Rasi Palan April 7th 2021: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 7th April 2021: இன்றைய ராசி பலன், ஏப்ரல் 7ம் தேதி 2021
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :
சந்திரன் அதன் ஆதரவான நிலையைத் தொடர்கிறது. எனவே, நீங்கள் உணர்ச்சி ரீதியாக வலிமையாக உணர்வீர்கள். சட்டம், கல்வி மற்றும் பயண விஷயங்கள் அனைத்தும் பயனுடையதாக இருக்கும். ஆனால், அடிப்படை தேவை என்பது ஒழுக்க ரீதியாக தீங்கு செய்யாத தன்மையை தொடர வேண்டும். மரியாதையை சம்பாதிக்க இதுவே சிறந்த வழியாகும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :
புதிய யோசனைகள் அல்லது திட்டங்களில் நீங்கள் மிகவும் ஈடுபாடு கொண்டுள்ளீர்கள். அது உங்களை விலகி இருக்கச் செய்யும், அதனால், மற்றவர்கள் உங்களைத் தொந்தரவு செய்யாமல் தங்கள் பிரச்சினைகளைச் சரிசெய்ய கேட்பார்கள். நீங்கள் எந்த வாக்குறுதியும் அளிக்காத நபர்களுக்கு நீங்கள் கடன்பட்டிருக்க மாட்டீர்கள். எனவே தேவையற்ற உணர்ச்சி அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டாம்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) :
கூட்டாளிகளின் ஆடம்பரம் உங்கள் வேலை இல்லை. ஆனால், அவர்கள் ஆடம்பரமாக இருக்க அவர்களுக்கு உரிமை உண்டு! ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் அவர்களிடம் ஆர்வம் காட்டுவது அல்லது புறக்கணிக்கப்பது ஆகியவை தேவையற்ற குற்றத்தை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. உங்களுக்கு விதிமுறைகள் தெரியும் - நீங்கள் இப்போது மக்களுக்கு ஆதரவாக இருந்தால், பின்னர் அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :
உங்கள் வேலையில் அல்லது வழக்கமான வேலைகளில் இருந்து நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுவதாகத் தெரிகிறது. நீங்கள் ஊதியம் பெறும் வேலையில் இருக்கிறீர்களா அல்லது உள்ளுர் விவகாரங்களுடன் இணைந்திருந்திருக்கிறீர்களா என்பதை கிரக பலன் தெளிவாகவும் மற்றும் தெளிவில்லாமலும் கூறுகிறது. நீங்கள் விரும்பியதை செய்ய ஒரு கூட்டாளிக்காக சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்!
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :
சமீபத்தில் நீங்கள் ஒருவித உணர்ச்சி போராட்டத்தில் சிக்கியதாகத் தெரிகிறது. வெளிச்சத்திற்கு வர இன்னும் நிறைய இருந்தாலும் நிலைமை இப்போது தணிந்துள்ளது. உங்கள் தேடல்களைத் தொடருங்கள். உங்கள் நடத்தையை ஆராயுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுக்கு நம்பிக்கை அளித்த மக்களிடம் கருணையுடன் நடந்து கொள்ளுங்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :
தனிப்பட்ட உறவுகள் மற்றும் ஈடுபாடுகளை வலியுறுத்தும் அளவுக்கு கிரக நடவடிக்கைகள் இருப்பதால், அனைத்தும் திட்டத்தின்படிதான் செல்கிறதா என்பதைப் பார்க்க, நீன்க்கள் தேவையான முயற்சியை செய்ய வேண்டும். உங்கள் மென்மையான கவனத்திற்கு குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகள் மற்றும் அன்புக்குரியவர்கள் வரிசையில் நிற்பார்கள்!
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :
உற்சாகமான கிரக அமைப்பால் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதால், உங்கள் முழு கண்ணோட்டமும் நம்பிக்கையுடனும் நேர்மறையாகவும் இருக்க வேண்டும். விசித்திரமான காலங்களில் இதுவும் ஒன்று. நீங்கள் நல்லதை நம்பினால், நல்லது நடக்கும்! நீங்கள் ஒரு சிறந்த மற்றும் உன்னதமான முன்மாதிரியை உருவாக்கினால் முடிவுகள் இன்னும் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :
உங்களுக்கு இன்னும் சில சந்தேகங்கள் இருக்கலாம். ஆனால், அதிக நேரம் இல்லை. இப்போது ஒருவித நிதி தியாகம் தேவைப்படலாம் ஆனால், குறுகிய காலத்தில் கொஞ்சம் கூடுதல் செலவு செய்வது, நீண்ட காலத்திற்கு உங்களுடைய கூடுதல் வருவாய்க்கு உத்தரவாதம் அளிக்கும். இது எப்படி நடக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அனைத்தும் நல்ல நேரத்தில் வெளிப்படும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :
கூட்டாளிகளுக்கு வெவ்வேறு யோசனைகள் இருந்தாலும், நீங்கள் தொடர்ந்து தொடர்ந்து செயல்படலாம். விதிகளை மாற்றி இலக்கை நோக்கி நருங்கள் நீங்கள் மேலே வருவதைக் காண நீங்கள் விரும்பும் அனைத்தையும் செய்யுங்கள். தடைசெய்யப்பட்ட ஒரு பகுதி என்றால் அது நிதி, குறிப்பாக நீங்கள் மற்றவர்களின் பணத்தைக் கையாளுகிறீர்கள் என்றால் எச்சரிக்கையாக இருங்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :
இன்று அதிக நிச்சயமற்ற தன்மை உள்ளது. உங்கள் உணர்வுகளில் நீங்கள் இன்னும் உறுதியாக இல்லை. . நீங்கள் உங்கள் மனதை திடமாக்கும் வரை, எந்தவொரு கடமையும் குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும். சூழ்நிலைகள் மாறும்போது நீங்கள் ஒரு புதிய அணுகுமுறையை எடுக்க வேண்டியிருப்பதால் அவற்றை நிச்சயமாக செய்யலாம்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :
நீங்கள் முரண்பாடுகளால் ஆன ஒரு நபர். வெளியே, எல்லாமே சமூக நம்பிக்கையாக இருக்கிறது. உள்ளே, எல்லாம் காதல் கொந்தளிப்பாக உள்ளது. உங்கள் உணர்வுகள் உங்களை எங்கு அழைத்துச் சென்றாலும் அவற்றைப் பின்பற்றுவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை. ஆனால், கவனமாக அடியெடுத்து வையுங்கள். நட்பை பலப்படுத்திய இந்த காலகட்டத்திலிருந்து நீங்கள் வெளியே வர முடிந்தால், அனைத்தும் நன்றாக இருக்கும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :
எந்தவொரு தொழில்முறை கவலையும் சில ஆரம்ப நாட்களில் நடந்த நிகழ்வுகளின் தொடர்ச்சி ஆகும். இப்போது மிக முக்கியமானது உங்கள் பணியுடன் இணைக்கப்பட வேண்டியது குழு ஈடுபாடு ஆகும். ஆனால், அது உங்கள் உணர்ச்சிகரமான நல்வாழ்வையும் சமூக நம்பிக்கையையும் பாதிக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.