Advertisment

Rasi Palan 21st February 2022: இன்றைய ராசிபலன்

இன்றைய ராசி பலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
New Update
February 21st 2020 Rasipalan, Today rasi palan, daily rasipalan, rasi palan 21st February, horoscope today, daily horoscope, horoscope 2022 today, today rasi palan, astrology, horoscope 2022, new year horoscope, இன்றைய ராசிபலன், பிப்ரவரி 21ம் தேதி ராசிபலன், இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், இன்றைய தினசரி ராசிபலன், தினசரி ராசிபலன் , மாத ராசிபலன், மேஷம், ரிஷபம், கன்னி, மீனம், சிம்மம், துலாம், மிதுனம், கடகம், horoscope today, daily horoscope, horoscope 2022 today, today rashifal, astrology, horoscope 2022, new year horoscope, today horoscope, horoscope virgo, astrology, daily horoscope virgo, astrology today, horoscope today,scorpio, horoscope taurus, horoscope gemini, horoscope leo, horoscope cancer, horoscope libra, horoscope aquarius, leo horoscope, leo horoscope today

Rasi Palan 21st February 2022:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 21st February 2022: இன்றைய ராசி பலன், பிப்ரவரி 21ம் தேதி 2022

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) 

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :

நிகழ்வுகளின் வேகத்தை தீர்மானிக்கவும் சிக்கலான பிரச்சனைகளை சமாளிக்கவும் உங்களுக்கு தேவையான அனைத்து பலத்தையும் வீனஸ் உங்களுக்கு வழங்குகிறது. இது உங்கள் திட்டங்களுக்குப் பொருத்தமாக இருந்தால், நீங்கள் இப்போது, தன்னம்பிக்கை குறைவாக இருப்பவர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விரைவாக மீண்டு வருவதற்கு காத்திருக்கலாம்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : 

உங்கள் ராசியில் பல கிரக மாற்றங்கள் வரவுள்ளன. உங்களுக்கு நோய் அல்லது தொல்லை எதுவாக இருந்தாலும் அது விரைவில் தீர்க்கப்படும் என்று உறுதியாக நம்பலாம். இருப்பினும், மந்தமான சூழ்நிலையை மாற்ற உறுதியான நடவடிக்கை தேவைப்படலாம். உங்களுடைய சூழலில் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21) : 

உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சக்திகளால் நீங்கள் உந்தப்படுவதைப் போல் நீங்கள் உணர ஆரம்பித்திருக்கலாம். இன்று ஒரு உணர்ச்சிகரமான கட்டத்தை கொண்டு வர வாய்ப்புள்ளது. உங்கள் உண்மையான உணர்வுகளை மறைப்பதால் எதையும் பெற முடியாது. ஆனால், ஒருவேளை நீங்கள் அதை மறைக்க கற்றுக்கொண்டிருக்கலாம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :

தொழில்முறை வெற்றி உங்களுக்கு முக்கியமில்லை என்று பாசாங்கு செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. நீங்கள் சில கடுமையான சூழ்நிலைகளை நேருக்கு நேர் எதிர்கொள்ள இன்னும் தயாராக இருக்க வேண்டும். விளைவு எதுவாக இருந்தாலும், உங்கள் நீண்டகால நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :

கிரகங்களின் நிலையைவிட நீங்கள் ஒரு படி முன்னேறி செல்லுங்கள். உங்கள் தொழில்முறை நம்பிக்கைகள் மற்றும் லட்சியங்களில் கவனத்தை திருப்புங்கள். வரவிருக்கும் மாற்றங்களில் நீங்கள் நேரடியாக ஈடுபட்டாலும் ஈடுபடாவிட்டாலும், மிகவும் பலனளிக்கும். மேலும், இது உற்சாகமான காலகட்டமாக இருக்கலாம்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : 

இப்போது உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறப்பு அர்த்தமுள்ள கிரகமான புதன், அதன் நிலையை சரிசெய்யப் போகிறது. நீங்கள் அடிக்கடி உங்களை ஆக்கிரமித்துள்ள தனிப்பட்ட மோதல்கள் அல்லது வருத்தங்களைக் காட்டிலும் உங்கள் வாழ்க்கையின் ஒட்டுமொத்த திசையைப் பார்க்க நீங்கள் நன்றாக பின்வாங்க முயற்சிக்க வேண்டும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : 

பல முக்கியமான கிரகங்கள் உங்கள் ராசியின் மீது தங்கள் பிடியை தளர்த்தத் தொடங்கியுள்ளன. ஒரு காலத்தில் கனவாகவோ அல்லது உலகின் முடிவாகவோ தோன்றியவை இப்போது மாறுவேடத்தில் ஆசீர்வாதமாகத் தோன்றலாம். இந்த வார சந்திர நிலை சரியான போக்கிற்கு உங்களை மீண்டும் உந்தித் தள்ளும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :

பல கிரகங்கள் ஒரே நேரத்தில் தங்கள் நிலைகளை மாற்றுவது அடிக்கடி நிகழ்கிறது. மேலும், உங்கள் மனநிலை ஒரு தீவிரத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறக்கூடும். வாய்ப்புகள் குறித்து விழிப்புடன் இருப்பதும் வளரும் கிரக இணக்கத்துடன் உள்ளுணர்வுடன் இணக்கமாக இருப்பதுதான் உங்களுடைய உத்தியாக இருக்க வேண்டும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : 

கூட்டாளிகள் மேலும் மேலும் நம்பிக்கையுடன் முன்னணியில் இருப்பதாகத் தோன்றும் தற்போதைய காலகட்டம், இப்போது தீவிரமடையும். அதனால், நீங்கள் பிரிவதற்கு தயாராக இல்லை என்றால், ஒத்துழைப்பு உங்கள் முன்னுரிமையாக இருக்க வேண்டும். மேலும், நீங்கள் ஒத்துழைப்பவராக இருந்தால், நீங்கள் எதற்கு உங்களை அனுமதிக்கிறீர்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :

உங்கள் குணாதிசயத்தில், அற்புதமான நடைமுறை பக்கத்தைக் கொண்டிருப்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். மேலும், இதன் மூலம் சில ஈடுபாடுகள் தங்கள் நாளைக் கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். கடந்த கால தனிப்பட்ட தொடர்புகளுடன், அனேகமாக, உளவியல் ரீதியான ஒரு இடைவெளியை உருவாக்க இது நேரமாக இருக்கலாம்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :

ஒரு தொழில்முறை உறவு சலித்துப் போனால், நீங்கள் மட்டுமே குற்றம் சாட்ட வேண்டும் என்று தோன்றுகிறது. அனேகமாக, நீங்கள் கடந்த காலத்தை விட வீடு மற்றும் குடும்ப பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் - மேலும் உலக அழுத்தங்கள் அதிகம் தலையிட வேண்டாம் என்பது உங்களுக்கான அறிவுரையாக உள்ளது.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : 

உங்கள் திட்டங்களின் வெற்றி அல்லது தோல்விக்கு விவாதங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் முக்கியமானதாக இருக்கிற ஒரு கட்டத்தை நெருங்குகிறீர்கள். உங்கள் உள்ளுணர்வைப் பின்பற்றுவது அல்லது 'அது சரியாகத் தோன்றுவதால்' ஏதாவது செய்வது மட்டும் போதாது. நீங்கல் உண்மைகளிலிருந்து சிறிது ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Horoscope Horoscope Tamil Rasipalan Rasipalan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment