Rasi Palan 3rd November 2020: இன்றைய ராசிபலன்

உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்

By: November 3, 2020, 7:18:13 AM

Rasi Palan 3rd  November 2020: இன்றைய ராசிபலன்: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக்கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 3rd November 2020: இன்றைய ராசி பலன், நவம்பர் 2, 2020:

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

ஜோதிடர்களுக்கு இரண்டு வகையான காலம் இருக்கிறது. காலத்திற்கு கிரேக்க சொற்களில் பெயரிடப்பட்டுள்ளது. முதலில் Chronos or clock time என்ற முறையில் நாம் காலத்தை அளவிடுகிறோம். அடுத்து காலத்திற்கு Kairos or qualitative time என்ற பயன்பாடு உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட நாளின் தன்மையை நமக்கு சொல்கிறது. அந்த நாள் நல்லதா என்பதை திருமணத்திற்காகவோ அல்லது வேலைக்காகவோ சொல்கிறது. நாம் ஜாதகக் கணக்குகளை எழுதும்போது கைரோஸைப் பயன்படுத்துகிறோம்.

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : வரும் நாட்களில் பிறர் கூறும் அறிவுரைகளை காது கொடுத்து கேட்பது மிகவும் நல்லது. பிறரின் கூற்றுகளுக்கு மதிப்பளிப்பதைத் தவிர உங்களுக்கு வேற வழியில்லை என்று எண்ணிக் கொள்ளுங்கள். பெரிய சமரசித்திற்கு வழிவகுக்கும்  சிறிய மதிப்பான தோல்விகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.   

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21):  நிதி நிலைமைகளை மேலும் சுலபமாக்குவதும் அவசியம். பணப்புழக்கத்தை நீங்கள் மிக நெருக்கமாக கண்காணிக்க வேண்டும்.  மனநிலையில் பெரிய மாற்றங்களைக் காண்பீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21): உங்களின் கிரக அமைப்பு,  வாழ்வில் சாதகமான சூழலை உருவாக்கிக் கொடுக்கும். பெரிய பிரச்சினைகள் கடந்து போகும். நெருக்கமான உறவுகளில் காணப்படும் மனக்கசப்புகளை போக்க நேரம் கிடைக்கும்.

கடகம் (ஜூன் 22  – ஜூலை 23) :  எதைப் பற்றியும் நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். உணர்திறன் கொண்ட எவரும் உங்களைப் போன்ற ஒருவரை மிக நீண்ட காலம் புறக்கணிக்க முடியாது. எளிமையான மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) : மோசமான கனவுகளை நோக்கி கவலைப்பட வேண்டாம். அதனை தகர்த்தெறிய முயற்சி செய்யுங்கள். அதில் உங்களுக்கு வெற்றியும் கிடைக்கும். பணியிடத்தில் நல்ல பெயரைப் பெறுவீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :  தான்தோன்றித்தனமாக செலவு செய்வதை தவிர்ப்பது உங்களுக்கும் நல்லது, குடும்பத்துக்கும் நல்லது. தீர ஆராயாமல் எந்த முடிவுக்கும் வராதீர்கள். அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :  குழந்தை பாக்யம் உண்டாகும். பல நாள் காத்திருந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடனடியாக மாற்றங்கள் ஏற்படாவிட்டாலும், நீங்கள் விரும்பியவை நடக்கும். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :  நீங்கள் எங்கு வேலைப் பார்த்தாலும், அங்கு ஆதிக்கம் செலுத்துவீர்கள். ஆனால், அதனால் சில எதிர்ப்புகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :  பார்ப்பதற்கு பசு போல இருந்தாலும், புலியைப் போல் பாய்வீர்கள். உங்களை ஒரு குறைச் சொன்னால், சொன்னவர் அடுத்த முறை உங்களை தேடி வந்து பாராட்ட வைப்பீர்கள். வைராக்கியம் நிறைந்த உங்களுக்கு இன்றைய தினம் மேலும் ஒரு வெற்றியை கொடுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :  கலவையான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள மறுப்பீர்கள். உங்கள் தடுமாற்றத்திற்கு அதுவும் ஒரு காரணம், புரிந்து கொள்ளுங்கள். கற்றதை பயனுள்ளவாறு பயன்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள். வெற்றி நிச்சயமாகும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :  சரிசமமான விகிதத்தில் ஏற்ற, இறக்கங்களை காண்பீர்கள். அது கற்றுத் தரும் பாடம், உங்களை கூர்மையாக்கும். மேம்படையச் செய்யும். செல்லும் இடங்களில் இனி வெற்றியை குவிப்பீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : வெளிநாடுச் செல்லும் சூழல் உருவாகும். அதனை சாதகமாக்கிக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். கணிசமான அளவில் உங்கள் நிதிநிலைமை உயரும். சுமாரான நாள் இது.

Get all the Latest Tamil News and Tamil Horoscope at Indian Express Tamil. You can also catch all the latest update on Rasi Palan by following us on Twitter and Facebook

Web Title:Rasipalan 3rd november morning rasipalan daily horoscope

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X