Rasi Palan 16th December 2021: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 16th December 2021: இன்றைய ராசி பலன், டிசம்பர் 16ம் தேதி 2021
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :
பழைய பிரச்னைகளில் அதிக நேரம் செலவிட வேண்டாம். ஏனெனில், இந்த வார கிரக அம்சங்கள் பொதுவான அணுகுமுறையை கடைப்பிடிக்க அறிவுறுத்துகின்றன. அது கடந்த காலத்தை போனது போனதுதான் என்று ஒப்புக்கொள்வதாகும். அந்த பழைய உணர்ச்சி ரீதியான உறவுகளிலிருந்து நீங்கள் விடுபட்டவுடன், மிகவும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தலாம்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :
இது ஒப்பீட்டளவில் நேர்மையான நேரமாக இருக்க வேண்டும். ஆனால், யாரோ, எங்கோ இன்னும் கொஞ்சம் பகுத்தறிவில்லாமல் பார்க்கிறார்கள். நுண்ணுணர்வு மிக்கவர்களை மிகவும் மெண்மையாகவும் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் கையாளுங்கள். இப்போதைக்கு, நீங்கள் சந்தேகத்தின் பலனை அவர்களுக்கே அளிக்கலாம்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) :
ஒரு குறிப்பிட்ட திட்டத்தைப் பற்றி நீங்கள் குறிப்பாக ஆர்வமாக இருந்தாலும், மற்றவர்கள் முற்றிலும் மாறுபட்ட கண்களால் உலகைப் பார்க்கக்கூடும் என்பதை நினைவில் கொள்வது நல்லது. எனவே, தயக்கம் காட்டும் கூட்டாளிகளை சரிப்படுத்த முயற்சிக்காதீர்கள். ஆனால், அவர்கள் உங்களைப் நம்புவதற்கு காத்திருங்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :
தற்போதைய கேள்விகள், சிக்கல்கள் அல்லது பிரச்சனைகள் குடும்பம் அல்லது தொழில்முறை தொடர்புடையதாக இருந்தாலும், நீங்கள் வழக்கமான கடக ராசி அணுகுமுறையைப் பின்பற்றினால் உங்களுடைய நன்மையாக அமையும். திணை விதைத்தவன் திணை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழியை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :
தனிப்பட்ட முறையில் நிதி ரீதியாக, எல்லாமே தனிப்பட்ட சிந்தனைக்கான கட்டமாக இருக்கிறது இது. ஏதேனும் உங்களை தொந்தரவு செய்தால் அதற்கு காரணம் உங்கள் பாதுகாப்பைப் பற்றிய கவலைதான் அடிப்படைக் காரணமாக இருக்கும். அதனால், எங்கே எல்லாம் முடியோ அங்கே எல்லாம் உறுதிமொழியையும் ஆதரவையும் தேடுங்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :
நேற்றைய கிரக அமைப்புகள் சில சிக்கல்களை ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கும். நடப்பு விவகாரங்கள் நீங்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் விதமாக உள்ளது. கடந்த காலத்தில் நீங்கள் போதுமான உறுதியுடன் இருக்கவில்லை என்று நீங்கள் உணரலாம். ஆனால், அதை இப்போது சரி செய்யலாம்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :
யாரோ ஒருவர் பிரச்னையை வைத்திருப்பதாகத் தெரிகிறது. அனேகமாக, அது சட்டப்பூர்வ கேள்வி அல்லது வெளிநாட்டுத் தொடர்பு, அல்லது கொள்கை அடிப்படையில் கூட இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட மற்றும் சிறப்பான செயல்பாட்டில் நீங்கள் தொடர்ந்து இருந்தால் மட்டுமே உங்கள் தனிப்பட்ட இலக்குகளை அடைய முடியும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :
சில வகையான போர் அல்லது நிதி தொடர்பான சண்டை தவிர்க்க முடியாததாக தோன்றலாம். ஆனால், உண்மையில் தவிர்க்கக்கூடியது. தெளிவாகவும் நியாயமாகவும் விளையாடுவதன் மூலம் ஒரு முன்மாதிரியை வைப்பது உங்களுடையது. தயக்கத்திற்கு நேரமில்லை. உங்கள் முக்கியமான தயாரிப்புகள் அனைத்தையும் தாமதப்படுத்த எந்த காரணமும் இல்லை.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :
சில சந்தேகங்களை வளர்த்துக்கொள்ள உங்களுக்கு எல்லா காரணங்களும் உள்ளன. ஒருவேளை நீங்கள் ஏமாற்றப்பட்டிருக்கலாம். குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லது காட்டிக் கொடுக்கப்பட்டிருக்கலாம். இருப்பினும், நடவடிக்கைக்கான நேரம் கடந்துவிட்டதால், பழிவாங்கலைக் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லை. காரணம், மற்றவர்கள் நல்லெண்ணத்தில் நடந்துகொண்டிருக்கலாம்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :
இது ஒரு அரிதான மற்றும் முற்றிலும் நல்ல மகர ராசிக்காரர்களுக்கான நேரம். அவர் உணர்ச்சிகரமான நிலைமைகள் மேம்படப் போவதை இப்போது உணர முடியாது. உங்களில் மிகவும் உள்ளுணர்வு உள்ளவர்கள், மகிழ்ச்சியான சந்திப்பு உள்ளது என்பதை ஏற்கனவே உணர்ந்திருப்பீர்கள். அது வரும்போது அதை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்!
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :
பல வழிகளில் நீங்கள் முற்றிலும் சரியானவர். ஆனால், சில சமயங்களில் நீங்கள் தவறு செய்ததை ஒப்புக்கொள்ள வேண்டும். மறுபுறம், உங்கள் கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகளில் உண்மையின் ஒரு தானியத்தை விட அதிகமாக உள்ளது. எனவே, உங்களால் முடிந்தால் சமநிலையைப் பெறுங்கள். இப்போது அதை செய்!
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :
தீர்க்கமான கடினமான அம்சங்கள் இரண்டு இருந்தாலும், பொதுவான கிரக நிலை ஒப்பீட்டளவில் எளிதானது. காரணம், தாக்குதல் நடத்தும் எவரும் தவறான இலக்கைத் தாக்க நேரிடும். ஆனால், நெருங்கி வரும் உணர்ச்சிகரமான ஏவுகணையை நீங்கள் கண்டால், நீங்கள் ஏன் பணிந்து போகக்கூடாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“