Rasi Palan 3rd June 2022: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 3rd June 2022: இன்றைய ராசி பலன், ஜூன் 3ம் தேதி 2022
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :
ஏதோ ஒன்று நடந்துகொண்டிருக்கிறது அதைக் கட்டுப்படுத்துவது கடினம். ஆனால, அது கடந்த காலத்தில் மிச்சமிருந்த நிதி சிக்கல்களை நீடிக்கிறது. உண்மையில், இது அரைகுறையான மனைநிலையில் புரிந்துகொள்ளப்பட்ட ஒன்றே தவிர வேறொன்றுமில்லை. இது உங்களை எதிர்மறையான, பயனற்ற செலவுமிக்க முறையில் செயல்பட வைக்கிறது.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :
இன்றைய முக்கிய கிரக அம்சம் சந்தேகமே இல்லாமல், உணர்ச்சிகரமானதாகவும், நிலையற்றதாகவும் இருக்கிறது. ஆனால், மற்றவர்களின் கோபத்தை தணிப்பது மிகவும் எளிதானது. நீங்கள் அவர்களைப் பார்க்கும்போது நிதானமாகவும் அனுதாபமாகவும் உண்மைகளை விளக்குவதன் மூலம் அவர்களின் கோபத்தை தணிக்கலாம். அவர்களுக்காக நீங்கள் ஒருவரின் மனதை தயார்படுத்த வேண்டியிருக்கும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) :
தற்போதைய கிரக அமைப்புகளின் முழு தாக்கத்தையும் புரிந்துகொள்வது கடினமாக இருக்கும். உங்களுக்கு எதுவுமே சரி இல்லாத விசித்திரமான உணர்வு இருக்கலாம். அது ஒருபுறம் இருக்கட்டும், நீங்கள் உங்களுக்காக ஏதாவது செய்ய விரும்பினால், நாள்பட்ட உடல்நல பிரச்னைகளை சரி செய்யுங்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :
ஆசைகள் அதிகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. நீங்கள் அதிக உணர்வு பூர்வமாக தொடர்பு இல்லாத நண்பர்களின் நட்பை விரும்பலாம், ஆனால், நீங்கள் இருவரும் நெருக்கமான சந்திப்புகளுக்குச் சென்றால், நீண்ட காலமாக புதைந்திருக்கும் உணர்வுகள் மனதின் அடி ஆழத்திலிருந்து வெளிப்படுத்துவதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :
நீங்கள் மிகவும் உறுதியான நிலையில் இருக்கிறீர்கள். அப்படி இருப்பது இது முதல் முறை அல்ல. ஆனால், அப்படி இருப்பது உங்களை உணர்ச்சிப் பிடியில் இருந்து பாதுகாக்காது. சில மணி நேரங்கள் கண்ணீர் காட்சிக அதிகரிக்கிறது, ஆனால் அமைதியை உருவாக்கி குழப்பத்தை சரிபடுத்தும் திறனும் அதிகரிக்கிறது.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :
இன்று நீங்கள் ஒருவித வெளிப்பாட்டைப் பெறலாம். நீங்கள் ஒரு வரவேற்கத்தக்க செய்தியைக் கேட்கலாம். மேலும், என்ன நடக்கிறது என்பதை நீங்கள் இறுதியாக அறிந்திருக்கிறீர்கள் என்ற உணர்வு அனைத்தையும் பயனுள்ளதாக்கும். வேலையில் உணர்ச்சியின் வெளிப்பாட்டை நீங்கள் எதிர்பார்க்கலாம். அனேகமாக, இந்த நாளில் அது தாமதமாகவும் வெளிப்படலாம்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :
சில சமயங்களில் நீங்கள் ஒரு விஷயத்த்ல் எப்போது ஈடுபடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, அடுத்த வாரத்தில், நீங்கள் பெரிய பிரச்னைகளில் தலையிட விரும்பினால், பிரச்னைகளை புறக்கணியுங்கள். வழக்கத்திற்கு மாறான முறையில் வெளிச்சத்திற்கு வரும் விஷயங்கள், உங்களை விட மற்றவர்கள் பணத்தை கையாள்வதில் சிறந்தவர்கள் என்று தெரிவிக்கும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :
சரியான திசையின் எடுத்து வைக்கும் முதல் படி, யாரோ ஒருவர் எல்லா நேரத்திலும் முற்றிலும் சரியானவராக இருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இருப்பினும், செயல்கள் மற்றும் நடத்தையைப் பொறுத்த வரையில் அப்படியிருந்தாலும், உங்கள் நம்பிக்கைகளும் கற்பனையும் இன்னும் விழிப்புடன் இருக்கிறது.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :
நீங்கள் நேர்மறையாக உணர வேண்டும், ஆனால், உங்கள் சந்தேகங்களை கிளறினால், நீங்கள் குழப்பமாக உணரலாம். இருப்பினும், குழப்பமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. தினசரி விஷயங்களை முன்னோக்கி கொண்டு செல்லுங்கள். உடனடி மற்றும் வழக்கமான தேவைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் நீங்கள் அபரிமிதமான திருப்தியைப் பெறலாம்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :
உங்களுக்கு சாதாரணமான விஷயங்கள்கூட கடினமாகத் தெரியக்கூடும். அது கடினமான நேரத்தை அளிக்கக்கூடும். மற்றவர்கள் கடினமான விஷயத்தை செய்ய தங்களுக்கு உரிமை இருப்பதாக ஏன் நினைக்கிறார்கள் என்பது முழு மர்மமாக உள்ளது. நீங்கள் காதலர், குழந்தைகள் மற்றும் மனதில் இளமையாக இருப்பவர். நீங்கள் நம்பக்கூடியவர்களுடன் பழகுவது மிகவும் நல்லது.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :
நீங்கள் பொதுவாக மிகவும் எச்சரிக்கையாக இருப்பீர்கள். உங்கள், ஆறாவது அறிவு முழுமையாகச் செயல்பட்டால், ஒரு முதலாளியோ அல்லது அதிகாரியோ பகுத்தறிவற்ற முறையில் நடந்துகொள்வதை நீங்கள் கண்டறியலாம். நீங்கள் அவர்கள் வழியிலிருந்து விலகி இருக்க முடிவு செய்யலாம். அதுவே நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயமாக இருக்கலாம்!
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :
பயணம் உங்கள் மனதில் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. பயணத்திற்கு வாய்ப்பு இல்லை என்றால், குறைந்தபட்சம் நீங்கள் தொலைநோக்கு கற்பனையில் ஈடுபட வேண்டும். இன்று உங்களால் சாகசப் பயணம் மேற்கொள்ள முடியாவிட்டால், உங்கள் வாழ்க்கையை ஜனரஞ்சகமாக வலுப்படுத்த ஏதாவது வழி இருக்கிறதா? எறு பாருங்கள். முன்முயற்சி எடுத்து வெளிநாட்டில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“