Advertisment

Tamil New Year 2019 Rasi Palan: விகாரி வருட ராசி பலன்கள்!

Happy Pothandu 2019 Rasi Palan 2019-20: நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்க, எந்தெந்த ராசிக்கு என்ன பலன் எனப் பார்ப்போம். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Puthandu Rasi Palan 2019

Tamil Puthandu Rasi Palan 2019

Tamil New Year 2019-20 Rasi Palan in Tamil: இன்று தமிழ் புத்தாண்டான விகாரி வருடம் தொடங்கியிருக்கிறது. நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்க, எந்தெந்த ராசிக்கு என்ன பலன் எனப் பார்ப்போம்.

Advertisment

மேஷம்

இதுவரை உங்களுக்கு தடைக்கல்லாக இருந்து வந்த காரியங்கள் இனி படிக்கல்லாய் மாறி உங்களை முன்னேற்றும். பல வழிகளில் காசு பணம் வந்து சேர்ந்து பொருளாதாரம் உயரும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் கெட்டி மேளம் வாசிக்கப்படும். வண்டி வாங்குவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு இனி அந்த குறை இருக்காது.

ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சனி உலாவருவதால் உங்களுக்கு இராஜயோகம் ஏற்படும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய தொடர்புகள் உண்டாகும். ஊரில் முக்கிய நபர் என்று பெயர் எடுப்பீர்கள்.

ரிஷபம்

எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அமைதியை கடைபிடித்து வெற்றி பெறுவீர்கள். இந்த புத்தாண்டில் நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணம் வந்தாலும் பற்றாக்குறை ஏற்படும். இந்த ஆண்டில் வீடு, மனை, இடங்களை வாங்கும் போது கவனமாக இருக்கவும். அவசர முடிவுகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் கவனம் தேவை.

மிதுனம்

இந்த புத்தாண்டு உங்களுக்கு உற்சாக பெருக்கெடுக்கும். நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் ஜெயமாகும். பணப்பற்றாக்குறை குறையும், கோபத்தை மட்டும் கட்டுப்படுத்துங்கள். எதற்காகவும் யாரையும் நம்ப வேண்டாம். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நீடிக்கும். புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. தடைபட்ட திருமணம் கூடி வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில் சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும்.

கடகம்

உங்களின் கடகம் ராசியில் கடக லக்னத்தில் தான் இந்த புத்தாண்டே பிறக்கிறது. இந்த சமயத்தில் உங்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. உங்களின் கவுரவம் அந்தஸ்து உயரும், பணவரவு அதிகரிக்கும். வேலை விசயமாக வெளிநாடு பயணம் அமையும். புது வீடு வாங்கும் யோகத்துடன், பணியில் உத்தியோக உயர்வுகளையும் எதிர்பார்க்கலாம்.

சிம்மம்

இந்த புத்தாண்டில் நீங்கள் எதைத் தொட்டாலும் வெற்றியில் முடியும். சவாலான விஷயங்களைக் கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீண் விவாதங்கள் நீங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புது வேலை கிடைக்கும். வீடு மனை வாங்குவீர்கள். பொன், பொருள் நகைகள் சேரும். தடைபட்டு வந்த திருமணம் கைகூடி வரும், திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சமூகத்திலும் பணி செய்யும் இடத்திலும் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும்.

கன்னி

உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். செய்யும் தொழிலில் லாபம் கூடும். வீட்டில் தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். இந்த புத்தாண்டு பிறக்கும் உங்கள் ராசி அதிபதி புதன் உங்கள் ராசியை பார்வையிடுகிறார். உங்களின் ரசனை அதிகரிக்கும். வேலை விசயமாக வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். அலுவலகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் பதவி உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும். பணம் புகழ் தேடி வரும். அதே சமயம் பண விரையமும் ஏற்படும் என்பதால் கவனம் தேவை.

துலாம்

இனி உங்களின் நிர்வாகத்திறமை பளிச்சிடும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் உறுதியற்ற நிலை உண்டாகும். சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி வரும். பயணங்களால் சுப செலவுகள் ஏற்படும். திடீர் பணவரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண முயற்சிகள் கைகூடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனுக்கோ, மகளுக்கோ நல்ல இடத்தில் வரன் அமையும். வீடு மனை வாங்குவீர்கள். புது வீடு கட்டி குடியேறுவீர்கள். வெளிநாட்டு வியாபாரம் நன்மையடையும். லாபம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

உங்களுக்கு யோகம் கைகூடி வருகிறது, பணப்புழக்கம் அதிகரிக்கும். பணவரவு அதிகமாக இருந்தாலும் சுப செலவுகளும் அடுத்தடுத்து ஏற்படும். குழந்தை பாக்கியம் உண்டாகும். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். வீடு கட்டி கிரகபிரவேசம் நடத்தும் வாய்ப்பு ஏற்படும். வங்கிக் கடனுதவி கிடைக்கும். புதிய திட்டங்களை தொடங்குவதற்கு முன் ஒருமுறைக்குப் பல முறை சிந்தித்துச் செயல்படுவது சிக்கல்களையும், சிரமத்தையும் குறைக்கும். சிக்கல்கள் குறைய திருநள்ளாறு சென்று சனி ஓரையில் நீராடி, எள் தீபம் ஏற்றி,கருப்பு வஸ்திரம் சாற்றி வணங்க, கதிரவனைக் கண்டபனிபோல் கஷ்டங்கள் மறையும்.

தனுசு

ஆண்டின் துவக்கம் சுமாராக இருந்தாலும் விரைவில் நல்ல விஷயங்கள் நடக்கும். ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்துள்ள சந்திரனால் மனக்கவலை ஏற்பட்டாலும் சில நாட்களில் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். ஜென்ம சனியால் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சொத்து சேர்க்கைகள் அதிகமாகும். நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் நன்மையில் முடியும். செவ்வாய்யினால்  சில மாதங்களில் பிரச்னை தலைதூக்கும் என்பதால் செவ்வாய்கிழமைகளில் முருகனை வழிபட நன்மைகள் நடைபெறும்.

மகரம்

இந்த புத்தாண்டில் உங்களுக்கு பல நன்மைகள் நடைபெறும். வெற்றி பெற வேண்டுமானால் கடின உழைப்பு அவசியம் என்பதை உணர்ந்து நீங்கள் வேலை செய்வீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். விரைய சனியால் சற்று பண விரயம் ஏற்பட்டாலும், மற்ற வகைகளில் மகிழ்ச்சி பொங்கும்.

கும்பம்

இனி உங்களுக்கு வெகு சிறப்பான நன்மைகள் நடைபெறும். அரசு காரியங்களில் அனுகூலம் கூடும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளிநாட்டு பயணம் நன்மையில் முடியும். அரசு வேலை தேடி வரும். கடனாக பிறருக்கு கொடுத்த பணம் திரும்ப வரும். மகனுக்கும் மகளுக்கும் திருமணம் கை கூடி வரும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை, பத்திரம், பணம் நகைகளை கவனமாக வைத்துக் கொள்ளவும்.

மீனம்

இந்த வருடம் உங்களுக்கு கௌரவமான பதவிகள் தேடி வரும். துணிச்சல் அதிகரிக்கும். பணவரவும் அதிகமாகவே இருக்கும். அதே சமயம் வேலைச்சுமை கூடும். புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்கும். திருமணமான தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும், வருமானம் அதிகரிக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவது நல்லது.

 

Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment