Rasi Palan 11th March 2021: இன்றைய ராசிபலன்

இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

rasi palan , today rasi palan, daily rasi palan, இன்றைய ராசிபலன், மார்ச் 11ம் தேதி,

Today Rasi Palan, 11th March 2021 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 11th March 2021: இன்றைய ராசி பலன், மார்ச் 11, 2021

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : எதற்கும் காரணம் சொல்லி பழகாதீர்கள். சோர்வை உயனர்ந்தாலும், கடமைகளை செய்ய முழுமனதுடன் பணியாற்ற வேண்டும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்படவேண்டும்

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21): சில உண்மைகளை தனிப்பட்டதாக வைத்திருப்பதை கருத்தில் கொள்ள வேண்டும். உங்களைப் பற்றிய சிலவற்ற மற்றவர்கள் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு சரியான பதில் கிடையாது. உங்களைப் பற்றி மற்றவர்களிடம் சில எதிர்பார்ப்பை ஏற்படுத்த தொடங்குகள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21): வெளிப்டையாக சொன்னால், நேசமான மனதை வெளிபடுத்தும் நாளாக அமையும். பணியிடங்களில் கூட அனைவரையும் உள்ளடக்கிய குழுப்பணிக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள். உங்கள் மீதான நம்பிக்கை மற்றவர்களிடத்தில் அதிகரிக்கும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23): உற்சாகம் நிறைந்த ஒரு மனிதன் மிகவும் பலசாலியாக விளங்குகிறான் உற்சாகத்தை விடப்பெரிய விஷயம் வேறொன்றுமில்லை, Positivity மற்றும் உற்சாகம் மேலிடும் ஒருவரால் எதையும் சாதிக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள தொடங்குவீர்கள். தொழில்முறை பயணங்கள் வெற்றியில் முடியும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23): ஆழ்ந்த தார்மீக கேள்விகளில் இருந்து விடைபெற்று கொண்டு, பயணத்தின் மீது உங்கள் கவனத்தைத் திருப்புங்கள் . இது ஒரு ஆன்மீக பயணமாக இருக்கலாம். எதையும், திறந்த மனதுடன் எதிர்கொள்வது நல்லது. எதுவும் சுகமான அனுபவமாக அமையும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : நிதி விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவதுடன நல்லது. வரும் நாட்களில் முதலீடு செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. தொழில் வாழ்க்கையில் எர்முகத்தை காண்பீர்கள்!

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : உங்கள் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கான நேரம் இது.
புறக்கணித்த சிலரிடம் இருந்தும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளன. நட்பு வட்தாரத்தை அதிகப்படுத்துங்கள். மனதில் சிறப்பான தாக்கத்தை, ஆக்கப்பூர்வமான பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வுகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) : உஷாராக இருக்க வேண்டிய நாள். உங்கள் இலக்குகளை அடைய போராட வேண்டியிருக்கும். பொறுமையும் அமைதியும் தேவை. வெற்றிக்கான நாள் வெகு தொலைவில் இல்லை. நிதிநிலைமை கையை சுடும். அதிலும் கவனம் தேவை.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : நிச்சயமற்ற தன்மை நிலவினாலும், விரைவில் அந்த நிலை மாறும். வரவேண்டிய கடன்கள் திரும்ப வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் உடல்நலத்தில் அக்கறை தேவை.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) : சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். இதனால், கடினமான பணிகளையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். யாருக்காகவும் மற்றவர்களிடம் வாக்கு கொடுக்க வேண்டாம்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) : வெற்றி தான் உங்கள் இலக்கு. அதற்காக எப்பேற்பட்ட தடைகள் வந்தாலும் உடைத்தெறியும் ஆற்றல் உங்களிடம் இருக்கும். பெரிதாக வெற்றி கிட்டவில்லை என்றாலும், சோடை போக மாட்டீர்கள். குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : பொறுமை தேவை. பண வரவில் சுணக்கம் இருந்தாலும், அதை சமாளிக்கும் வாய்ப்புகள் இந்த தினத்தில் கிடைக்கும். குடும்ப ஒற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். பணி நிமித்தம் அழுத்தம் இருந்தாலும், குடும்பத்தை கவனியுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Horoscope news here. You can also read all the Horoscope news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Today rasi palan 11th march 2021 rasi palan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com