Today Rasi Palan, 1st october 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 1st october 2020: இன்றைய ராசி பலன், 1st அக்டோபர், 2020 :
மேஷம் ( மார்ச் 21 – ஏப்ரல் 20) : நீங்கள் அதிக வணிக சிந்தனை கொண்டவராய் மாறி வருகீறிர்கள் . இருப்பினும், குடும்ப விவகாரங்களில் ஏற்படும் மாறுதல்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். வாழ்கையில், நல்ல தருணங்களை வெளிப்படுத்தும் சில அறிகுறிகளையும் நீங்கள் தைரியமாக நம்பலாம். உங்களது இடைவிடாத நம்பிக்கை சிறந்த வெற்றியை ஈட்டித்தரும்.
ரிஷபம் ( ஏப்ரல் 21 – மே 21) : உங்களுக்கு வரும் தகவல்கள் அனைத்தும் சூழ்நிலைக்குப் பொருத்தமில்லாத கலவையாகத் தான் இருக்கும். அக்கம்பக்கத்தினர் ஒரு விஷயத்தைச் சொல்லும் விதமும், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அதே தகவலை சொல்லும் விதமும் வெவ்வேறாக இருக்கும். சொல்ல வருவதை யாரும் உங்களிடம் சரியாகச் சொல்ல மாட்டார்கள். இது அவர்களின் தவறு அல்ல. குறும்புக் காரன் புதன் நடத்தும் சித்து விளையாட்டுகளில் இதுவம் ஒன்று.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) : மற்றவர்களின் கருத்துகளை காது குடுத்து கேட்பது மனஸ்தாபாதத்தை தவிர்க்க உதவும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். கிரகங்களின் சாதகமான பார்வையினால் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23 ) : சுற்றி நடக்கும் விசயங்களை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. எனவே, வாழ்க்கை ஏற்படுத்தி தரும் மாற்றங்களை அமைதியாக உற்றுக் கவனியுங்கள். மாற்றத்தை, ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். அடுத்த மூன்று நாட்களும் நீங்கள் இந்த மனநிலையுடன் இருப்பது மிகவும் நல்லது.
சிம்மம் ( ஜூலை 24 – ஆகஸ்ட் 23 ): இன்று பல வாய்ப்புகள் உங்களை நோக்கி வரும். லட்சியப் பாதையை நோக்கி பயணிக்கவே நீங்கள் நோக்கமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கடைசி நிமிடத்தில் நடக்கும் எதிர்பாராத திருப்பங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23 ) : தனிப்பட்ட வாழ்க்கை நிலையை மாற்றியமைக்க நீங்கள் மேற்கொண்ட நீண்ட நெடிய போராட்டம் பலனைத் தர இருக்கிறது. சொந்தமாக தனித்து இயங்க தயாராக இருந்தால், உங்களுக்கான சன்மானம் மிக விரைவில் கிடைக்கும். இது, உங்கள் தைரியத்திற்கு கிடைத்த வெகுமதி என்றும் கூறலாம்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23 ) : உங்கள் ஜாதகத்தில், உங்களது குடும்ப வாழ்க்கை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. உறவுகளையும், உணர்வுகையும் நீங்கள் நம்பவேண்டியத் தேவை உள்ளது.
விருச்சகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22 ) : சர்ச்சைக்குரிய கருத்துக்களை கேட்க தயாராக இருங்கள். உங்கள் சொந்தமான யோசனைகளை நீங்கள் முன்வைத்தால் , மிகவும் சிறந்தது. அடுத்த சில நாட்களுக்கு நண்பர்களின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் நல்லது.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 20 ): காதல் உங்கள் இதயக்கதை தட்ட முயற்சிக்கின்றது. ஆயிரம் ஆயிரம் கற்பனைகள் மத்தியல் வாழ்ந்து வருகின்றீர்கள். இருப்பினும், உங்களாது அன்றாட பணிகளில் அதிகம் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20 ): இலட்சியங்கள் ஒருபுறம் இருக்க, அடிப்படை வாழ்வாதாரங்கள உறுதி செய்வது மிகவும் நன்மையாக தெரிகிறது. உங்களது பொருளாதார சூழலை மாற்றி அமைக்க வேண்டிய சிறந்த தருணம் உருவாகியுள்ளது.
கும்பம் ( ஜனவரி 21 – பிப்ரவரி 19 ): வருத்தமளிக்கும் பழைய நிகழ்வுகள் குறித்து மனச்சோர்வு அடையாதீர்கள். அனைத்தும் ஒரு முறை திரும்பி பாருங்கள். அதில், நீங்கள் கற்றுக் கொள்ள இருப்பது ஏறலாம்.
மீனம் ( பிப்ரவரி 20 – மார்ச் 20 ): நெருங்கிய உறவுகள் எப்போதுமே அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. கனவுக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் உள்ள இடைவெளியை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எவ்வாறாயினும், அனைத்து வகையான மக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிப்பது மிகவும் நன்மை பயக்கும்.