Advertisment

மகர ராசியில் பிரவேசிக்கும் சனி பகவான்: ஏழரை சனியின் தாக்கம் எந்த ராசிக் காரர்களுக்கு?

சனி பகவான் வக்ர பெயர்ச்சியாக மகர ராசிக்கு செல்கிறார். ஜனவரி 17, 2023 வரை அங்கே தங்கியிருப்பார். சனி பெயர்ச்சியால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sani peyarchi 2022, magara rasi sani peyarchi, sani vakra peyarchi, kadaga rasi sani peyarchi 2022, sani peyarchi 2022 english, சனி பெயர்ச்சி, ஏழரை சனி, சனி வக்ர பெயர்ச்சி 2022, சனி பெயர்ச்சி பலன்கள், ஏழரை சனி, கண்ட சனி, ஜென்ம சனி, sani peyarchi 2022 meena rasi, sani peyarchi 2022 rishaba rasi, sani peyarchi 2022 for dhanusu rasi, sani peyarchi 2022 dhanu rashi, sani peyarchi 2022 simmam, sani peyarchi kanni rasi

சனி பகவான் ஜூலை 12 ஆம் தேதி மகர ராசியில் பிரவேசிக்கிறார். மகர ராசிக்கு செல்லும் சனி பகவான், தனது சொந்த வீடான மகர ராசிக்கு சென்ற பிறகு, ஜனவரி 17, 2023 வரை அங்கே தங்கியிருப்பார். இதனால், சனி பகவனால், சில ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் இருக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisment

ஜோதிடத்தில், சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி முக்கியமாந்தாகப் பார்க்கப்படுகிறது. சனி பெயர்ச்சி ஒருவரின் வாழ்க்கையை மாற்றி அமைக்கக்கூடியது. சனி கிரகம் கஷ்டத்தை மட்டும் தருவதில்லை. சனி பார்வையால் கஷ்டங்கள் வந்தாலும் அனுபவங்களைக் கொடுத்து வாழ்க்கையை பக்குவப்படுத்தும். மகர ராசியில் அமரும் சனி பகவானின் பார்வை மீனம், கடகம், துலாம் ராசிகளின் மீது விழுகிறது.

சனி பகவானின் பிடியை அஷ்டமத்து சனி, கண்டச் சனி, அஷ்டாத்தம சனி ஏழரை சனி என்று கூறப்படுகிறது. சனி பெயர்ச்சி நடந்த உடன் எல்லா ராசிகளிலும் அதன் தாக்கத்தின் பலன்கள் தெரியும்.

ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் சனி பெயர்ச்சியானது சனி பகவான், மகர ராசிக்கு செல்கிறார். சனி பகவான் மகர ராசிக்கு சென்றதும், மிதுனம், துலாம், கடகம் ராசிக்காரர்கள் அஷ்டமத்து சனி, கண்டச் சனி, அஷ்டாத்தம சனியின் பிடிக்குள்ளாவார்கள். தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் இருக்கும்.

ரிஷபம் - மகர ராசியில் சனி பகவான் பிரவேசிப்பதால், ரிஷப ராசியினருக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அவர்களுக்கு புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். வேலையில், பதவி உயர்வு பெறலாம். புதிய தொழில் தொடங்கலாம். நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

மீனம் - மகர ராசியில் சனி பகவானின் வக்ரப் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். பல வழிகளில் பண பலன்கள் கிடைக்கும். இது பொருளாதார நிலையை பலப்படுத்தும். வேலை செய்பவர்கள் பதவி உயர்வு பெறலாம். முதலீடு செய்வதற்கும் நல்ல நேரம்.

தனுசு - மகர ராசியில் சனியின் பிரவேசத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். தொழில்-வியாபாரத்தில் லாபம் உண்டாகும். எங்கிருந்து வேண்டுமானாலும் திடீரென பணம் கிடைக்கும். வியாபாரிகள் லாபம் பெறலாம். தடைப்பட்ட பணம் கிடைக்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Rasipalan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment