Rasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)

Daily Rasi Palan Tamil, Oct 15, 2018: எந்தவொரு செயலிலும் நிலையான ஒரு முடிவை உங்களால் எடுக்க முடியாது. வீட்டிற்குள்ளேயே இருந்தால், நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வீர்கள்

By: Updated: October 17, 2018, 03:05:08 PM

Rasi Palan Tamil: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் புதிய அறிமுகமாக ‘இன்றைய ராசிபலன்’ எனும் புதிய பிரிவை வாசிப்பாளர்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். தினமும் அனைத்து ராசி அன்பர்களுக்கும் தங்களது பலன்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த பிரிவு அமையும். வாழ்க்கையில் சேஷமாக வாழவும், நம் முன் உள்ள தடைகளை ராசி மூலமாக அறிந்து, அப்புறப்படுத்தி ஒழுங்குப்படுத்தவும் இந்த பிரிவு உதவும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) 

கடந்த மாதங்களில் உங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட ஏற்ற இறக்கங்கள் இன்னும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், இது நீண்ட நாளைக்கு நிலவும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த வசந்த காலம் வரை இது தொடரும். உங்கள் துணையுடன் தேவையில்லாத விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

உங்களது சாதனைகளை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம். உங்களது சிறப்பான செயல்களில் சிலவற்றிற்கு அங்கீகாரம் கிடைக்காமல் போனாலும், நீங்களே உங்களை போற்றிக் கொள்ளலாம். நீங்கள் மற்றவர்களை கவர்ந்திழுக்கலாம், ஆனால் அவர்களது நலன்களுக்கு எதிராக செயல்படுவதற்கு அவற்றை கையாள வேண்டாம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி, அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பு ஏற்பட்டாலும் அதற்கேற்ப சலுகையும் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

இன்றைய செய்தி மற்றும் தேர்வுகள் அடுத்த வார நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளை முன்வைக்கின்றன. நிகழ் சம்பவத்திற்கான முடிவை தீர்மானிக்க நீங்கள் கட்டாயப்படுத்தப்படலாம். ‘அது உடைக்கப்படவில்லை என்றால், அதை முயற்சி செய்து சரிசெய்யாதீர்கள்’ என்ற பழமொழியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

நிலவு உங்கள் கவனத்தை வீட்டையும் குடும்பத்தையும் பற்றியே சிந்திக்க வைக்கும். கேள்விகளின் தருணம் முக்கியமானது தான். ஆனால், உணர்வுகள் அசுத்தமாகவும் வரையறுக்க கடினமாக இருக்கும் போதும், பதில் கிடைப்பது சிரமம் ஆகிறது. ஒருவேளை, உண்மையை கண்டறிய உங்கள் முயற்சியை இரட்டிப்பாக்க வேண்டுமோ?

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

நல்ல கம்யூனிகேஷன் இருந்தால், இந்த நாள் உங்களுக்கு சிறந்த நாளாகும். புதிய வெளிச்சத்தில் உங்கள் வாழ்க்கையின் அம்சங்களை அறிய அடிக்கடி கட்டாயப்படுத்தப்படுவீர்கள். ஆனால், இப்போது நீங்கள் உங்களை தெளிவடைய வைக்க எல்லாம் செய்துவிட்டீர்களா அல்லது தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்பீர்களா என்பதே கேள்வி?

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, பணி வாழ்க்கையிலும் சரி, சில பயங்கரமான சம்பவங்கள் நடைபெறும். ஒரு காரணத்திற்காக அல்லது வேறொரு காரணத்திற்காக உங்களுடைய தகவல் அல்லது உத்வேகத்திற்காக நீங்கள் கடந்த காலத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டியிருந்தது. அதேசமயம், நீங்கள் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள் என இப்போது உணரலாம். இந்த வாரம் முடிவதற்கு இவையனைத்தும் மாறும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

எந்தவொரு செயலிலும் நிலையான ஒரு முடிவை உங்களால் எடுக்க முடியாது. வீட்டிற்குள்ளேயே இருந்தால், நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

ஆச்சர்யங்களும், ரகசியங்களும் அடங்கியவராக நீங்கள் இருப்பீர்கள். இந்த நாள் அப்படியொரு நாளாக அமையும். உங்கள் எண்ணங்களை நீங்களே வைத்துக்கொள்வதற்கு நல்ல காரணங்கள் இருக்கலாம், நீங்கள் விரும்பும் வரை அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று யாரும் உரிமை கோர முடியாது. மேலும், உங்களை நோக்கி ஒரு பொறுப்புமிக்க பணி வந்துக் கொண்டிருக்கிறது.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

குழப்பங்களும், ஆர்வத் தூண்டுதலும் ஒரு சேர கலந்திருக்கும். இதுவே, உங்களை உடனே முன்னேற்றிக் கொள்ள தேவையான அடிப்படை என்பதை சிந்திக்க வைக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

உங்கள் ஆற்றலை எங்கே பயன்படுத்த வேண்டும் என சிந்திக்க வேண்டும். உண்மையை வைத்து மட்டும் நிகழ் கேள்விகளுக்கு விடை காண முடியாது. ஆனால், உங்கள் இதயத்தில் நீங்கள் சரியானதை நம்புகிறீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

நாளைய (16.10.2018) ராசிபலனை காண இங்கே க்ளிக் செய்யவும்

Get all the Latest Tamil News and Tamil Horoscope at Indian Express Tamil. You can also catch all the latest update on Rasi Palan by following us on Twitter and Facebook

Web Title:Today horoscope

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X