Rasi Palan 8th April 2022: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 8th April 2022: இன்றைய ராசி பலன், ஏப்ரல் 8ம் தேதி 2022
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :
உங்கள் கடந்தகால ஆக்கப்பூர்வமான முயற்சிகளின் விளைவாக அல்லது மறைமுகமாக வெளிவரும் சுவாரசியமான செய்திகள் பற்றி சிறப்புக் கவனத்தில் கொள்ளுங்கள். இப்போது உங்களுக்கான அறிவுரை என்னவென்றால், உங்களை அடிக்கடி தடுக்கும் சமூக மற்றும் குடும்ப அழுத்தங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு, உங்கள் உணர்ச்சிமிக்க மேஷ ராசி குணங்களுக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :
நீங்கள் இப்போது கடினமாகப் போராடி குடும்பம் மற்றும் வீட்டு உறவுகளை சீர்குலைத்த எந்த முட்டுக்கட்டைகளையும் உடைக்கும் நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. இதுபோன்ற பிரச்சினைகளை அடுத்த வாரத்தைவிட இந்த வாரத்தில் தீர்க்கலாம். இதில் சுவாரஸ்யமாக, குழந்தைகள் மற்றும் இளைய குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகள் மிகவும் பயனுடையதாக இருக்கும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) :
துணைவருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் என்ன பிரச்சனை என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். ஆனால், அவர்களுக்கு உதவ நீங்கள் எவ்வளவு முயற்சி செய்ய முடியும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் மற்றவர்களுக்காக உங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டிய தருணம் இது. உண்மையில், ஒரு நுட்பமான கிரக அமைப்பு சுய தியாகத்திற்கு இது சிறந்த நாள் என்று கூறுகிறது!
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :
இப்போது உங்கள் ராசியை எதிர்கொள்ளும் கிரக அம்சங்கள் ஆழமான மற்றும் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்த, அன்றாட வாழ்க்கையில் அசாதாரணமான மற்றும் பரபரப்பாக சேர்கின்றன. எனவே நீங்கள் ஒரு பெரிய தனிப்பட்ட ஈடுபாட்டில் உங்கள் கவனத்தைத் திருப்பப் போகிறீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :
அனேகமாக, நீங்கள் இப்போது உங்கள் தேடலை கடந்த காலத்தை விட பரந்த அளவில் தேட வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். குறைந்தபட்ச சச்சரவுகளுடன் செல்ல உங்களை அனுமதிக்கும் பணிகளைப் பாருங்கள். வேலையில் வளைந்து கொடுக்கும் தன்மை தேவை: சூழ்நிலையோடு விரைவாக செயல்பட்டு வளைந்து கொடுத்தால் வெற்றி கிடைக்கும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :
நெருங்கிய மற்றும் நெருக்கமான உறவுகளைப் பின்தொடர்வதை விட புதிய நண்பர்களை உருவாக்குவதில் நீங்கள் அதிக ஆர்வமாக இருக்கலாம். காரணம், வழக்கத்திற்கு மாறான அழைப்புகளுக்கு வெளிப்படையாக இருந்தால் நீங்கள் அதிக மகிழ்ச்சி அடைவீர்கள். இதற்கு, உங்கள் வழக்கமான எச்சரிக்கையை நீங்கள் தள்ளி வைக்க வேண்டும் என்று அர்த்தம்!
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :
உங்கள் தொழில் மற்றும் வீட்டு விவகாரங்களில் ஒருவித இருந்தல் இருப்பதைக் குறிக்கும் அனைத்து முக்கியமான விவாதங்கள், வாதங்கள் மற்றும் நிகழ்வுகள் இப்போது தீங்கற்றதாக அதிகம் வெளிப்படும். இனிமேல்தான், உண்மையான வேடிக்கை தொடங்க உள்ளது.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :
உங்கள் ராசியில் செவ்வாய் மற்றும் புளூட்டோ ஆகிய இரண்டு கிரகங்கள் ஆட்சி செய்வதால், உங்கள் உளவியல் மற்றும் உணர்ச்சி சுழற்சிகள் வழக்கத்தை விட மிகவும் சிக்கலானதாக இருக்கும். இதனால்தான் நீங்கள் விரைவில் இரண்டு விருப்பங்களுக்கு இடையில் தேர்வு செய்ய முடியாமல் ஊசலாட்டத்தில் இருப்பீர்கள். அதில் ஒன்று நேரடியாக நேர்மையானதாக இருக்கும். மற்றொன்று, சிக்கலாகவும் வஞ்சகமானதாகவும் இருக்கும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :
இந்த வாரம் உங்களைப் பற்றிய புரிந்தல் இருந்தால், தனிப்பட்ட ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சிகளை முடிக்க வேண்டும். எல்லாவற்றையும் தெளிவாக இரு தரப்பினரும் புரிந்துகொள்வதை உறுதிப்படுத்த உங்களுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளன. சில புள்ளிகளில் நீங்கள் அவர்களுடன் முட்டிக்கொள்ள வேண்டியிருக்கலாம்!
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :
அதிகரித்து வரும் சிக்கலான பிரச்னைகளால் நீங்கள் சூழ்ந்திருக்கும் போது, துணைவர் மிகவும் சாதாரணமாக இருப்பதாகத் தோன்றலாம். உண்மையில். அதற்கான பதில் உங்கள் வாழ்க்கையைவிட சுறுசுறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. எனவே நீங்கள் பலவிதமான விருப்பங்களை எதிர்கொள்கிறீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :
நீண்ட காலமாக, ஒரு குறிப்பிட்ட உறவில் ஆழமான உணர்ச்சித் தொடர்பைத் தவிர்த்து வருகிறீர்கள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அதைவிட, அவர் உங்களுக்கு ஒரு சவாள் விடுக்கப் போகிறார் என்பதற்கான உண்மையான, அடிப்படைக் காரணமாகவும் இருக்கலாம். மேலும், நீங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். அனேகமாக, நீங்கள் உங்கள் உணர்வுகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது சரியாக இருக்கும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :
நீங்கள் நிச்சயமாக எந்த விஷயத்திலும் பாதகமாக இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, குடும்ப ஏற்பாடுகள் அல்லது வீட்டு முன்னேற்றங்களை நீங்கள் முன்னெடுத்துச் செல்லலாம். நீங்கள் லாபகரமான முதலீடு செய்யலாம். இவற்றைத் தவிர்ப்பதற்கான, காரணம் எதுவும் இல்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.