scorecardresearch

சித்ரா பவுர்ணமி நாளில் சந்திர கிரகணம்: எந்தெந்த ராசிகளுக்கு அதீத கவனம் தேவை?

Chandra Grahan 2023: அறிவியல் மாற்றமான சந்திர கிரகண நாளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

Rasi palan, New Year Rasi Palan, New Year Horoscope, Today Rasi Palan, Today Rasipalan, Rasipalan today, Rasi Palan Today, April 26th 2023 Rasipalan, Today rasi palan, daily rasi palan, rasi palan 26 April horoscope today, daily horoscope, horoscope 2023 today, today rasi palan, astrology, horoscope 2023, new year horoscope, புத்தாண்டு ராசி பலன்கள், 2023 ராசி பலன்கள், 2023 புத்தாண்டு ராசி பலன்கள், இன்றைய ராசிபலன், ஏப்ரல் 26ம் தேதி ராசிபலன், இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், இன்றைய தினசரி ராசிபலன், தினசரி ராசிபலன் , மாத ராசிபலன், மேஷம், ரிஷபம், கன்னி, மீனம், சிம்மம், துலாம், மிதுனம், கடகம், குரு பெயர்ச்சி, Guru Peyarchi, horoscope today, daily horoscope, horoscope 2023 today, today rashifal, astrology, horoscope 2023, new year horoscope, today horoscope, horoscope virgo, astrology, daily horoscope virgo, astrology today, horoscope today, scorpio, horoscope taurus, horoscope gemini, horoscope leo, horoscope cancer, horoscope libra, horoscope aquarius, leo horoscope, leo horoscope today
ராசி பலன்கள்

Lunar Eclipse Rituals 2023: உலகில் ஒவ்வொரு ஆண்டும் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழ்வது வழக்கமான ஒன்று. இதில் கடந்த ஏப்ரல் 20-ந் தேதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து இன்று (மே 5) சந்திர கிரகரணம் நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகண நாளில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை அவசியம் என்பதை பற்றி பல தகவல் வெளியாவது வழக்கம்.

இந்த நிகழ்வு அறிவியல் ரீதியாக ஏற்படும் மாற்றம் தான் என்றாலும் கூட ஜோதிட ரீதியாகவும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான சந்திர கிரகணம் வரும் மே 5-ந் தேதி (நாளை) நடைபெற உள்ள நிலையில், இந்த நாளில் எந்தெந்த ரசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

சந்திர கிரகணத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணத்தின்போது மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் தவறான முடிவுகளை கூட எடுக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் மிகுந்த எச்சரிக்கை அவசியம். இந்த நாளில் பொருளாதார நிலையும் மந்தமாக இருக்கும். அதேபோல் வாகன பயணத்தின்போது எச்சரிக்கை அவசியம். நண்பர்களுக்கு இடையில் கருத்துமோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல் புதிய நபர்களால் வீண் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது.

ரிஷபம்

சந்திர கிரகண தினத்தில் ரிஷப ராசிக்காரர்கள் யாருடன் வார்த்தையில் நிதானம் மிகவுமு் அவசியம். அவசரப்பட்டு வார்த்தையை விட்டுவிட்டால் அதற்கு நீங்கள் பெரிய விலை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் உறவுக்குள் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. அதேபோல் பொருளாதார மந்த நிலை காரணமாக கடன் வாங்கும் நிலை உருவாகும். வேலையில் உங்களுக்கு ஈடுபாடு இருக்காது என்பதால் வேலை பறிபோகும் அபாயம் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

சிம்மம்

சந்திர கிரகணத்தின் போது சிம்ம ராசிக்காரர்களுக்கு நேரம் சரியில்லை. அதனால் பிறரிடம் பேசும்போதும், கூர்மையான ஆயுதங்களை கையாளும் மிகுந்த கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. அதேபோல் நிதி தொடர்பான அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது அதிக கவனமும் ஒருமுறைக்கு இருமுறை நன்றாக யோசித்தும் முடிவு செய்வது நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்களக் சந்திர கிரகணத்தின் போது உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளை சந்திக்கும் நிலை ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும். பணியிடத்தில் தடை, தாமதம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் சகஊழியர்களிடம் சண்டை வரும் வாய்ப்புளம் உள்ளது. நம்பிக்கையின் பெரில் பணத்தை கொடுத்த ஏமாற வாய்ப்புள்ளது. அதனால் புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Horoscope news download Indian Express Tamil App.

Web Title: Tamil horoscope warning zodiacs for lunar eclipse day

Best of Express