Advertisment

Rasi Palan 3rd November 2021: இன்றைய ராசிபலன்

இன்றைய ராசி பலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Today rasi palan, daily rasipalan, rasi palan 3rd November, horoscope today, daily horoscope, horoscope 2021 today, today rasi palan, November horoscope, astrology, horoscope 2021, new year horoscope, இன்றைய ராசிபலன், நவம்பர் 3ம் தேதி ராசிபலன், இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், இன்றைய தினசரி ராசிபலன், தினசரி ராசிபலன் , மாத ராசிபலன், horoscope today, daily horoscope, horoscope 2021 today, today rashifal, November horoscope, astrology, horoscope 2021, new year horoscope, today horoscope, horoscope virgo, astrology, daily horoscope virgo, astrology today, horoscope today,scorpio, horoscope taurus, horoscope gemini, horoscope leo, horoscope cancer, horoscope libra, horoscope aquarius, leo horoscope, leo horoscope today

Rasi Palan 3rd November October 2021:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 3rd November 2021: இன்றைய ராசி பலன், நவம்பர் 3ம் தேதி 2021

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) 

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :

சந்திரன் இன்று மகிழ்ச்சியையும் நம்பிக்கையும் அளிக்கிறது. ஆனால் சூரியனுக்கும் நெப்டியூனுக்கும் இடையிலான பார்வை இன்னும் நம்படிமுடியாத நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நோக்கி உங்களைத் தள்ளுகிறது. உங்கள் லட்சியத் திட்டங்களை இப்போதைக்கு ரக்சியமாக வைத்திருப்பது நல்லது. குறைந்தபட்சம் நீங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வரை ரகசியமக வைத்திருங்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : 

நண்பர்களும் உறவுகளும் அவ்வப்போது உங்களுடன் ஒரு வாக்குவாதத்தை விரும்புகிறார்கள். பிரச்சனை என்னவென்றால், யாரும் தங்கள் உண்மைகளை நேராகப் புரிந்து கொள்ளவில்லை. அனேகமாக நீங்கள் கூட புரிந்துகொள்ளவில்லை. இருப்பினும், பொறுமையற்ற சக ஊழியர்களை நீங்கள் கட்டுப்படுத்தலாம். அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உண்மைகளை அவர்களுக்கு தெரிவிக்கலாம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21) : 

சந்திரன் தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்குகிறது. ஆனால், நீங்கள் அவற்றை எடுக்க வேண்டாம். இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வாக்குறுதிகளை செயல்படுத்தாமல் இருக்கலாம். முன்னெடுப்புகளைத் தொடங்க நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். நடைமுறைப் பணிகளை பிடிக்க மற்றவர்களின் அதிருப்தியை சரி செய்ய வேண்டும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :

உங்கள் வெற்றிக்கு நீங்களே பொறுப்பு. தற்போதைய ஒவ்வொரு வாய்ப்பும் ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளிலிருந்து உருவாகிறது. உங்களில் ஞாபகசக்தி உள்ளவர்கள், தற்போதைய மன அழுத்த நிலைகள் இன்னும் பின்னோக்கிச் செல்கின்றன என்பதை உணர்வீர்கள். புன்னகைத்து, சாதகமான திட்டங்களைத் தொடர வேண்டிய நேரம் இது.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :

அமைதியை நிலைநாட்டுவதே உங்கள் நோக்கம். வாக்குவாதங்கள், சச்சரவுகளை தவிர்க்கலாம். வெளிப்படையாகச் சொன்னால், சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கு அழிவை ஏற்படுத்தும் காலங்களில் ஒன்று இது. ஆனால்,அமைதியை நிறைவேற்றும் நோக்கத்துடன் தனிநபர்கள் பெரும் முன்னேற்றம் அடைவார்கள். நம்பிக்கையுடன் இருங்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : 

ஒப்பந்தங்களைச் செய்து, உங்கள் எதிர்கால செழிப்பை கட்டியெழுப்பவும், உங்கள் சொந்த வீட்டை உருவாக்கவும் சூரியன் உங்களுக்கு அறிவுறுத்தினாலும், புதன் உங்கள் கவனத்தை உயர்ந்த விஷயங்களில் செலுத்த உள்ளது. அது சுயநலமாக இருப்பது சரியானதா என்று உங்களை திகைக்க வைக்கிறது. அனேகமாக, நீங்கள் உங்களுக்கு உதவுவதற்கு முன் மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : 

உங்களுக்கு எது நல்லது என்று தெரிந்தால் தேர்வு உங்களுடையது. நீங்கள் பணம் மற்றும் தொழில் விஷயங்களில் கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடிப்பீர்கள். சமரசம் மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மை எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால், நீங்கள் முற்றிலும் இந்த போக்கை விட்டு தள்ளப்பட விரும்பவில்லை. நீங்கள் உண்மையில் உங்கள் வேலையை செய்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :

சில சலுகைகள் தவிர்க்க முடியாததாகத் தோன்றுகிறது. ஆனால், நீங்கள் விதிமுறைகளுக்குத் தாக்குப் பிடிக்கலாம். ஒரு வகையில், முடிவை விட உங்கள் அணுகுமுறையே அதிகமாக இருக்கும். ஏனென்றால், இந்த தற்போதைய காலகட்டம் பொருள் நன்மையை விட தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் சுய புரிதல் பற்றியதாக உள்ளது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : 

அன்புக்குரியவர்கள் அல்லது நெருக்கமானவர்கள் நியாயமற்றவர்களாக இருக்கலாம். ஆனால், உணர்ச்சி பதற்றத்திலிருந்து தப்பிக்க வழிகள் உள்ளன. நீங்கள் என்ன செய்ய முடியும், அனைத்து கருத்து வேறுபாடுகளையும் முதிர்ச்சியுடனும், அமைதியாகவும், பகுத்தறிவுடனும் கையாள்வதற்கான ஒரு முடிவை எடுப்பதுதான். உங்கள் அமைதியை ஒருபோதும் இழக்காதீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :

புதன், மனம் உள்ளிட்ட் அனைத்து வகையான தகவல்தொடர்புகளின் கிரகம். படிப்படியாக தகவல்தொடர்பு நிலையை சிறப்பாக மாற்றுகிறது. வீட்டில் இருக்கும் அந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் முக்கியத்துவம் குறைந்ததாக மாறிவிடும். உங்கள் கருத்துக்களை மற்ற தொடர்புடைய பகுதிகளில் வைப்பதை விரைவில் எளிதாகக் காண்பீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :

உங்கள் இயல்பான உள்ளுணர்வு திறன்கள் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால், அவற்றின் பலனை உணர, நீங்கள் அந்த மனக் குழப்பம் அனைத்தையும் விலக்கி, உங்கள் மனதை அமைதியாக இருக்க விடுங்கள். அப்போதுதான் உங்கள் கவனத்தை ஈர்ப்பதில் முக்கியமான விஷயங்களும் நீண்ட கால கனவுகளும் வெற்றி பெறும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : 

இது எதிர்பார்த்து காத்திருந்து கேட்பதற்கான ஒரு தருணம். முக்கிய விஷயம் என்னவென்றால், சரியான நடத்தை சரியான நேரத்தைச் சார்ந்தது. செயல்பாட்டிற்குச் செல்வது எப்போது சரியானது என்பதை நீங்கள் உள்ளுணர்வாக அறிவீர்கள். இதற்கிடையில், குடும்பப் பொறுப்புகள் மற்றும் வீட்டுக் கடமைகள் உங்களை பிஸியாக வைத்திருக்கின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Rasi Palan Tamil Horoscope Tamil Rasipalan Horoscope
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment