பெருகி வரும் விஞ்ஞான வளர்ச்சி ஒரு பக்கம் நல்லதை கொடுத்தாலும் சில தீமைகளையும் கொடுக்கத்தான் செய்கிறது. பண்டைய காலத்தில் பகலில் கடுமையாக உழைத்து இரவில் தூங்கிவிடுவார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பலரும் இரவில் விழித்துக்கொண்டு வேலை பார்த்து பகலில் தூக்கி ஒரு இயந்திரம்போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இப்படி செயல்பாடுகள் மாற்றமடைவதால் மனிதனின் ஆன்ம பலம் மற்றும் ஆத்ம பலம் குறைகிறது. ஆனால் ஒரு மனிதன் புத்துணர்ச்சியுடனும் நினைத்ததை முடிக்கும் திறனுடன் இருக்க வேண்டும் என்றால் அவனுக்கு ஆன்ம மற்றும் ஆத்ம பலங்கள் இருக்க வேண்டியது அவசியம். நினைத்ததை முடிப்பதற்கு மந்திரம், தந்திரம், இரவு வேலை என்று செய்ய வேண்டிய அவசியம் இல்லை. செய்ய வேண்டியதை சரியான நேரத்தில் செய்தாலே அதன் பலன் கிடைக்கும்.
கால புருஷ 5-ம் அதிபதி சூரியனை வலுப்படுத்தினால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறலாம். தமிழ் மாதங்களை 2 வகைகளாக பிரிக்கலாம். இதில் தை முதல் ஆனி வை உள்ள 6 மாதங்கள் உத்ராயணம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை உள்ள 6 மாதங்கள் தஷ்ணாயணம் என்றும் பிரிக்கப்படுகிறது. சூரியன் மகர ராசியில் நுழையும் சங்கராந்தியன்று உத்ராணயம் தொடங்கும். இந்த தை மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சம சக்திகள் வெளிப்படும்.
காலபுருஷ 5-ம் அதிபதியான சூரியன் கால புருஷ 10-ம் இடமாக மகர ராசியில் சனியின் வீட்டில் தனது சுய நட்சத்திரமான உத்திராடத்தில் சஞ்சரிக்கும் தைமாதம் முதல் நாளில் சூரியன் வடக்கு நோக்கி பயணிக்க தொடங்கும். அன்றைய தினத்தில் உயிர்களுக்கு உணவு வழங்கும் உழவுத்தொழிலுக்கு உதவும் சூரியனுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து வழிபட வேண்டும்.
அந்த வகையில் இந்த வருடம் சூரியனுக்கு உகந்த நாள் ஜனவரி 15 (நாளை) சூரியபகவானுக்கு உகந்த நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று தைமாதம் பிறப்பது மிகவும் சிறப்பானது. ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து அந்த நெல்லில் இருந்து எடுக்கப்பட்ட புது அரிசியில் பொங்கல் செய்ய வேண்டும். புதுப்பானையில் மஞ்சல் குங்குமம் இட்டு கங்கணம் கட்டி பாணையை பயன்படுத்த வேண்டும். அதன்பிறகு புது பாணையில் வெல்லம், அரிசி, முந்திரி, திராட்சை, நெய், ஆகியவற்றை சேர்த்து அடுப்பில் வைத்து சம்பிரதாய முறைப்படி சர்க்கரை பொங்கல் வைத்து முழு கரும்பு, மஞ்சள் செடி, சிவப்பு பூசணி, கிழங்கு மற்றும் பழ வகைகள், வெற்றிலை பாக்கு, தேங்காய் ஆகியவற்றுடன் சூரியன் மற்றும் அவரவர் குல தெய்வத்தில் படையில் இட்டு வணங்க வேண்டும்.
இந்த பூஜை முடிந்தவுடன் வீட்டில் உள்ள பசுவுக்கும், முன்னோர்களை நினைத்து காக்காக்வுக்கும் பொங்கல் வைத்துவிட்டு பிறகு சாப்பிட வேண்டும். தைத்திருநாள் அன்று சர்க்கரை பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபடும்போது இயற்கை சக்தியாக சூரியனிடம் இருந்து அதிகாலையில் வரும் ஒளிக்கதிர்கள் சக்திவாய்ந்தவை. இந்த கதிர்கள் நமது உடலில் படும்போது நமது உடல் புத்துணர்ச்சி அடைவதுடன் உடல் வலிமை பெறுகின்றன. ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
கண்களில் உள்ள குறைபாடுகள் சீராகும், அறிவு வளரும், சத்ரு, பயம், கடன் தொல்லை, உஷ்ண நோய் விலகும் கஷ்டங்கள் படிப்படியாக விலகும். வியாபாரம் தொழில் விருத்தியாக சகல காரியங்களும் நிறைவேறும். செய்த அனைத்து பாவங்களும் விலகி வெற்றிகள் கிட்டும். கவலைகள் அகலும், குழந்தைகளுக்கு படிப்பு வரும். அரசாங்க உதவி, அரசு வேலை, அரசியல் ஆதாயம் போற்றவைற்றை பெறலாம்.
மேலும் சூரியன் உதயமாகும் போது ஆத்மார்த்மாக ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தை சொல்லி வந்தால் எல்லா தடைகளும் நீங்கி சகல ஐஸ்வர்யங்களுடன் ஆத்ம பலம், ஞானம் போன்ற அனைத்தும் கிடைக்கும். பித்ருக்களாகிய முன்னோர்களின் நல்லாசி சூரிய ஒளி மூலமாக கிடைத்து பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறும். பொங்கல் திருநாளில் இனிமையான அனைத்து பயன்கயும் பெறுவோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“