Rasi Palan February 12th 2021: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 12th February 2021: இன்றைய ராசி பலன், பிப்ரவரி 12ம் தேதி 2021
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : மகிழ்ச்சி எப்போதும் உணர்ச்சி சிக்கல்களிலிருந்து வெளியேவர வழியை வழங்குகிறது. இதை, சிலர் ஒப்புக் கொள்ளலாம், பலர் ஒப்புக் கொள்ளாமலும் இருக்கலாம். சில தனிப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள இது சரியான நேரமா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும் .
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : சாதகமான சூழல்கள் உருவாகும். குடும்ப உறவினர்களின் ஆதரவுகள் அதிகரிக்கும். போட்டியாளர்கள் ஒரு கை பார்ப்பீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) : கொஞ்சம் சோர்வாகவும் பதட்டமாகவும் இருக்கலாம். ஆனால், இதில் ஆச்சரியப்படுவதற்கோ, ஆராய்வதற்கோ ஒன்றுமேயில்லை . உங்கள் ஆற்றல் ஏற்கனவே புத்துயிர் பெறத் தொடங்கியுள்ளது. ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குள் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும். அனைத்து வகைகளிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) : வீட்டிலும், பணி இடங்களிலும் பல கேள்விகளை சந்திக்க நேரிடும். நல்ல அதிர்ஷ்டம் கிட்டும். வரக்கூடிய இன்னல்களை சிறந்த முறையில் கையாள்வீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) : உங்கள் பயணத்தில் சிறிய பின்னடைவை சந்திருக்கலாம், ஆனால் இலக்குகளை எட்டுவதற்கான கடும் முயற்சியை கைவிட வேண்டாம். எல்லாவற்றிற்கும் மேலாக பொறுப்புகளை மறந்து விடாதீர்கள். புரிதல் கிடைக்கும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23): தேவையற்ற குழப்பங்களை தவிர்க்கு முன்வாருங்கள். உங்கள் வாழ்கையின் இதுவரையிலான நீண்ட பயணத்தை திரும்பி பாருக்னால். நீங்கள் இருக்கும் இடத்தை எவ்வாறு அடைந்தீர்கள் என்பதை நீங்கள் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : தீர்வுகளுக்கு பதில் இல்லாமல் இல்லை. அணுகுமுறையில் மாற்றம் செய்வதினால் மாற்றம் உண்டாகலாம். வாழ்கையில், நீண்ட காலத் திட்டம் வடிவமைப்பதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும் .
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) : எதிர்காலம் குறித்த அச்சங்களை புரிந்து கொள்ள முடிகிறது. எவ்வாறாயினும், சில குறுகிய கால நன்மைகளையும் பாராட்ட முன்வர வேண்டும். சந்திரனின் சாதமகமான பார்வை வலிமையைக் கொடுக்கும். விரைவில் வெற்றி கிட்டும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : பிறரிடம் அன்பையும், கருணையையும் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வது தான் தற்போது முக்கியமானதாக தோன்றுகிறது. நட்பு வட்டாரங்களை பெருக்கி கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முன் வாருங்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20): ஒரு பகுதியில் வாழ்க்கை சரியாக செல்லத் தொடங்குகையில், நீங்கள் இன்னொரு பகுதிக்கு தள்ளப்படலாம். இது, இயற்கையின் விதியாகும். இந்த அடிப்படை விதியை நீங்கள் புரிந்து கொள்ள மறுத்து விட்டீர்களானால், யார் உங்களுக்கு உதவ வருவார்கள்? சற்றே கற்பனை செய்து பாருங்கள். சிந்தித்து செயல்படத் தொடங்குகள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) : பிரிவுகள் தற்காலிக மானதுதான். மந்தநிலை அடிமட்டத்தை எட்டிவிட்டது. அமைதியான மனநிலை உருவாகும். ஒரு கதவு மூடப்பட்டால், மற்றொரு கதவு இறுதியில் திறக்கப்பட வேண்டும்.
மீனம் (பிப். 20 – மார்ச் 20) : வீட்டிலும் பணியிடத்திலும் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. பழகும் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்வாருங்கள். பெரிய நிறுவனத்தில் பணி செய்ய அழைக்கப்படலாம், எனவே தயாராக இருங்கள்!