scorecardresearch

Rasi Palan 2nd May 2022: இன்றைய ராசிபலன்

இன்றைய ராசி பலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

May 2nd 2020 Rasipalan, Today rasi palan, daily rasipalan, rasi palan 2nd May horoscope today, daily horoscope, horoscope 2022 today, today rasi palan, astrology, horoscope 2022, new year horoscope, இன்றைய ராசிபலன், மே 2ம் தேதி ராசிபலன், இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், இன்றைய தினசரி ராசிபலன், தினசரி ராசிபலன் , மாத ராசிபலன், மேஷம், ரிஷபம், கன்னி, மீனம், சிம்மம், துலாம், மிதுனம், கடகம், horoscope today, daily horoscope, horoscope 2022 today, today rashifal, astrology, horoscope 2022, new year horoscope, today horoscope, horoscope virgo, astrology, daily horoscope virgo, astrology today, horoscope today,scorpio, horoscope taurus, horoscope gemini, horoscope leo, horoscope cancer, horoscope libra, horoscope aquarius, leo horoscope, leo horoscope today

Rasi Palan 2nd May 2022:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 2nd May 2022: இன்றைய ராசி பலன், மே 2ம் தேதி 2022

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) 

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :

சந்திரன் தொடர்ச்சியாக கவர்ச்சியான நுண்ணுணர்வு மிக்க அம்சங்களை உருவாக்குகிறது. பல காதல் கனவுகளையும் மாயைகளையும் தூண்டுகிறது. எல்லா வகையான தனிப்பட்ட முறையீடுகளாலும் நீங்கள் எளிதில் பாதிக்கப்படுவீர்கள். நீங்கள் அன்பைத் தேடுகிறவர்களாக இருந்தால், அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். ஆனால், நீங்கள் அதற்கான நல்ல வாய்ப்பையும் கொடுக்க வேண்டும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : 

அந்தரங்க ரகசியங்கள் உள்ளவர்கள் மிகவும் கவனமாக நடக்க வேண்டும். ஒருபுறம் நீங்கள் யாரோ ஒருவரின் பின்னால் செல்ல ஆசைப்படலாம், மறுபுறம், கிரகங்களும் மற்றவர்களும் நம்பகமான மனநிலையில் இல்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21) : 

உங்களுடைய தந்திரமான கிரக அம்சங்கள் நடைமுறை விஷயங்களை எளிதாக்கலாம். ஆனால், தனிப்பட்ட ஈடுபாடுகளை சிக்கலாக்கும். நிதி பரிவர்த்தனைகளை விரைவுபடுத்துவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவை உங்கள் வீட்டையும் குடும்ப உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :

உங்கள் உறவுகளுடன் சந்திரன் இணைந்திருப்பது உங்கள் வாழ்க்கையில் மற்றவர்கள் வகிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்தும். உண்மையில், நீங்கள் தனியாக செல்ல முடியும் என்று நீங்கள் நினைக்கும் அளவுக்கு, அவர்கள் இல்லாமல் நீங்கள் உண்மையில் வாழ முடியாது என்பதையும் நினைவுபடுத்தும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :

இன்றைய சூழ்நிலையில் ஒரு காதல் சலசலப்பு உள்ளது. இது உங்கள் சிம்ம ராசியின் ஆன்மாவை மகிழ்வித்து உற்சாகப்படுத்தும். உங்களின் சூழ்நிலையை இன்னும் வண்ணமயமாக மாற்ற நீங்கள் ஏதாவது செய்ய முடியுமானால், தயவுசெய்து இப்போதே செய்யுங்கள். நீங்கள் வழக்கத்திற்கு மாறான அழைப்புகளையும், அந்நியர்களிடமிருந்து வருகைகளையும் எதிர்பார்க்கலாம்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : 

இந்த வாரம் சந்திரனின் சுழற்சி ஒரு முக்கிய கட்டத்தை அடைகிறது. அதாவது நீங்கள் பல திட்டங்களை முடிக்கத் தொடங்க வேண்டும். குறிப்பாக, சட்ட விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு தொடர்புகள் இப்போது தீர்க்கப்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களைவிட ஒரு படி மேலே இருங்கள். உள்நாட்டு முன்னேற்றங்களுக்கு உங்கள் ஆலோசனைகளை முன்வையுங்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : 

உங்கள் செயலில் நல்ல்ல விஷயங்களுடன் அன்றாட விவகாரங்களை செய்யுங்கள். பணிபுரியும் துலாம் ராசிக்காரர்கள் முக்கியமாக குடும்ப உறவுகள், வீட்டுக் கடமைகளில் ஈடுபடுவார்கள், எனவே செயல்படுத்துவதற்கு முன்னால் இருங்கள். உங்கள் உள்ளுணர்வைப் பின்பற்றுங்கள், மற்றவர்களின் சிறிய குறைபாடுகளை பொறுத்துக்கொள்ளாதீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :

உங்கள் ராசியில் புதன் மற்றும் வியாழன் ஆகியவற்றுடன் வீனஸ் இணைந்திருப்பது உங்களை தீவிரமாக நல்ல எண்ணம் கொண்டவராக ஆக்குகிறது. ஆனால், நம்பிக்கைகள் அதிகமாக இருந்தாலும், தவறான புரிதலுக்கான காரணங்கள் எல்லா மூலையிலும் எல்லா இடத்திலும் இருக்கிறது. பேசுவதற்கு முன் யோசியுங்கள், இல்லையேல் நீங்கள் தவறாக வார்த்தையை விட்டுவீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : 

உங்கள் ராசியில் நிதி நட்சத்திரங்கள் உறுதியான ஆரோக்கியத்துடன் காணப்படுகின்றன. நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், நீங்கள் பணத்தைச் சேமிக்க அல்லது சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை உங்கள் வீடு மற்றும் குடும்ப உறவுகளுடன் தொடர்புடையவை. கடந்த முறை நீங்கள் துணைவரிடம் யோசனை கேட்காமல் போயிருக்கலாம். ஆனால், இந்த முறை மீண்டும் கேட்பதற்கு ஒரு நல்ல காரணம் இருக்கிறது.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :

உங்கள் ராசியின் மீது சந்திரன் ஒரு சக்திவாய்ந்த பங்கை செலுத்துகிறது. இது உங்களுக்கு சாதகமாக முரண்பாடுகளை அடுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறியாகும். திட்டங்கள் தவறாக நடந்தால், உண்மையான சூழ்நிலையை போதுமான அளவு மதிப்பிட முடியாத அளவுக்கு நீங்கள் உணர்ச்சிவசப்படுவீர்கள். அனேகமாக, நீங்கள் நினைப்பது போல, சூழ்நிலைகள் உண்மையில் மர்மமானவை அல்ல.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :

கூட்டுறவு மற்றும் தொழில்சார் நலன்கள் இரண்டும் சில பாதகமான கிரக தாக்கங்களால் வலியுறுத்தப்படுகின்றன – எப்படியோ இரண்டும் இணைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், இன்னும் ஏதேனும் பதில் நடவடிக்கைகள் கிடைக்குமா என்பது சந்தேகமே – அனேகமாக, இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு எந்த பதிலும் இல்லை. இந்த நேரத்தில், பொறுமை உங்களுக்கு பொருத்தமான ஒன்று.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : 

உங்கள் ஆற்றலை ஆளும் செவ்வாய் கிரகம், உணர்ச்சிவசப்பட்ட புளூட்டோவிற்கு காதல், கற்பனை மற்றும் பொறுப்பற்ற அம்சத்திற்கும், சனியுடன் தீவிர தொடர்புக்கும் செல்கிறது. இதில் செய்தி தெளிவாக உள்ளது; நீங்கள் அனைத்து சமீபத்திய வாய்ப்புகளையும் நிரந்தரமாக தக்க வைக்க வேண்டும். அதாவது, நிச்சயமாக, நீங்கள் அவற்றை தொடர விரும்பினால், தக்க வைத்துக்கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Horoscope news download Indian Express Tamil App.

Web Title: Rasi palan today tamil horoscope