Rasi Palan February 15th 2021: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 15th February 2021: இன்றைய ராசி பலன், பிப்ரவரி 15ம் தேதி 2021
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனோபாவம் மற்றும் சிந்தனையை மாற்ற வேண்டியது அவசியம். சிறப்பானவற்றை அடைவதற்கான உங்களது தேடல் பாராட்டுக்குரியது, பாராட்டப்படவேண்டியது.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : உன்னத இலக்குகளிலிருந்து உங்களை திசைதிருப்ப நினைப்பவர்களிடம் இருந்து விலகி கொள்ளுங்கள். பிரச்சினைகளுக்கு நீண்ட கால, நீடித்த தீர்வுகளைக் கண்டுபிடிக்கும் நேரம் வந்துவிட்டது. அடுத்த பன்னிரண்டு மாதங்களுக்கு சேர்த்தே திட்டமிடுங்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) : சுக்கிரன் வலுவாக இருப்பதால் வாழ்வில் தெளிவு பிறக்கும். இருப்பினும், ஏதாவது ஒரு தவறு நடந்தால் அது உங்கள் சொந்த திறமையின்மையின் விளைவாக இருக்கும். துணைவியாருடன் பேசுங்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) : குழுவில் மற்றவர்கள் தங்கள் பங்களிப்பை அளிக்கவில்லை என்ற தவறான செய்திகளை நீங்கள் கண்டு கொள்ளத் தேவையில்லை. நீங்கள் பெறும் தகவல்களுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. உங்கள் முயற்சியில் நீங்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) : மனநிறைவு அடைய வேண்டாம். சக ஊழியர்களுடன் கருத்தியல் வேறுபாடுகளை தவிர்க்க வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளை அதிகம் பயன்படுத்திக் கொள்ளவும். முழுமையான திட்டமிடல் அவசியம்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : அன்றாட விவகாரங்களில் இருந்து உங்களின் பார்வையை விரிவுபடுத்தி, வாழ்நாள் முழுவதும் பல லட்சியங்களை நிறைவேற்ற திட்டவட்டமான நகர்வுகளை மேற்கொள்ளுங்கள். ஒரு காதல் கை கூடும் நிலையில் உள்ளது. இது மன நிம்மதிக்கு வழிவகுக்கும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : அமைதியான, நிலையான, பாதுக்காப்பான நாளாக அமையும். கிரகங்களின் சாதகமான பார்வையால், மேன்மை கிடைக்கும். பொருளாதார விசயங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. இறுதி முடிவுகளை சற்று தள்ளிப்போடுவது நல்லது.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) : புதிய அடையாளத்துடன் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் அறிவுரைகள் சிறந்ததாக இருக்கலாம். தவிர்க்க முடியாத பிரச்சனைகள் என்று எதுவுமில்லை. சமரசமே சிறந்த ஆயுதமாகும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22): வரும் வாரங்களில் வாழ்க்கை துணைவியாரின் எதிர்பார்ப்புகள் மற்றும் முன்னுரிமைப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்குவீர்கள். உண்மைகளை அறிந்து கொள்வதற்கும், அதனுடன் உரையாடுவதற்கும் இது சிறந்த நேரம்.
கும்பம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) : சாத்தியமான ஆக்கபூர்வமான திறமை மற்றும் அறிவார்ந்த வாழ்க்கையை நீங்கள் இப்போது காணலாம். புதிய வாய்ப்புகள் மற்றும் புதிய கண்ணோட்டங்களால் உற்சாகப்படுவீர்கள்.
கும்பம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) : நீங்கள் ஆழமாக சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எதையும் விட்டுக் கொடுக்காமல்,வ அதே நேரத்தில் சுமுகமான செயலாக்கத்தின் மூலம் வெற்றி பெறுவீர்கள். பிறருக்கு மதிப்பளிக்கும் உங்களது இயல்பான மனோபாவம் வெற்றியைத் தேதி தரும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20): ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த போதிலும், வணிக செயல்பாடுகள் தொடர்ந்து அதிகரிக்கும். சில தவறான புரிதல்கள் தகர்க்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil