Today Rasi Palan, 29th September 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 29th September 2020: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 29, 2020
மேஷம் (மார்ச் 21 - ஏப்ரல் 21 ) : கடுமையான விமர்சனங்கள், நிறைவேறாத வாக்குறுதிகள் சுமந்து வருகிறீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நீங்கள் கற்பனை செய்வதை விட உங்களின் சுமைகள் மிகவும் இலகுவானதாகத் தெரிகிறது. நீங்கள், எதையும் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
ரிஷபம் ( ஏப்ரல் 21 - மே 21 ): உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வேறேதும் சூழ்நிலைகள் காரணமாக உங்களின் நிதி நிலை தடுமாறுவதற்கு சிறிய வாய்ப்பு உள்ளது. இருப்பினும், உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உற்றுப் பாருங்கள், தினசரி வாழ்க்கை சுலபமாக நடக்கிறது என்பதை உணர்வீர்கள். மறைமுகமாக, ஒரு பெரிய சுமையிலிருந்து மீண்டு வருவதை உணருவீர்கள்.
மிதுனம் ( மே 22 - ஜூன் 21 ) : வாழ்கையின் மீது நீங்கள் கொண்ட அசாத்திய நம்பிக்கையும், கற்பனையயும் தான் உங்களது பலம். ஆங்காங்கே, தட்டுப்படும் உண்மைகளை விட, உங்களின் நம்பிக்கையை மீது நீங்கள் அதிக ஈடுபாடு கொண்டவராய் இருப்பீர்கள்.
கடகம் (ஜூன் 22 - ஜூலை 23 ) : முழுமையாக மனஅமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் உறவுகளை சந்திக்க நேர்ந்தால், உங்கள் வாழ்க்கையோடு அவர்களை இணைத்துக் கொள்ள தயங்காதீர்கள்.
சிம்மம் ( ஜூலை 24 - ஆகஸ்ட் 23 ): உங்களுக்கு சாதாகமான சூழல் இல்லையென்றாலும், நீங்கள் நம்பும், உள்வாங்கும் குணங்களை கைவிடாதீர்கள். வாழ்க்கை எவ்வளவு அழகனாது என்பதை பார்க்க மறுக்கும் மக்களின் உணர்ச்சிகளை கண்டு கொள்ளாதீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 - செப்டம்பர் 23 ) : உணர்வுகளை கட்டுப்படுத்தாதீர்கள். உங்கள், உணர்வுகளையும், ஆசைகளையும் வெளிபடுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. குழந்தைகளிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்புங்கள்.
துலாம் (செப்டம்பர் 24 - அக்டோபர் 23 ) : கிரகங்களின் சாதகமான பார்வையினால் நற்பலன்களை பெறுவீர்கள். செயல்களில் விழிப்புடன் இருப்பது நல்லது . மற்றவர்களால் உங்களை நீங்கள் வருத்திக் கொள்ளாதீர்கள்.
விருச்சகம் (அக்டோபர் 24 - நவம்பர் 22 ) : உங்கள் திறமைகள் குறித்த தவறான புரிந்துணர்வுகள் மற்றவர்களிடம் நிலவி வருகிறது. சிலவற்றை அதிகப்படுத்தி சொல்லி அவதிப்பட்டு வருகீறிர்கள். அனைத்து குழப்பங்களையும் தெளிவுபடுத்த வேண்டிய நேரம் இது.
தனுசு (நவம்பர் 23 - ஜனவரி 20 ): முதலீடு செய்வது குறித்த சிறந்த முடிவுகளை எடுக்க வாய்ப்பு வரும். நம்பிக்கையுடன் காத்திருங்கள்.
மகரம் (டிசம்பர் 23 - ஜனவரி 20 ): உங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. தொழில் வாழ்க்கையும், மண வாழ்கையும் சிறந்து விளங்கும்.
கும்பம் ( ஜனவரி 21 - பிப்ரவரி 19 ): உங்கள் உழைப்பிறகு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். பிறரின், எண்ண ஓட்டங்களை கண்டு குழம்ப வேண்டாம். அனைத்து இடங்களிலும் உங்களின் இயல்பை வெளிப்படுத்துவது நல்லது.
மீனம் ( பிப்ரவரி 20 - மார்ச் 20 ): துன்பத்தில் இருந்து மீண்டு வரும் உங்களின் அசாத்திய திறமைகள் அனைவராலும் பேசப்படும். உண்மையில் நீங்கள் சத்திரியன் அல்ல சாணக்கியன். அடுத்த வாரம் சில முடிவுகளை துணிந்து எடுப்பீர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.