Today Rasi Palan, 10th March 2021 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 10th March 2021: இன்றைய ராசி பலன், மார்ச் 10, 2021
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : முக்கியமான விவகாரங்கள் அனைத்தும் திரைக்குப் பின்னால் நடைபெறுகின்றன. சிலர் திட்டமிட்டு உங்களை முடக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று சந்கேப்பதில் தவறில்லை.ஆனாலும் கவலைப்பட வேண்டாம். அடுத்த சில நாட்களில் அனைத்தும் தெளிவாகிவிடும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21): உங்களை அவ்வளாவு எளிதாக உரிமை கொண்டாட முடியாது என்பதை குடும்ப உறவுகளும், கூட்டாளர்களும் உணரத் தொடங்குவார்கள். போதுமான அளவு கொடுக்கப்பட்டுவிட்டது. இனிமேல் உங்களை நீங்களே பாதிக்க வேண்டாம்:
மிதுனம் (மே 22 – ஜூன் 21): பிறர் கருத்துக்களை கூர்ந்து கவனிக்கும் தன்மை கொண்டவர். ஆனால், தற்போது மற்றவர்கள் கூறும் கருத்துக்கள் நியாயமற்றதாகவும், தவறானதாகவும் தோன்றலாம். எல்லாம் சரியாகிவிடும். சிலர் சத்தங்களை எழுப்ப விரும்புகிறார்கள் என்று கடந்து செல்லுங்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23): தற்போதைய நிலையைப் பாதுகாக்க முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். பணியிடங்களில் விழிப்புணர்வுடன் நடந்து கொள்வது நல்லது
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23): உங்களுக்கான உரிமைகள் ஏன் ஒரு பிரச்சினையாகவே மாறுகிறது? (அல்லது) உங்கள் வாழ்கையில் ஏன் நெறிமுறை கேள்விகள் மிகவும் முக்கியமானதாக உள்ளது? என்ற கேள்வி எப்போதாவது உங்களிடத்தில் எழுந்ததுண்டா? .... எதுவும் கடந்து போகும். மாறுப்பட்ட அணுகுமுறை உங்களை வலுப்படுத்தும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : பிரச்சனைகளுக்கு தீர்வை கண்டறிவதற்கான நம்பிக்கையையும், மன தைரியத்தையும் வெளிபடுத்த தொடங்குவீர்கள். பணத்தை அள்ளி வீசுவதன் மூலம் இன்றைய பிரச்சினைகள் தீர்க்கப்படலாம். எனினும், நீங்கள் முதலில் சரியான இலக்கைக் கண்டுபிடிக்க வேண்டும்!
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : வரவிருக்கும் நாட்களில் புதிய புதிய விஷயங்கள் குறித்துப் பேசத் தொடங்குகள். புதிய அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் அன்பு, தியாகம், அமைதி ஆகியவற்றையே முன்னிலைப் படுத்துங்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) : உணவு பழக்கவழக்கங்களில் மாற்றம் கொண்டுவருவது நல்லது. உடற்பயிற்சி குறித்த புரிதல் வேண்டும். எதிலும் அலட்சியம் வேண்டாம். நினைவில் கொள்ளுங்கள் - உங்களுக்கு ஒரே உடல் மட்டுமே உள்ளது!
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : சிறப்புத்தன்மைகள் நிறைந்த உங்களது தனித்துவ பண்புகள் மூலம் இன்றைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணுங்கள். மற்றவர்கள் வாழ்வினில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி எடுங்கள். குழந்தைகளுடன் கூடுதல் நேரங்களை செலவு செய்யுங்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) : சரியான பாதையில் செல்கிறோமா? சரியான பாதையில் செல்லவில்லையா? என்ற மேம்போக்கான கேள்வியைத் தாண்டி, தற்போதைய செயல்பாடுகளில் எது அதிக நன்மைத் தரும் என்று சிந்திக்க தொடங்குகள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) : இளமை, உற்சாகம், ஆற்றல், திறமை, வல்லமை, கனவு, மகிழ்ச்சி, நம்பிக்கை போன்ற சொற்களால் உங்கள் வாழ்க்கை அழகாகப்போகிறது.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : வழக்கத்தை விட சற்று உணர்ச்சிவச நிலையில் உள்ளீர்கள். வெளிப்படையாக சொன்னால், நிதி ஆதாரங்களில் போதிய கவனம் செலுத்த தொடங்குகள். பணத்தை சேமிக்க தொடங்குகள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.