/tamil-ie/media/media_files/uploads/2021/12/Rasipalan-dec-29-1.jpg)
Rasi Palan 29th December 2021: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 29th December 2021: இன்றைய ராசி பலன், டிசம்பர் 29ம் தேதி 2021
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :
உங்கள் ராசிக்கு வீனஸ் சக்திவாய்ந்த சமிக்ஞைகளை அனுப்புவது சமீபத்திய நிகழ்வுகளின் சில மோசமான விளைவுகளைத் தவிர்க்க உங்களுக்கு உதவும். இதில் உங்களுடைய முயற்சியும் பாராட்டுக்குரியது. இருப்பினும், மற்றவர்கள் உங்கள் முயற்சியைப் பார்த்து பாராட்டுவதற்கு நீங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்!
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :
உங்கள் லாபத்தை இரட்டிப்பாக்க உருவாக்கப்பட்ட ஒரு புதிய திட்டத்தில் கூட்டாளிகள் மற்றும் பங்குதாரர்கள் உங்களுடைய ஆர்வத்தை தூண்டுவார்கள். அதனால், உங்கள் ஆர்வம் காரணமாக வணிக விவகாரங்களில் அதிக கவனம் தேவை. நீங்கள் வேலையில் உள்ள விஷயங்களை விரைவாக கொண்டு வர முடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) :
தொழில்முறை நிகழ்வுகள் நிச்சயமாக ஒரு உயர்வை கொண்டுள்ளன. வீட்டு வேலைகள்கூட சமீபத்திய மாதங்களைவிட மிகவும் குறைவாகவே இருக்கும். உதவிகரமான கிரக தாக்கங்களை மூலதனமாக்குங்கள். உங்கள் நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், முக்கியமாக உங்கள் படைப்பு சக்தியின் எழுச்சியை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :
சமீபத்திய வாரங்களின் ஏற்ற தாழ்வுகள் முழுவதிலும், ஒரு விஷயம் மாறாமல் உள்ளது. தற்போதைய முன்னேற்றங்களுக்குப் பின்னால் இன்னும் நிறைவாக இருக்கக்கூடிய ஒரு வாழ்க்கையை நோக்கி நகர்வதாக உள்ளது. இது உங்கள் உண்மையான திறமைகளை வெளிப்படுத்த அதிக வாய்ப்பை வழங்கும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :
புதன் கிரகம் இன்று உங்களுடைய ராசிக்கு பல முக்கியமான சமிக்ஞைகளை அனுப்புவதால் சமீபகால கருத்து வேறுபாடுகள் மற்றும் சங்கடங்களில் இருந்து விடுதலை கிடைக்கும். அடுத்த இரண்டு வாரங்களில், உறுதியான நிலைப்பாட்டில் உடன்படிக்கைகளை வைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள். ஆனால், முதலில் நீங்கள் சில விவரங்களைத் திருத்த வேண்டும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :
உங்கள் சிந்தனைகள் மிக விரைவில் உங்கள் இருத்தலுக்கு அடிப்படையான உங்கள் வாழ்க்கையின் அத்தகையப் பகுதிகளுக்குத் திரும்பும். முன்னேற்றங்கள் செயல்படுத்தப்படுவதற்கு காத்திருக்கின்றன என்பதையும், உங்களால் மட்டுமே சரியான முயற்சிகளை எடுக்க முடியும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அதற்காக அதிகம் செலவு செய்ய வேண்டாம்!
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :
நீங்கள் ஒரு காலகட்டத்திற்குள் நுழைகிறீர்கள். அந்த கட்டம் மிகவும் அறிவார்ந்த ஆர்வத்துடன் இருக்கும். இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் அதிகமாகப் படிப்பீர்கள், கடிதங்களை எழுதுவீர்கள், சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வீர்கள். ஒரு பாடத்திட்டத்தில் இடம்பெறுவதைக்கூட சிந்திப்பீர்கள். காதலில், மிக அருகே தனிப்பட்ட இலக்குகளைப் பின்தொடர்வீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :
இப்போது சில பொதுவான பிரச்சனைகள் பாதுகாப்பாகக் கையாளப்பட்டுவிட்டதால், நீண்ட கால மற்றும் குறுகிய காலத்தில் மிகவும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள முடியும். மாநாடுகள், கூட்டங்கள் மற்றும் நேர்காணல்களில் நீங்கள் உண்மைக்கு நெருக்கமாக இருந்தால் நன்றாகச் செயல்படுவீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :
பொதுவாக, நிகழ்வுகள் உங்கள் திசையில் நகரத் தொடங்க வேண்டும். இருப்பினும், நீங்கள் நெகிழ்வாகவும் தீர்க்கமாகவும் இருக்க வேண்டும். இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் உங்கள் இலக்குகளில் உறுதியாக இருக்க வேண்டும். ஆனால், மற்றவர்களின் விருப்பங்களை எப்போதும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது எளிதான காரியம் அல்ல. சமூக ஏற்பாடுகளில் அதிக ஆற்றலைச் செலுத்துங்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :
நீங்கள் மற்றவர்களின் தேவைகளைப் பற்றி மிகவும் நுண்ணுணர்வு உடையவர் என்று சிலர் கூறுவார்கள். அடுத்த மாதம் அல்லது அதற்கு மேல் உங்கள் கூட்டாளிகளின் முணுமுணுப்பு மற்றும் புகார்களால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். ஆனால், நீங்கள் ஒவ்வொரு சூழ்நிலையையும் நல்லதாக மாற்றுவீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :
சமூகக் கண்ணோட்டத்தில் மிகவும் திருப்திகரமான ஒரு காலகட்டத்தில் நீங்கள் நுழைகிறீர்கள் என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் கடந்த காலத்தைவிட உங்கள் யோசனைகளை மிகவும் திறம்பட வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் ஒரு சட்டப்பூர்வ கேள்விக்கு ஒரு தீர்க்கமான தீர்வைப் பெறுவீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :
உங்கள் தொழில்முறை மற்றும் பிற லட்சியங்களில் கூடிய விரைவில் கவனம் செலுத்துவதன் மூலம் நிகழ்வுகளை முன்னெடுப்பீர்கள். நேர்காணல்களை ஏற்பாடு செய்வதற்கும் உங்களை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கும் இது ஒரு சிறந்த நேரம். நல்ல செய்தி வருகிறது. ஆனால், அந்த செய்தி இன்னும் வரவில்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.