Rasi Palan 7th May 2022: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 7th May 2022: இன்றைய ராசி பலன், மே 7ம் தேதி 2022
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :
சமூக ஈடுபாடுகள் அல்லது உணர்ச்சிகரமான ரிஸ்க்களில் இருந்து விலகி இருப்பதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டியிருக்கும். இப்போது உங்களுக்கு மிகவும் பொருத்தமானது அமைதியான விவேகமான கூட்டங்கள்தான். எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் நேசிக்கப்படுவதை உணர வேண்டும். துணைவரின் நல்லெண்ணம், அனுதாபம் மற்றும் ஆதரவிலிருந்து உங்களுக்கான பலத்தைப் பெறுவீர்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :
உங்களின் ஆழ்ந்த எண்ணங்களையும் கற்பனைகளையும் குறிக்கும் புதன் கிரகம் புதிய நிலையை அடையும் நாள் இன்று. இது ராசிபலன் முறை, நீங்கள் முன்னேறுவதற்கு முன், நீங்கள் ஒரு கணம் நிதானமாக நின்று யோசித்து செயல்படுவது நல்லது. மேலும், நீங்கள் செயல்படும் விஷயங்களில் கூடுதலாக கவனம் செலுத்துவது நல்லது.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) :
தெளிவற்ற சந்தேகங்கள் மற்றும் விசித்திரமான கற்பனைகளுக்கு பெரும்பாலான மக்களை விட நீங்கள் அதிகம் ஆளாக வாய்ப்புள்ளது. இருப்பினும், இனிமேல் அனைத்து மர்மங்களும் கலையப்பட்டு உங்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். ஒரு கூட்டாளியின் எதிர்ப்பு இப்போது தணிந்துவிட்டது என்று நீங்கள் நிம்மதியாக இருக்க வேண்டும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :
உங்களுக்காக உறுதியாக செயல்படுங்கள். நீங்கள் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் மாற்றங்களை பேச வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் அனைத்தும், தனிப்பட்டதாக இருந்தாலும் அல்லது அற்பமானதாக இருந்தாலும், சில வாரங்களில் கிரக சூறாவளி மீண்டும் வேகத்தை எடுக்கும்போது, அவை நல்ல நிலையில் இருக்கும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :
செவ்வாய் கிரகத்துடன் சந்திரனின் உறவு காரணமாக குறுகிய காலத்தில் நிறைய பொருள்கள் வாங்க வேண்டியிருக்கும். துணைவரின் கருத்துகளை முழுமையான உண்மையாக நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. நீங்கள் சில தாக்கங்களை ஏற்படுத்தி, உங்கள் யோசனைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துங்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :
உங்களுக்கு நேற்றைப் போலவே இன்றும் அதே அறிவுரை பொருந்தும் – நிதானமாக உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். வேடிக்கைக்காக நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனவே, பொதுவான சுயநல மனநிலைக்கு அடிபணியாதீர்கள் அல்லது துணைவரிடம் தேவையற்ற உணர்ச்சிகரமான கோரிக்கைகளை வைக்காதீர்கள். நீங்கள் ஒரு கொள்கையின் மீது வாதிட ஆசைப்பட்டால், நின்று யோசியுங்கள்: நீங்கள் கூறுவது தவறாகக்கூட இருக்கலாம்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :
விஷயங்களைச் செய்வதற்கான உங்கள் வழக்கமான வழிகள் குறிப்பிடத்தக்க வகையில் பயனுள்ளதாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளன. துலாம் ராசிக்கரர்களுக்கான பொன்மொழி என்றால், அது ‘சமமானவர்கள் மத்தியில்முதலிடத்தில்’ இருக்க வேண்டும். ஒவ்வொருவரின் நலன்களும் மதிக்கப்படுகின்றன என்ற மாயையை நீங்கள் புத்திசாலித்தனமாக கொடுக்க முடியும். உண்மையில் நீங்கள் உங்கள் வழியில் செல்கிறீர்கள். நீங்கள் ஒரு புத்திசாலியான அனுபவசாலி.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :
மற்றவர்களைக் காட்டிலும் சமீபத்திய மனக்கசப்புகளுக்கான காரணங்களைப் பற்றி நீங்கள் நன்கு அறிந்திருப்பதாகத் தெரிகிறது. சந்திரன் உங்கள் நலன்களைப் பாதுகாக்கிறது. அது உங்களுக்கு, நுண்ணுணர்வு மிக்க விருச்சிக ராசிக்காரராக இருப்பது நல்லது என்று கூறுகிறது. நீங்கள் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றால், நீங்கள் ஒன்றை எப்படி செய்ய வேண்டும் என்பதில் முடிவெடுப்பவராக இருக்க வேண்டும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :
உணர்ச்சியின் கிரகமான சந்திரன், செயலில் மாற்றத்தின் ஆட்சியாளரான செவ்வாய் கிரகத்துடன் இணைகிறது. நீண்டகாலமாக நிறுவப்பட்ட உறவுகள் அல்லது சங்கங்கள் கூட ஏதாவது ஒரு வழியில் மாற்றியமைக்க வேண்டும். நீங்கள் மீண்டும் பழைய சூழ்நிலைக்கு திரும்ப முயற்சிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை உணர வேண்டும். நீங்கள் எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :
உங்களுடன் சிலர் இன்னும் வாதிடுவதில் உறுதியாக இருப்பதாகத் தோன்றும் அதே நேரத்தில், நீங்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் அல்லது ஒதுங்கி இருக்கலாம். எப்படியிருந்தாலும், நீங்கள் எவ்வளவு ஆன்மீக ரீதியில் முன்னேறியவர் மற்றும் முதிர்ச்சியடைந்தவர் என்பதை உங்கள் பேச்சுகள் மற்றும் செயல்களின் மூலம் நிரூபிக்க முயற்சி செய்யுங்கள். பயண நட்சத்திரங்கள் நன்றாக இருக்கிறது. உணர்வுபூர்வமான இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ளுங்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :
மற்றவர்களுக்கு பணப்பற்றாக்குறை இருப்பதால், நீங்கள் ஏன் அதிகம் செலவிட வேண்டும் என்பதற்கு நடைமுறை ரீதியான காரணம் எதுவும் இல்லை. இருப்பினும், இது ஒரு ஆடம்பரமான தருணமாக இருப்பதால், நீங்கள் பணத்தை தேவைப்படும் இடத்தில் செலவிடலாம். நீங்கள் நண்பர்களை மகிழ்விக்க வேண்டும் என்று விரும்பினால், உங்கள் திட்டங்களில் சிறிய பயணங்கள் அல்லது கூடுதல் தொலைபேசி அழைப்புகள் தேவையாக இருக்கும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :
உங்கள் நம்பிக்கையை யாரோ காட்டிக் கொடுப்பதாக நீங்கள் சந்தேகிக்கிறீர்கள், ஆனால் நீங்கள் நிலைமையை தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம். நீங்கள் மிகவும் விசுவாசமான மற்றும் உறுதியான தோழர்கள் என்றாலும், நீங்கள் பாராட்டப்படாவிட்டால், நீங்கள் நீண்ட காலம் அப்படியே இருக்கமாட்டீர்கள். நீங்கள் ஏன் அப்படியே இருக்க வேண்டும் என்பதற்கு பொருத்தமான காரணமும் இல்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“