Rasi Palan 13th March 2021: இன்றைய ராசிபலன்

rasi palan news : இன்றைய ராசி பலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Rasi palan, daily rasi palan,

Today Rasi Palan, 13th March 2021 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 13th March 2021: இன்றைய ராசி பலன், மார்ச் 13, 2021

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : விடாமுயற்சியுடன் கூடிய கடின உழைப்பு, திட்டமிடல் மற்றும் உறுதி ஆகியவற்றால் வெற்றி காண்பீர்கள். உணர்வுகள் குறிப்பிடத்தக்க வகையில் ஆதிக்கம் செலுத்தும். உணர்வுகள் பல்வேறு கூறுகளின் தொகுப்பை தாண்டிய விஷயம் என்பதை உணரத் தொடங்குவீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : அன்புக்குரியவர்களின் நம்பிக்கையை காப்பற்றுங்கள். பிறரின் எண்ண ஓட்டங்களை புரிந்து கொள்வது ஒரு அரிய வகை கலையாகும். மற்றவர்களை முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டாம். அடிப்படை அனுதாபங்களுடன் நிகழ்வுகளை பார்க்கத் தொடங்குகள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21) : உங்கள் வாழ்கையில் தற்போது தான் ரகசியம் முக்கியத்துவம் பெறுகிறது. உணர்வுகளை மனதுக்குள் பூட்டி வைத்திருக்க விரும்புகிறீர்கள். இனம் புரியாத மர்ம உங்கள் உணர்ச்சி நிலைத்தன்மையையும், வாழ்க்கை முறையையும் ருசிகரமாக்கும். அனுவக்கித் தொடங்குகள். வாழ்த்துக்கள்!

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) : அன்றாட வாழ்வியலை நீங்கள் உடனடியாக புதுப்பிக்க வேண்டும். வாழக்கையில் விளையாட்டு, யோகா அல்லது ஏதாவது உடற்பயிற்சி ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) : பணியிடங்களில் கூடுதல் முக்கியத்துவம் பெறுவீர்கள். சமூகமயமாக்கலுக்கு தயாராகுங்கள். நட்பு வட்டாரத்தை பெரிதாக்கி கொள்ளுங்கள். அங்கீகாரமும், நிலையும் உங்கள் காதல் வாழ்க்கையில் சில குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : தொடர்ச்சியான வணிக நடவடிக்கைகள் சோர்வை ஏற்படுத்தலாம். வரும் நாட்களில் பொருளாதார சூழல் பழைய நிலைக்கு வரும். முன்னேற்றம் காண்பீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : அன்புக்குரியவர்களுக்கு விருப்பமான பரிசை வழங்குங்கள். இளையதலைமுறையினருக்குத் தேவையான ஆதரவும் உதவியும் அளிக்க முன்வாருங்கள். நற்செய்தியைப் பரப்புங்கள், அதைப் பற்றி பேசத் தொடங்குகள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) : நம்பிக்கையும் , உண்மையும் ஒருங்கே காணப்படும் விருச்சக ராசிக்கு முதலில் நன்றியை உரித்தாக்குங்கள். அடுத்த சில நாட்களில், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு மதிப்புமிக்க ஆதரவை வழங்க வேண்டியிருக்கும். அவர்கள் சில அழுத்தங்களை சந்திக்க வேண்டியிருக்கும். கடினமான நேரத்தில் நீங்கள் கொடுக்கும் ஆதரவு கரங்கள் வாழ் நாள் முழுவதும் பேசப்படும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22): பணியிடங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடுமபத்தில் முழு ஈடுபாடுடன் நடந்து கொள்வீர்கள். மற்றவர்களின் உதவியை கேட்காமல் பெறுவீர்கள்

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) : குடும்பத்தில் குழப்பம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள். அற்பமான விஷயங்கள் பூதாகரமாக மாறலாம். மோதல் போக்கை விட்டொழிப்பது நல்லது. சில விசயங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்கள் என்பதற்கும் உண்மையில் அது எப்படி இருந்து கொண்டிருக்கிறது என்பதற்குமான இடைவெளி அதிகரிப்பதை உணருவீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) : பொழுதுபோக்கு அம்சங்கள் நம்பிக்கையைத் தரும். குடும்ப சந்திப்புகள் எதிர்பார்த்ததை விட இனிமையானதாக இருக்கும். பணியிடங்களில் ஊதிய உயர்வு கிடைக்கும் அல்லது அதற்கான சாத்தியக் கூறுகள் தென்படும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : விஷயங்கள் கொஞ்சம் தாமதமாக நகர்ந்தாலும், உங்களால் எதையும் வேகப்படுத்த முடியாது என்பதை மனதில் கொள்ளுங்கள். சமூக நிகழ்வுகள், காதல் , தொழில்முறை இலக்குகளை ஒத்திவைக்க முடியும் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Horoscope news here. You can also read all the Horoscope news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Today rasi palan 13th march saturdday morning tamil rasi palan

Next Story
Rasi Palan 11th March 2021: இன்றைய ராசிபலன்rasi palan , today rasi palan, daily rasi palan, இன்றைய ராசிபலன், மார்ச் 11ம் தேதி,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express