Rasi Palan 14th July 2021: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 14th July 2021: இன்றைய ராசி பலன், ஜூலை 14ம் தேதி 2021
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :
புளூட்டோவின் நிலை வணிக விவகாரங்கள் தொடர்பாக மாற்றம் வருகிறது என்பதற்கான சாதகமான அறிகுறியாக இருக்கிறது. ராசிபலனின் நன்மை என்னவென்றால், முதலீடுகளை எவ்வாறு கவனித்துக்கொள்வது என்பதை உங்களுக்கு அறிவுறுத்துகிறது. குறிப்பாக உங்களுடைய பணம் தவிர வேறு நபர்களின் பணம் சம்பந்தப்பட்டிருந்தால் முதலீடுகளை கவனித்துக் கொள்வது பற்றி அறிவுறுத்துகிறது. அதனால், உறுதியான சூழல் திரும்பும் வரை நீங்கள் காத்திருங்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :
இன்றைய நுட்பமான கிரக சீரமைப்பு முற்றிலும் கவனிக்கப்படாமல் போகும் என்பது மிகவும் கற்பனைக்குரியது. ஆனாலும், சக்திவாய்ந்த, உணர்ச்சிபூர்வமான அடித்தளங்கள் எளிதில் மேலே வரக்கூடும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். புத்திசாலித்தனமான ரிஷப ராசிக்காரர்கள் விரைவாக முன்கூட்டியே பிரச்னையை தீர்ப்பீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) :
நீங்கள் நினைப்பது போல் நீங்கள் ஒருபோதும் நம்பிக்கையுடன் இல்லை. மற்றவர்களை ஊக்குவிக்கும் பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சிக்கான அக்கறையால் உங்கள் நடத்தை எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறது என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். குறிப்பாக இன்றைய அசாதாரண, புதிரான கிரக சீரமைப்புகளின் பார்வையில் உங்கள் நடத்தை எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :
உண்மைக்கும் கற்பனைக்கும் இடையில் வேறுபடுத்துவதில் உங்களுக்கு சிரமம் இருப்பதாகத் தெரிகிறது. இதில் கவலை என்னவென்றால், கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்கான பலனை நீங்கள் அறுவடை செய்யப் போகிறீர்கள். ஆனாலும், உங்களுக்கு ஆதரவாக யார் இருக்கிறார்கள், உங்களுக்கு எதிராக யார் இருக்கிறார்கள் என்பதை அறிவதற்கு தாமதமாகிவிடவில்லை. வேலையில் இன்னும் சில மன அழுத்தங்கள் இருக்கலாம். ஆனால், இது நிகழ்காலத்தை விட கடந்த காலத்துடன் தொடர்புடையதாகவே தெரிகிறது.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :
தற்போதைய குழப்பத்திற்கு முடிவு காண ஒரு அறிகுறியும் இல்லை. ஆனாலும், உங்கள் வாழ்க்கையின் ஒரு புதிய சுழற்சியைக் குறிக்கும் உளவியல் ரீதியாக தெளிவடையும் ஒரு முக்கிய காலகட்டத்தில் செல்கிறீர்கள் என்பதை உணர்ந்ததன் அடிப்படையில் நீங்கள் ஒரு நேர்மறையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். செவ்வாய் கிரகம் உங்கள் நிதி விவகாரங்களின் ஆதாரத்தை உண்டாக்குகிறது. எனவே, முக்கியமான கேள்விகளைக் கேட்க முயற்சி செய்யுங்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :
உங்களுக்கு நற்பெயர் இருந்தபோதிலும் நீங்கள் பெரும்பாலும் சவாலான சூழ்நிலைகளில் செழித்து வளர்கிறீர்கள். மேலும், நெருக்கடியான நிர்வாகத்தில் உங்கள் திறமையை சோதனைக்கு உட்படுத்தக்கூடிய நேரம் இது. குறைந்தபட்சம் ஒரு பழைய நண்பரின் நிவாரணம் அதிகமாக இருக்கும். இருப்பினும், இந்த விவகாரங்களில் நீங்கள் ஒருவரை மிகவும் கடினமாகத் தள்ளினால், அவர்களை வெளியே அனுப்பிவிடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :
உண்மை என்னவென்றால், ஏராளமான மக்கள் தங்கள் முதலீடுகளைப் பற்றி அக்கறை கொண்டுள்ளார்கள். ஆனால், உங்களுக்கு அறிமுகமானவர்களைப் போல இல்லாமல், உங்களுடைய நன்மைக்காக முடிவை வடிவமைப்பதற்கும், தூரத்தில் இருக்கும் இழப்புகளைத் தவிர்ப்பதற்கும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. உங்கள் கடந்தகால முயற்சிகளுக்கு கூட்டாளிகள் விரைவில் நன்றி தெரிவிப்பார்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :
சூரியனுக்கும் நெப்டியூனுக்கும் இடையிலான தற்போதைய இரட்டை கிரகநிலை உருவாக்கம் ஒரு அழகான கிரக சீரமைப்பு ஆகும். இது உங்கள் முன்னுரிமைகளை முழுமையாக மறுசீரமைப்பதற்கான வாய்ப்பை உங்களுக்குக் கொண்டுவருகிறது. இது கூட்டுறவில் வெற்றிகரமாக இறுதி முடிவெடுக்கும் வரைக்கும் மகிழ்ச்சி நீடிக்காது.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :
தற்போதைய அச்சங்களும், பயங்களும் உங்கள் மனதில் மட்டுமே உள்ளன. உண்மையில் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்பது 95% சதவீதம் உறுதியாகி உள்ளது. எனவே கூலாக இருங்கள், குழப்பமடையாதீர்கள். இல்லையெனில் மக்களை உங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு பதில் அவர்களை எரிச்சலூட்டுவீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :
உங்கள் நலன்களை உண்மையிலேயே மனதில் கொண்ட நெருங்கிய சக ஊழியர்களுக்கும் உங்களை தங்கள் சுயநல நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்துபவர்களுக்கும் இடையில் நீங்கள் எப்படியாவது வேறுப்பாட்டைப் பார்க்க வேண்டும். நீங்கள் தவறான நண்பர்களை உருவாக்கியுள்ளீர்கள் என்பதை தாமதமாகக் கண்டுபிடிப்பதை விட, புதிய நண்பர்களைச் சந்திக்கும்போது வேறுபடுத்த இது மிகவும் உதவும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :
ஒரு தெளிவான உண்மை என்னவென்றால், எதுவுமே என்றென்றும் நிலைத்திருக்காது. உங்கள் வாழ்க்கை பல முக்கியமான விஷயங்களில் சௌகரியமாக இருந்தாலும் தொழில் ரீதியானது முதல் தனியார் விவகாரங்கள் வரை அனைத்திலும் முக்கியமான மாற்றங்களைச் செய்ய நீங்கள் விரைவில் கட்டாயப்படுத்தப்படுவீர்கள். நீங்கள் அதைச் செய்யும்போது, உங்கள் வாழ்க்கையில் மிகவும் வித்தியாசமான நபர்களை ஈர்க்கத் தொடங்குவீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :
தொடர்ச்சியான எழுச்சிகள் மூலம் உங்களுக்கு உதவக்கூடிய உணர்ச்சி பாதுகாப்பை சந்திரன் வழங்குகிறது. உண்மையில், அடுத்த சில நாட்களில், உதவிக்காக உங்களிடம் முறையிடும் நண்பர்களுடன் நீங்கள் மூழ்கிவிடுவீர்கள். உதவிக்கான அனைத்து கோரிக்கைகளும் உண்மையானவை அல்ல. எனவே, நீங்கள் சில கடினமான தேர்வுகளை செய்ய வேண்டி இருக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“