Advertisment

Rasi Palan 20th December 2021: இன்றைய ராசிபலன்

இன்றைய ராசி பலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
New Update
Today rasi palan, daily rasipalan, rasi palan 20th December, horoscope today, daily horoscope, horoscope 2021 today, today rasi palan, November horoscope, astrology, horoscope 2021, new year horoscope, இன்றைய ராசிபலன், டிசம்பர் 20ம் தேதி ராசிபலன், இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், இன்றைய தினசரி ராசிபலன், தினசரி ராசிபலன் , மாத ராசிபலன், horoscope today, daily horoscope, horoscope 2021 today, today rashifal, November horoscope, astrology, horoscope 2021, new year horoscope, today horoscope, horoscope virgo, astrology, daily horoscope virgo, astrology today, horoscope today,scorpio, horoscope taurus, horoscope gemini, horoscope leo, horoscope cancer, horoscope libra, horoscope aquarius, leo horoscope, leo horoscope today

Rasi Palan 20th December 2021:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 20th December 2021: இன்றைய ராசி பலன், டிசம்பர் 20ம் தேதி 2021

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) 

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :

கடந்த ஒரு வருடமாக உங்களின் தொழில்முறை நம்பிக்கைகள் மற்றும் லட்சியங்கள் பற்றி நிறைய சொல்லப்பட்டுள்ளது. இப்போது உங்களில் தொழில் முன்னேற்றத்தில் திருப்தி அடைவீர்கள் என்று எதிர்பார்க்கலாம். இன்னும் அடுத்த பன்னிரெண்டு மாதங்களில் உங்கள் சமூக இலக்குகள் படிப்படியாக அடைவீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : 

உங்களுக்கு மீண்டும் ஒருமுறை கிரக நிலை சிறப்பாக சாதகமாக உள்ளது. உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி குழந்தைகளுடனான உங்கள் உறவாக உள்ளது. நீண்ட காலத்திற்கு முன்பே குடும்பத்தில் இணைப்பு பற்றிய செய்தி கூட வரலாம். மேலும், நீங்கள் தகுதியான, ஆடம்பரமான இடத்தை எதிர்பார்க்கலாம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21) : 

அடுத்த ஐந்து நாட்களுக்கு, சொத்து விற்பனை அல்லது வாங்குதல் பேரங்களில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நட்சத்திரங்கள் சூப்பராக இருக்கும். நீங்கள் ஒரு நகர்வைத் திட்டமிடவில்லை என்றால், நீங்கள் குறைவான வீட்டு முன்னேற்றங்களை அடையலாம். மேலும், குழந்தைகளுடனான உங்கள் உறவு படிப்படியாக மேம்படும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :

பொதுவாக காலம் நம்பிக்கையுடன் உள்ளது. இருப்பினும், எப்போதும் போல, உங்கள் நம்பிக்கைகள் மிக அதிகமாக உயர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது. உங்கள் யோசனைகளை முன்னோக்கி நகர்த்தி, உங்கள் திட்டங்கள் சிறப்பானவை என்று கூட்டாளிகளை வற்புறுத்த முயற்சி செய்யுங்கள். இல்லையெனில், குறைந்தபட்சம், ஒரு மாத காலம் தாமதத்தை சந்திக்க நேரிடும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :

உங்கள் கடின உழைப்பும் முயற்சியும் நிதி ரீதியாக வெகுமதி அளிக்கப்படும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். அனேகமாக, கூடுதல் வருவாயின் விளைவாக கூடுதல் சேமிப்பு இருக்கலாம். இன்று அதிர்ஷ்டம் இல்லாம போகலாம், ஆனால், உங்கள் முயற்சிகள் 6 நாட்களுக்குள் பலனளிப்பதை நீங்கள் பார்க்கலாம்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : 

நெப்டியூனில் இருந்து புளூட்டோவிற்கு செல்லும் வழியில் சூரியன் வியாழனை சந்திக்கும் போது, ​​வாழ்க்கை ஆச்சரியமாக இருக்கும். நீங்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறீர்கள் என்பதை முழுமையாகப் பாராட்ட, உங்கள் பார்வையை வழக்கமான துரதிர்ஷ்டத்திலிருந்து உயர்த்த வேண்டும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : 

நீங்கள் இப்போது முக்கியமான கேள்விகளை புதிய வெளிச்சத்தில் பார்க்க வேண்டும். இது ஆச்சரியமாக இருக்கலாம், இல்லாமலும் போகலாம். நீங்கள் சொல்வது சரி என்று மக்களை நம்ப வைப்பது எளிதானதில்லை. என்றாலும், நீங்கள் தயவு செய்து பலமாக முயற்சி செய்ய வேண்டும். அப்படி செய்தால், நல்வர்களாக இருப்பீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :

உங்களுக்கு விளக்குவதற்கு கடினமான விஷயங்கள் நிறைய நடக்கிறது. இருப்பினும், குழப்பத்தில் சிக்கி தத்தளிப்பதற்குப் பதிலாக, தற்போதைக்கு அனைத்து தெளிவற்ற மற்றும் குழப்பமான கேள்விகளை ஒரு பக்கத்தில் விட்டுவிடுமாறு நான் பரிந்துரைக்கிறேன். அதன் மூலம் ஆன்மீக விஷயங்களில் கவனம் செலுத்த நீங்கள் தாராளமாக இருப்பீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : 

அடுத்த ஆறு நாட்களுக்கு உங்கள் கிரகங்கள் ஒரு முடிவைச் சுட்டிக் காட்டுகின்றன: உங்களின் கடந்தகால தொழில் மற்றும் நிதி முயற்சிகள் மற்றும் போராட்டங்கள் அனைத்தும் மதிப்புக்குரியவை என்பதைக் காட்டும் வகையில் விரைவில் வெகுமதி அளிக்கப்படும். நீங்கள் ஒரு நிதி வளர்ச்சியை அடையப்போவதாகத் தெரிகிறது.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :

நீங்கள் மற்றவர்களிடமிருந்து பெறுவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால், இதை பொருள் அர்த்தத்தில் எடுத்துக்கொள்லாதீர்கள். உதாரணமாக, உங்கள் நம்பிக்கை, தைரியத்துடன் உங்களுக்குத் தெரிந்தவற்றில் உறுதிப்பாட்டின் அடிப்படையில் பிடிப்புடன் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :

நிதி விவகாரங்கள் அடிப்படையில் மர்மமானவை மற்றும் விளக்க முடியாதவையாக இருக்கும் என்று நீங்கள் மட்டும் நம்பவ்வில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். இருப்பினும், இந்த வாரம் நீங்கள் முழுமையாக அறிந்திருக்காத முன்னேற்றங்கள் உங்கள் நலன்களுக்கு ஏற்றவை என்று நம்புங்கள். சுருக்கமாக, எதிர்காலம் உங்களுக்குச் சாதகமாக அமையும் என்பதை உறுதி செய்வதற்கான ஒரே வழி இதுதான்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : 

இன்றைய நிகழ்வில் இன்னும் ஒன்று அல்லது இரண்டு மோதல்கள் உள்ளன. ஆனால்,, கூட்டாளிகள் எரிச்சலடைவார்கள் என்றாலும், நீங்களே மிகவும் குறுகிய மனநிலையுடன் இருக்கக்கூடும். இந்த வாரம் உங்களின் புகழ்பெற்ற சகிப்புத்தன்மைக்கான நேரம். கூட்டாளிகள் எவ்வளவு நெருக்கமாக உணர்கிறார்கள் என்பதை உங்களால் மட்டுமே கணக்கிட முடியும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Horoscope Horoscope Tamil Rasipalan Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment