீகத் தேவைகளிலும் கவனம் செலுத்துவீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :
உங்களுக்கு அச்சங்கள் இருந்தபோதிலும், நீங்கள் நிதி ரீதியாக சங்கடப்பட வாய்ப்பில்லை. பெரும்பாலான துறைகளில் உங்கள் விவகாரங்கள் இப்போது உறுதியான நடைமுறைப் பாதையில் உள்ளன. இது உங்களைச் சார்ந்திருக்கும் அனைவருக்கும் வரவேற்கத்தக்க செய்தியாக இருக்க வேண்டும். நீங்கள் பொதுவாக பொறுப்பை விரும்புவதில்லை. ஆனால், நீங்கள் ஏற்ற பொறுப்பை நன்றாகச் செய்கிறீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“