Rasi Palan 22nd October 2021: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 22nd October 2021: இன்றைய ராசி பலன், அக்டோபர் 22ம் தேதி 2021
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :
நீங்கள் எழுந்து நிற்க வேண்டிய நேரம் இது. கொள்கை சார்ந்த கேள்விகளுக்காக நீங்கள் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டீர்கள். ஆனால், இன்று பிரச்சினைகள் ஆழமாக இருக்கின்றன. உங்கள் தனித்துவமான செயல்களை மதிக்கப்பட வேண்டும் என்பதை அனைவருக்கும் தெளிவுபடுத்த வேண்டும். அதில் உறுதியாக இருங்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :
உங்கள் குடும்ப விவகாரங்களை தொந்தரவு செய்யும் வகையில் கிரக நிலைகள் உள்ளன.சில நிகழ்வுகள் உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாக இருப்பதால், நிலைமையை சரிசெய்ய உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யலாம். நீங்கள் முதலில் செய்ய வேண்டியது உங்கள் நடவடிககி சரியானது என்று கூட்டாளிகளை நம்ப வைக்க வேண்டும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) :
உன்னதமான மிதுன ராசிக்காரர்களின் நல்ல குணங்கள் இன்று தேவையானதாக இருக்கிறது. குறிப்பாக தர்க்கரீதியான கசப்புகளை, குழப்பமான சூழ்நிலைகளை, உண்மைகளை எதிர்கொள்ளும் உணர்வு இல்லாத மக்களின் தற்போதைய சூழ்நிலைகள் அதற்கான திறன் உள்ளதாக உள்ளன.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :
பணத்தைப் பற்றி அதிகம் கவலைப்படாதீர்கள் - நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் ஒரு சிறிய இலாபம் ஈட்டும் வரை, எவ்வளவு சிறியதாக இருந்தாலும், மோசமாக எதுவும் நடக்காது. கடந்த கால நினைவுகள் தற்போதைய மனநிலை உங்களை சில சுவாரஸ்யமான காதல் பாதைகளில் அழைத்துச் செல்கிறது. நீங்கள் ஒரு உணர்வுபூர்வமான பயணத்தை அனுபவிக்கலாம்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :
கிரகங்கள் தங்களுக்கு கிடைத்த அனைத்தையும் கொண்டு உங்களைத் தாக்குகின்றன. அதாவதது, உங்களால் முடிந்ததைச் செய்வதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை! இப்போது தயக்கத்தால் உங்கள் பிடியில் இருந்து ஒரு தனிப்பட்ட வாய்ப்பு நழுவுவதையும் காணலாம். ஆனால், நினைவில் கொள்ளுங்கள், யாராவது எதிரியை விட சிறந்த கூட்டாளியாக இருந்தால், அவர்களை உங்கள் பக்கம் அழைத்துச் செல்லுங்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :
நீங்கள் இன்னும் ரகசிய முன்னேற்றங்களை அனுபவிக்கிறீர்கள். பெரும்பாலானவை முற்றிலும் பாதிப்பில்லாதவையாக இருக்க வேண்டும். உங்கள் இருப்பின் மர்மமான ஆன்மீகத் தன்மையைப் பற்றி யோசிப்பதில் இருந்து நீங்கள் விரைவில் அற்புதமான ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு இன்று ஈகோ தேவையானதாக இருக்கலாம்!
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :
உங்கள் ராசி மண்டல அமைப்புகள் இப்போது தீவிரமடையத் தொடங்கியுள்ளன. ஒன்று அல்லது இரண்டு ஆற்றல்மிக்க நபர்கள் உங்கள் வாழ்க்கையில் இருக்கலாம். நீங்கள் அடிப்படை உணர்ச்சியில் இருப்பதை உணரலாம். உண்மையில் உங்கள் பாதுகாப்பு குறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் உங்கள் நிலையை பாதுகாக்க சாதாரண நடவடிக்கைகளை எடுக்கலாம்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :
உங்கள் தொழில்முறை அக்கறைகள் அல்லது நம்பிக்கைகள் வலுவாக இருக்கலாம் அல்லது கூட்டாளிகளின் ஆதிக்கம் இருக்கலாம். இருப்பினும், குடும்பம் அல்லது வீட்டு பிரச்னைகள் எவ்வளவு அழுத்தமாக இருந்தாலும் நீங்கள் ஒதுக்கி வைக்க வேண்டியிருக்கும். உண்மையில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய நீங்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்வீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :
பொதுவாக இன்றைய மனநிலை கடினமானதாகவும் மற்றும் கணிக்க முடியாததாகவும் இருக்கிறது. நீங்கள் அதிக சுய திருப்தியை நோக்கி தள்ளப்படுவீர்கள். அது முக்கியமானது. ஏனென்றால், உங்கள் நோக்கங்களைப் புரிந்துகொண்டவுடன் நீங்கள் சரியான ஏற்பாடுகளைச் செய்வீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :
உங்கள் வாழ்க்கை இன்னும் பரபரப்பாக இருக்கிறது. பிரச்சினைகள் மீண்டும் பணம் பற்றியதாக மட்டும் உள்ளன. உங்களுக்கு போதுமான அளவு பணம் கிடைத்ததா? உங்களுக்கு இன்னும் பணம் தேவையா? அப்படியானால், எதற்காக பணம் தேவை? என்ற கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள். எல்லாமே ஆழ்ந்த நடைமுறை சிக்கல்கள், நீண்டகால முடிவுகளை பாதிக்கும். மேலும் உங்கள் காதல் ஆசைகளை பொறுத்துகொள்ளுங்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :
தயவுசெய்து தனிப்பட்ட போட்டிகளை ஒரு பக்கம் ஒதுக்கி வையுங்கள். இல்லையெனில் நீங்கள் வருத்தப்பட வேண்டிய ஒன்றைச் சொல்வீர்கள் அல்லது செய்வீர்கள். அதனால், ஒரு கன்னத்தில் அறைந்தாலும் மறு கண்ணத்தைக் காட்டி உங்கள் எதிரிகளை மன்னிக்கலாம். நீங்கள் ஒரு தன்னலமற்ற போக்கை எடுத்தால், நீங்கள் எதிர்பாராத இடத்தில் இருந்து மரியாதை பெறுவீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :
அனேகமாக நீங்கள் உணரத் தவறியது என்னவென்றால், உங்களுடைய உறுதியான நுண்ணுணர்வுதான். தனிப்பட்ட அவமதிப்புகள் அல்லது தாக்குதல்கள் இருந்தாலும் உங்களை முற்றிலும் குற்றமற்ற அப்பாவியாக விளக்குகிறது. மற்றவர்கள் குற்றம் செய்திருக்கிறார்கள் என்று உறுதியாக தெரிந்தாலும் அவர்களுக்கு சந்தேகத்தின் பலனைக் கொடுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.