Rasi Palan 29th November October 2021: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 29th November 2021: இன்றைய ராசி பலன், நவம்பர் 29ம் தேதி 2021
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :
இனிமையான சந்திரனின் இனிமையான தாக்கம் அனைத்து சாகச விஷயங்களுக்கும் சாதகமாக இருக்கும். எனவே நீங்கள் உங்களை எல்லைக்குள் வைத்துக்கொள்ளலாம். ஆனால், நீங்கள் எல்லாவற்றையும் மிகவும் நிதானமாக செய்ய வேண்டும். எல்லா வகையிலும் உங்கள் உரிமைகள் பற்றி நீங்கள் முழுமையாக அறிந்திருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :
சற்று செலவு அதிகமாக இருக்கலாம். ஆனால், உங்களால் சமாளிக்க முடியாதது எதுவும் இருக்க வாய்ப்பில்லை. குழுவாக உல்லாசப் பயணங்களை, குறிப்பாக நீண்ட தூர பயணங்களை ஏற்பாடு செய்வதற்கும் இது பொருத்தமான தருணம். அனேகமாக, இது உங்கள் கற்பனையை நிஜமாக்கும் கற்பனைப் பயணமாக இருக்கலாம்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) :
ஆர்வம் மிக்க உற்சாகமான காலம் சில நேரடி கிரக அமைப்புகளைக் கொண்டுவருகிறது. ஆனால், அவை விவேகமான, நுட்பமான வழிகளில் அவற்றின் இருப்பை உணரவைக்கும். அது நடக்கும்போது, வழக்கமான கடமைகளைத் தவிர்க்க வேண்டும். புதிய விருப்பங்களைத் தேட உங்களுக்கு எண்ணற்ற வழிகள் உள்ளன.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :
உங்கள் உடல் நலனை மேம்படுத்த நீங்கள் சிறிது கூடுதல் நேரத்தை ஒதுக்க வேண்டும். இன்று நீங்கள் நிறைவாக இருந்தாலும், உங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சி முறையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :
நீங்கள் தனிப்பட்ட விஷயங்களைப் அம்பலப்படுத்தாமல் இருக்க போராடிக் கொண்டிருக்கலாம். உங்களுக்கு அன்றாட வாழ்க்கையை சரிசெய்வதில் சிரமம் இருக்கலாம் – அன்றாட சூழ்நிலைகளை மாற்றலாம். உங்கள் வேலைகளில் அணுகுமுறையை மாற்றுவதும், செயல்களில் ஆக்கப்பூர்வ உற்சாகத்துடன் செயல்படுவதுமே பிரச்னைகளில் இருந்து வெளியேறும் வழியாக இருக்கும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :
மற்றவர்கள் முன்னணியில் இருந்தால், அது மிகவும் ஆர்வத்துடன் ஊக்குவிக்கப்பட வேண்டிய வளர்ச்சி! புதிய அனுபவங்களை வைத்துக்கொண்டு அவர்கள் செல்லும் இடத்தை நீங்கள் பின்பற்றினால், எதிர்காலத்திற்கான புதிய காட்சிகளைத் திறப்பீர்கள். இருப்பினும் – மற்றவர்கள் ஒருவரையொருவர் புறம் கூறுவதை நம்பாதீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :
குறுகிய பயணங்கள், உரையாடல்கள் மற்றும் நேர்காணல்களுக்கு இது ஒரு பயனுள்ள நாள். ஆனால், மற்றவர்கள் மீது பரிதாபம் கொள்ளும் உங்கள் செயல் மிகவும் முக்கியமானது. அதாவது, அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை நீங்கள் உண்மையாகப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அப்போதுதான், நீங்கள் அவர்கள் சார்பாக முடிவெடுக்கலாம்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :
ஷாப்பிங்கிற்கு இது ஒரு மோசமான நாள் அல்ல, வழக்கம்போலவே இருக்கலாம். இருப்பினும், இதுபோன்ற சிறிய விஷயங்கள்கூட, இறுதியில் முற்றிலும் எதிர்பாராத முடிவுகளுக்கு வழிவகுக்கலாம். ஒரு சிறிய தேர்வு கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :
இன்று முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு உங்களிடம் உள்ளது. எனவே நீங்கள் சிறப்பாக செயல்படலாம். இருப்பினும், ஒவ்வொரு நல்ல வாய்ப்புக்குப் பின்னாலும், மற்றவர்களுக்கு ஒரு கடமை வருகிறது என்பதை உணருங்கள். உங்களுக்காக இப்போது நீங்கள் செய்யக்கூடிய மிகவும் பயனுள்ள விஷயம், மற்றவர்களிடம் நீங்கள் வைத்திருக்கும் கோரிக்கைகளைப் பார்த்து, உங்கள் உணர்ச்சி மனப்பான்மையை மாற்றுவதாகும். அனேகமாக, நீங்கள் எப்போதும் நியாயமாக இருக்கவில்லை.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :
எல்லாவற்றையும் அடைவதற்கு நீங்கள் தனியாக சிறிது நேரம் செலவழித்து சிந்திக்கலாம். ரகசியமாக இருப்பது அல்லது உங்கள் உணர்வுகளை உங்களுக்குள்ளே வைத்திருப்பது பற்றி வருத்தப்பட வேண்டாம். எல்லா விவாதங்களிலும், வாதங்களிலும் உங்களை வலுக்கட்டாயமாக வெளிப்படுத்துங்கள். ஆனால், அதை ஆதிக்க எண்ணம் இல்லாமல் செய்யுங்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :
கூட்டாளிகள் அல்லது நெருக்கமான நபர்களின் நலனுக்காக நீங்கள் உண்மையாக ஓடுவீர்கள் என்று கற்பனை செய்கிறார்கள். ஆனால், அவர்கள் எவ்வளவு தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இது போன்ற தவறான எதிர்பார்ப்புகளை நீங்கள் மீறுவதற்கு இது ஒரு அசாதாரணமான சக்திவாய்ந்த வாரம். விரைவில் அல்லது பின்னர், நீங்கள் சொல்வது சரிதான் என்பதை ஒரு கூட்டாளி புரிந்துகொள்வார்!
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :
உத்தரவிடும் அதிகாரத்தைக் கையிலெடுத்துக்கொள்ளுங்கள். மீன ராசிக்காரர்களாகிய நீங்கள் பொதுவாக இயல்பான தலைவராகக் கருதப்படுவதில்லை. ஆனால், உங்கள் ஆழ்ந்த திறமைகளில் ஒன்று பின்னால் இருந்து வழிநடத்தும் திறன்! இந்த விஷயத்தில் உங்கள் திறமைகள் மிகவும் நுட்பமானவை. சரியான சூழ்நிலையில் நீங்கள் விரும்பியதைச் செய்ய மற்றவர்கள் உங்களைத் தூண்டினாலே போதும் செய்துமுடிப்பீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“