தொழில்நுட்பம் பெரிதாக வளர்ந்தாலும் பெரும்பாலான மக்கள் ஜாதகம். சாஸ்திரம் சம்பர்தாயம் என ஜோதிட பலன்களை பார்த்துதான் தங்களது பணிகளை தொடங்குகின்றனர். அதிலும் பெரிய தொழிலதிபர்கள் முதல் அவர்களிம் வேலை செய்யும் வேலையாட்கள் வரை அனைவருமே தினமும் ராசிபலன் உள்ளிட்ட ஜோதிடம் தொடர்பான சில பலன்களை பார்த்து வருகின்றனர்.
ஆனால் எவ்வளவுதான் ஜோதிடத்தை நம்பினாலும், ஏழை மக்கள் பலரும் இவ்ளோ கஷ்டமா இருக்கு எல்லாம் என் தலைவிதி என்ற வார்த்தையை பயன்படுத்தாத ஆட்கள் இல்லை என்றே சொல்லலாம். அதே நேரத்தில் பணக்காரர்களுக்கும் கஷ்டமான சூழ்நிலை வரும்போது தலைவிதி என்று புலம்பவில்லை என்றாலும், கஷ்டத்தை நினைத்து கோவிலுக்கு சொல்வதை பார்த்திருப்போம்.
இதற்கு பலன் தரும் பல வழிகளை ஜோதிடர்கள் சமூகவலைதளம், மற்றும் பல வழிகளில் மக்களுக்கு வழிபாட்டு தளங்கள் குறித்தும் ஜாதகம் மற்றும் தலைவிதி நன்றாக அமைவதற்கும் பல்வேறு பரிகாரங்களை சொல்லி வருகினறனர். அந்த வகையில் பிரபல நாட்டுப்புற பாடகியான அனிதா குப்புசாமி, ஜாதகம் நன்றாக அமைய என்ன செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்றால் நாம் எதற்காக கோவிலுக்கு செல்ல வேண்டும் சாமி கும்பிட வேண்டும் என்று பலரும் கேட்பதுண்டு. இந்த மாதிரி நினைப்பர்வளுக்காக புராணக்காலத்திலேயே பல காரணங்கள் கொண்டு பல கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதில் மிகவும் பழமையாக சக்திவாய்ந்த கோவிலாக கருதப்படுவது திருச்சி அருகே திருப்பட்டூர் என்ற ஊரில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலையம்.
இந்த ஆலையத்தில் சிவபெருமான் தலைவிதியை மாற்றி அமைக்கக்கூடிய வரத்தை பிரம்மனுக்கு அளித்துள்ளார். இந்த ஆலையத்திற்கு கூட நம் தலைவிதியில் எழுதியிருந்தால் தான் போக முடியும் என்று சொல்வார்கள். என்விதியே சரியில்லை என்று வாழ்க்கையில் நொந்துபோனவர்கள் இந்த கோவிலுக்கு சொல்லுங்கள்.
சிவபெருமான போலவே பிரம்மருக்கும் 5 தலைகள். இதனுடன் படைக்கும் தொழிலும் இருந்த காரணத்தினால் பிரம்மனுக்கு தான்தான் பெரியவர் என்ற என்றும் தான் படைத்தால் தான் எல்லாமே என்ற கர்வம் ஏற்பட்டதால், சிவபெருமானை மதிக்கவில்லை. இதனால் சிவபெருமானுக்கு கோவம் ஏற்பட்டு பிரம்மனின் தலையை கொய்தார்.
அதில் இருந்து பிரம்மனுக்கு 4 தலைகள் தான் இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் அவருக்கு கொடுத்திருந்த படைக்கும் தொழிலையும் பிடுங்கி கொண்டார். இதனால் பிரம்மனின் சக்திகள் குறைந்து அவருக்கான மரியாதையும் குறைந்தது. இதனால் தனது தவறை உணர்ந்த பிரம்மன் சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்டு படைக்கும் தொழிலை திரும்ப தருமாறு கேட்கிறார்.
அதற்கு சிவபெருமான், பூலோகத்திற்கு சென்று திருப்பட்டூரில் 12 சிவலிங்கங்கள் அமைத்து அதற்கு பூஜை செய்து தன்னுடைய பாவத்தை போக்க வேண்டும் என்ற வரத்தை கொடுக்கிறார். அதன்பிறகு திருப்பட்டூருக்கு வந்த பிரம்மன் 12 சிவலிங்கத்தை அமைத்து பூஜை செய்து தன்னுடைய பாவத்தை போக்கிக்கொண்டார். அதன்பிறகு அங்கே கோவில் எழுப்பப்பட்டது.
பிரம்மன் கோவில் அமைத்து வழிபாடு செய்தது முதல் தினமும் அங்கே ஆகம விதிப்படி வேதங்கள் முழங்கப்பட்டன. அந்த வேதங்களின் அதிர்வலைகள் இன்றைக்கும் அந்த கோவிலில் இருக்கிறது. கிட்டத்தட்ட 2 ஆயிரம் வருடத்திற்கு முன்பாக முழங்கப்பட்டது என்று கூறப்படுகிறது. மீண்டும் பிரம்மனுக்கு படைக்கும் தொழிலை வழங்கிய சிவபெருமான் அந்த கோவிலில் சென்று பாவத்தை போக்கிவிட்டு உன் தொழிலை தொடங்கு என்று பிரம்மனின் விதியை மாற்றி அமைத்துள்ளார்.
அதேபோல் இந்த கோவிலுக்கு யாரெல்லாம் நாடி வருகிறார்களே அந்த பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி எழுத வேண்டும் என்றும் பிரம்மனுக்கு சிவபெருமான் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக இந்த கோவிலை நாடிச் செல்கிறவர்களுக்கு விதி மாற்றி எழுதி அமைக்கப்படும் என்பது உறுதி. இந்த கோவிலுக்கு செல்கிறவர்கள் ஜாதகத்தை கையில் எடுத்து செல்வார்கள். அந்த ஜாதகம் பிரம்மனின் காலடியில் வைத்து மந்திரங்கள் ஓதி திரும்பவும் அவர்களிடம் கொடுத்துவிடுவார்கள்.
அப்போது அந்த ஜாதகம் மாற்றி எழுதியதாக ஐதீகம். குருபகவானுக்கு அதிதேவதை பிரம்மன் என்ற காரணத்தினால், குருவுக்கு உகந்த நாளான வியாழன்கிழமை பிரம்மனுக்கு மஞ்சள் பூசி கொண்டக்கடலை புளியோதரை. எலுமிச்சை சாதம் படைத்து பிரசாதமாக வழங்கப்படுகிறது. குரு ஆதிக்கம் கொண்ட கோயில் என்பதால், திருமணம் ஆகாதவர்கள், படிப்பு சரியாக வரவில்லை, படித்தெல்லாம் மறந்து போய் விடுகிறது என்று நினைப்பவர்கள் இந்த கோவிலுக்கு வருவார்கள்.
கரு வக்கிரமாக இருந்தால் தொழில் சாரியாக இல்லை என்றால் கூட இந்த கோவிலுக்கு சென்று வருவார்கள். இந்த கோவிலுக்கு போனாலே தலைவிதி மாற்றி எழுதப்படுகிறது. இந்த கோவிலில் ஈஸ்வரனே பிரம்மபுரீஸ்வரராக பிரம்ம நாயகியுடன் எழுந்தருளி பக்தர்களை காத்து ரட்சித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் பதஞ்சலி முனிவர் இந்த கோவில்ல சமாதி அடைந்துள்ளார். ஒரு மகான் அல்லது சித்தர் சமாதி அடைந்த இடத்திற்கு நாம் சென்று வரும்போது நல்ல அதிர்வலைகள் ஏற்படும். அங்கே பிரம்மனால் ஏற்படுத்தப்பட்டுள்ள பிரம்ம தீர்த்த குளம் உள்ளது. அங்கு சென்று தீர்த்ததை எடுத்து தெளித்துக்கொண்டாளே நமது பாவங்கள் அனைத்தும் போக்கப்படும் என்பது ஐதீகம். வாய்ப்பு கிடைக்கும்போது இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்ல அதிர்வலைகள் உண்டாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.