விஞ்ஞானத்தில் கிரகணம் என்பது ஒரு வானியல் நிகழ்வாக கருதப்பட்டாலும் மத நம்பிக்கையின் படி இந்த கிரகண நாட்கள அசுப நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதில் சூரிய கிரகணத்தின்போது சூரியனின் எதிர்மறை சக்தி அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. ஜாதகத்தின்படி சூரிய கிரகணத்தின்போது சூரியன் பாதிக்கப்படுவதாகவும், இதன் ஒவ்வொரு ராசியின் அடையாளத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.
அதே சமயம் சூரிய கிரகண நாட்களில் சில ராசிகளுக்கு நன்மையும் சில ராசிகளுக்கு குறிப்பிட்ட சிக்கல்களும் இருக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், வரும் அக்டோபர் 14-ந் தேதி சூரிய கிரகணம் வர உள்ளது. இரவு 8.34 மணிக்கு தொடங்கி அதிகாலை 2.25 மணிக்கு முடிய உள்ள இந்த சூரிய கிரகண நாளில் ஒவ்வொரு ராசிக்கும் இருக்கும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை தெரிந்துகொள்வோம்.
மேஷம்
அக்டோபர் 14-ந் தேதி வரும் சூரிய கிரகணம் மேஷ ராசிக்காரர்களுக்கு பிரச்சனையை கொடுப்பதாக அமைந்துள்ளது. வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் அன்றைய தினம் ஒரே நாளில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். பண இழப்புகளை சந்திக்க நேரிடும் அதே நேரம் உடல் ரீதியான பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலையில் மன அழுத்தம், தொழில் ரீதியான பிரச்சனை, உழைப்புக்கேற் ஊதியம் இல்லாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம்
ஜோதிட சாஸ்திரத்தின்படி நடப்பு ஆண்டின் சூரிய கிரகணம், மிதுனராசிக்காரர்களக்கு நன்மை தருவதாக அமைந்துள்ளது. தொழிலில் சிறப்பான வெற்றி, மன அமைதி, செல்வம் பெருகும் வாய்ப்பு, திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி, அலுவலகத்தில் பாராட்டு, தொழிலில் சிறப்பான வெற்றி, முற்றிலும் சுப பலன்கள் கிடைக்கும் ஒரு நாளாக அமைய வாய்ப்புள்ளது.
கன்னி
இந்த ஆண்டு சூரிய கிரகணத்தின்போது சூரியன் கன்னி ராசிக்கு இடம்பெயர்வதால், இந்த ராசிக்காரர்களுக்கு நன்மைகள் அதிகம் உண்டாகும். நீண்ட நாட்களாக இழுத்துக்கொண்டிருந்த வேலைகள் முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், காதல் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றமும், பொருளாதாரத்தில் ஏற்றமும் காணும் நாளாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் நன்மை தருவதாக அமைந்துள்ளது. இந்த ராசிக்காரர்களுக்கு அனைத்து செயல்களும் சிறப்பான சாதகமாக அமையும். மற்றவர்கள் இடத்தில் இவர்களுக்கான மரியாதை அதிகாரிக்கும். வாழ்க்கையின் முன்னேற்றத்தில் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் சில செயல்கள் நடைபெறும். ஒவ்வொரு செயலிலும் கிடைக்கும் வெற்றி நன்மையை அதிகரிக்கும். அதிஷ்டத்தின் முழு பலனும் கிடைக்கதால் தொழிலில் முன்னேற்றம் அதிகரிக்கும்.
மகரம்
சூரிய கிரகணத்தின்போது உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். செலவுகள்ட கூடியானலும் அதற்காக நன்மைகள் உங்களுக்கு பலமடங்கு வந்து சேரும். வீடு வாகனம் தொடர்பான மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் சாதகமாக நேரம் அமையும். தந்தையின் ஆதரவு அதிகம் கிடைக்கதால் மகிழ்ச்சி பெருகும்.
சிம்மம்
நடப்பு ஆண்டில் 2-வது சூரிய கிரகணம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சற்று சிறப்பாக இல்லை. வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகள், நல்லது அல்லாத சிற தகவல்கள் வந்து சேரலாம். சற்று மன உளைச்சல் அதிகரிக்கும். அதிகரித்து வரும் செலவுகளால் உங்களுக்கான மரியாதை கிடைக்காமல் போகலாம். எந்தவகையான முதலீட்டிலும் பங்கேற்காமல் விலகி இருப்பது நல்லதாக இருக்கலாம்.
துலாம்
சூரிய கிரகணத்தின் தீய விளைவுகள் துலாம் ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மனநல பிரச்சனைகளால் மற்றவர்களுடன் வாக்குவாதம் அதிகரிக்கலாம். எல்லா நேரமும் அதிகமாக கோபப்படும் நிலை ஏற்படும். தேவையற்ற செலவுகள் அதகமாகவும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும். கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் கட்டுப்படுத்துவது நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.