Rasi Palan 17th June 2022: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 17th June 2022: இன்றைய ராசி பலன், ஜூன் 17ம் தேதி 2022
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :
உறுதியான செவ்வாய் கிரக அமைப்பு இப்போது ஒரு விளைவைக் கொண்டிருக்கிறது. இன்று அது உணர்ச்சிகரமான சந்திரனின் நிலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. உங்களுடைய உணர்ச்சிகரமான திறமைகளைக் காட்ட வேண்டும் என்று உணர்ந்தால், தாராளமாக வெளிப்படுத்தலாம். நீங்கள் முன்னாளில் பெற்ற வெற்றிகளை மீண்டும் பெற விரும்பினால், தாராளமாக பெறலாம்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :
நீங்கள் எப்பொழுதும் உங்களைப் பற்றிய அறிவுப்பூர்வமான நகைசுவையை வைத்திருங்கள். முக்கியமாக இப்போது உங்கள் கருத்தில் இருந்து விலகி செல்வது உங்கள் எதிர்கால நலன்களைப் பாதிக்கும். கூட்டாளிகள் என்ன செய்கிறார்கள் என்பதை அடுத்த வாரத்தில் கண்டறியலாம். இதற்கு எளிய தீர்வு என்னவென்றால், உங்கள் திட்டங்கள் உறுதியாக இருப்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) :
வேலையிலும் வீட்டிலும் இணக்கத்தின் அவசியத்தை உணர்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டும். வாக்குறுதியளிக்கப்பட்ட கூட்டம் அல்லது நிகழ்ச்சிகள் குறித்த உங்கள் கருத்துக்களை அன்பானவர்கள் அறிந்திருப்பதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும். நீங்கள் அவர்களிடம் விளக்கினால், அவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்று பாசாங்கு செய்யக்கூடாது.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :
வெளியே வந்து ஷாப்பிங் செய்வதற்கான நேரம் இது. நீங்கள் உண்மையிலேயே இன்று நம்பிக்கையுடன், உறுதியாக இருந்தால் உங்கள் திட்டங்கள் நாளை நடக்கும். உங்கள் மன உறுதியை உயர்த்த, தாமதமாக பலனடைய சிறிது பணம் செலவழிக்கலாம். ஆனால், உங்களுக்கு இன்னும் ஒரு நீண்ட கால தீர்வு தேவை. எனவே, நீங்கள் பிரச்னையில் சிக்கி இருக்கிறீர்கள் என்று கற்பனை செய்ய வேண்டாம்!
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :
நீங்கள் நன்மை பயக்கும் சந்திர அமைப்பில் இருக்கிறீர்கள். அது உங்களை பெரிய அளவில் உணர்ச்சிவசப்படச் செய்யும். அதே நேரத்தில், இரக்கமுள்ளவர்களாகவும் இருக்கும். நீங்கள் கொஞ்சம் ஏமாறக்கூடியவராகவும் இருக்கலாம். அதனால், விழிப்புடன் இருங்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :
நீங்கள் கவலைப்பட நினைக்கிறீர்கள். சில சமயங்களில் நீங்கள் தவறான நபரை ஆதரித்தீர்களா என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இருப்பினும், இப்போதே, விருப்பங்களைப் பரிசீலிக்க கூடுதல் நேரத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும். தற்போதைய முன்னேற்றங்கள் அவசர முடிவுகளை எடுப்பதற்கு முன் தங்களைத் தாங்களே செயல்படுத்துவதற்கு நேரத்தை வழங்க வேண்டும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :
உங்கள் சமூக நட்சத்திரங்கள் மிகவும் உற்சாகமாகத் தோன்றத் தொடங்கியுள்ளது. மேலும், புதிய நண்பர்கள் மற்றும் கவர்ச்சிகரமான சந்திப்புகளுக்காக நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காதலைப் பொறுத்தமட்டில், பாதுகாப்பு பெரிய அளவில் முக்கியப் பிரச்சினையாக இருப்பது போல் தெரிகிறது. உங்களிடம் இருப்பதை உறுதியாகப் பற்றிக் கொள்ள விரும்புகிறீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :
இன்றைய கடுமையான கிரக அம்சங்கள், வீட்டிற்கும் வேலைக்கும் இடையே, குடும்ப நலன்கள் மற்றும் வெளிப்புற லட்சியங்களுக்கு இடையே தேர்வு செய்ய உங்களை கட்டாயப்படுத்துகிறது. உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் தெளிவுபடுத்தியவுடன், உங்கள் வழியில் செல்வதற்கான சுதந்திரத்தை மற்றவர்கள் உங்களுக்கு வழங்க வேண்டும். ஆனால், உண்மையில் நீங்கள் விரும்புவது சுதந்திரமா? நீங்கள் அந்த சுதந்திரத்தைப் பெறாத வரை அதைப் பற்றி உங்களுக்குத் தெரியாது!
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :
கடந்த காலத்தை விடுவிடுங்கள். எதிர்காலத்தின் முயற்சிக்கப்படாத மற்றும் சோதிக்கப்படாத தீர்வுகளில் கவனம் செலுத்துங்கள். இது வேலையில் நிலைமைகளை மேம்படுத்துவதற்கும், கலர்ஃபுல் ஆக்குவதற்கும் பொதுவாக வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் உங்களுக்கு ஒரு நல்ல சக்தியாக இருக்கும். நீங்கள் உறுதியாக இருக்கும்போது, உங்களுடன் இருப்பவர்களுக்கு நீங்கள் அவர்களுக்குப் பின்னால் இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :
அனேகமாக, நீண்ட கால நிதி பொறுப்புகள் மற்றும் கடமைகள் கவலையை ஏற்படுத்துகின்றன. ஆனால், கூட்டாளிகள் உங்கள் கண்ணோட்டத்தை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். காலத்தின் குணப்படுத்தும் சக்தியை இன்னும் கொஞ்சம் நிதானமாக நம்புங்கள். மிக முக்கியமானது இன்று நாளையை எப்படி முற்றாக மறக்கச் செய்யும் என்பது விசித்திரமானது.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :
இது மிகவும் மன அழுத்தமான நாள், ஆனால் எந்த வகையிலும் மோசமான நாள் இல்லை. மாற்றத்தை வரவேற்க நீங்கள் எவ்வளவு தூரம் தயாராக இருக்கிறீர்கள் என்பதையும், அது எந்த அளவிற்கு மோதலை உங்களுக்கு சாதகமாக மாற்ற முடியும் என்பதையும் பொறுத்தது. இது ஒரு கிளுகிளுப்பாக இருக்கலாம். ஆனால், அதன் பிரகாசமான பக்கத்தைப் பாருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுடைய நம்பிக்கை வெற்றியை வளர்க்கிறது.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :
பிஸியாக இருங்கள், சுறுசுறுப்பாக இருங்கள். இது வழக்கமான வேலைகளைச் சமாளிக்கும் நாளாக இருக்கும். உங்களால் முடிந்த அளவு சாதியுங்கள். இன்று முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் இப்போது கடினமாக உழைக்கிறீர்கள், அதனால், பிறகு உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும். அது உங்களுக்கும் தெரியும் ஆனால், அதை நினைவுபடுத்துகிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“